வருடத்தில் நான்கு நவராத்திரிகள் உண்டு .அதில் தை மாத அமாவாசை முதல் 9 நாட்கள் சியாமளா நவராத்திரி கொண்டாடப்படும். அம்பாளுக்கு ராஜசியாமளா ஸ்ரீ மாதங்கி என்று பலவிதமான திருநாமங்கள் . மதங்கமா முனிவரின் மாதவப் புதல்வி அவதரித்த விசேஷமான நவராத்திரி இது. தசமஹாவித்யாக்களில் ஒன்பதாவது வித்யை இது. ஒருவருக்கு கலையோ பேச்சுத்திறனோ , கூர்மையான புத்தியோ , வித்தைகளில் மேம்பாடோ அடைய வேண்டும் என்று சொன்னால், இவளை வணங்க வேண்டும். வேத மந்திரங்களுக்கு எல்லாம் அதிதேவதையாக விளங்கு பவள். லலிதா பரமேஸ்வரியின் மந்திரியாக விளங்குபவள். இந்த அம்பி கையை போற்றும் விழா தான் சியாமளா நவராத்திரி. சரஸ்வதி தேவி யின் தாந்த்ரீக ரூபம் என்று இவளைச் சொல்வார்கள். கலை தெய்வம் என்று சொல்வார்கள். சரஸ்வதி தேவியைப் போலவே கையில் வீணையை வைத்துக் கொண்டிருப்பாள் . சாம்பலும் கருப்பும் நிறம் என்பதால் சியாமளை என்று சொல்வார்கள். தை அமாவாசையில் ஆரம்பித்து ஐந் தாவது தினமான பஞ்சமியில் திருவவதாரம் செய்ததாகச் சொல்லு வார்கள் இந்த ஒன்பது நாட்களும் வீட்டிலோ, இல்லை கோயிலிலோ, அம்பாளை சிறப்பு பூஜை செய்து வணங்குவதன் மூலமாக, எல்லாவிதமான கலைகளையும் அடையலாம். தம்பதிகள் ஒற்றுமையோடு வாழலாம். மனக் குழப்பங்கள் நீங்கி நிம்மதி பிறக்கும். சகல யோகங்களும் சித்திக்கும்.
