மேஷம்
ராசிநாதன் செவ்வாய் குடும்ப ஸ்தானத்திலேயே இருக்கிறார் .அதனால் குடும்ப ஸ்தானம் பலப்படுகிறது. சுகஸ்தானமும் பலப்பட்டு இருக்கிறது. அதனால் பொருளாதாரமும் ஆரோக்கியமும் மேம்படும். வருமானக் குறைவு இருக்காது. ஆனால் பணி மாற்றங்கள் இருக்கலாம். வேலைகள் சற்று கூடுதலாக இருக்கும். வாரத்தின் பிற்பகுதியில் இரண்டு ஏழுக்குரிய சுக்கிரன் ராசியில் நுழைவதால் பிரச்சனைகள் வழக்குகள் முதலியவை உங்கள் கட்டுக்குள் வந்து நிம்மதியைத் தரும். தொழில், உத்தியோகம், வணிகம் முதலியவை பெரிய பிரச்சனை இல்லாமல் நடக்கும். உத்தியோகத்தில் திருப்தி இருக்கும். கடன்களில் ஒரு பகுதியை முயற்சி செய்தால் அடைத்து விடலாம் .வாரத்தின் பிற்பகுதியில் சூரியன் விரயஸ்தா னத்திற்கு வருகிறார் .செலவுகள் சற்று கூடுதலாக இருக்கும். தேவையற்ற செலவுகளும் ஏற்படும். அலைச்சல்களால் உஷ்ண வியாதிகளும் பித்த வியாதிகளும் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.
சந்திராஷ்டமம் : 10.3.2023 மாலை 6.37 முதல் 13.3.23 காலை 2.18 வரை வலிமை உள்ளவர்கள் ரத்ததானம் செய்வது நல்லது செவ் வரளி பூக்களால் முருகனை வணங்குவதன் மூலம் தொல்லைகள் குறையும்.
ரிஷப ராசி
ராசிநாதன் சுக்கிரன் லாப ஸ்தானத்திலிருந்து பஞ்சம ஸ்தானத்தைப் பார்வையிடுகிறார். விருந்து கேளிக்கை வாய்ப்புகள் கிடைக்கும். வாரத்தின் பிற்பகுதியில் அவர் பன்னிரண்டாம் இடத்துக்கு வந்து சேர்ந்தாலும் அது அவருக்கு சுகமான இடம் தான். வருமானத்தில் குறைவில்லை. குடும்பத்தில் சுபகாரியங்கள் நடை பெறும். நீங்கள் எடுத்த சில வேலைகள் உங்களுக்குச் சாதகமாக அமையும். வீட்டை பராமரித்தல் மற்றும் புதிய பகுதிகளைக் கட்டுதல் நடைபெறலாம். சூரியன் குருவோடு இணையும் வாரப் பிற்பகுதியில் சில நல்ல செய்திகள் உங்களுக்கு கிடைக்கும். சந்தோஷம் அதிகரிக்கும்.
ராசியில் இருக்கும் செவ்வாய், விரையஸ்தானத்தில் இருக்கும் ராகு, இவர்களோடு சந்திரனுடைய நிலையால் அவ்வப்பொழுது மனத்தில் தேவையில்லாத அச்சங்கள், கவலைகள் ஏற்படும். உங்களால் மாற்ற முடியாத ஒரு விஷயத்தைப் பற்றி சதா சிந்தித்து கொண்டு, இருக்கும் .
சந்திராஷ்டமம்: 15.3.23 காலை 7.33 முதல் 17.3.23 காலை 10.48 வரை சந்திராஷ்டமம்
ஏதாவது ஒரு வெள்ளிக்கிழமை அன்று சுமங்கலி பூஜை செய்யுங்கள். பசியோடு உங்களிடம் யாசகம் கேட்பவர்களுக்கு உணவு பொட்டலம் வாங்கித் தாருங்கள் அல்லது பணத்தைத் தந்து உதவுங்கள்.
மிதுனம்
வாரத்தின் பிற்பகுதியில் சூரியன் தொழில் ஸ்தானத் துக்கு வந்து குருவோடு இணைகிறார். அரசாங்க காரியங்கள் சாத கமாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பதவி உயர்வு முதலிய வற்றை பெறும் வாய்ப்பு அதிகம். தேர்வுகளில் வெற்றி பெறலாம். அரசாங்க வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். ஏற்கனவே இருந்த வேலையில் இருந்து புதிய வேலையைத் தேடுபவர்களுக்கு வாய்ப்பு அதிகம். ராசிநாதன் சுகஸ்தானத்தைப் பார்வையிடுவதால் பத்திரிக்கை, விளம்பரம், தொழில்நுட்பம் முதலிய பணிகளில் இருப் பவர்கள் சிறந்த முன்னேற்றத்தை அடைவார்கள் .
புதிய சொத்துக்களை கிரையம் செய்வதில் சிறிய சிரமங்கள் ஏற்படலாம் அல்லது பிரச்சினைகள் வரலாம். வீட்டு வேலைகள் சுணக்கமாகலாம். பிள்ளைகள் விஷயத்தில் கவனம் செலுத்தவும். ஏதேனும் ஒரு பிரச்சனையால் உங்களால் பிள்ளை களுக்கோ, பிள்ளைகளால் உங்களுக்கோ மனத்துன்பம் ஏற்படலாம்..
சந்திராஷ்டமம்:17.3.23 காலை 10.18 முதல் 19.3.23 காலை 10.17 வரை சந்திராஷ்டமம்
பரிகாரம்: மாலை நேரத்தில் மகாவிஷ்ணுவினுடைய ஸ்தோத்திரங் களையும் பாடல்களையும் சொல்லுங்கள். மனத்துயரம் அகலும்.. உடல் ஊனமுற்ற ஒருவருக்கு உதவியைச் செய்யுங்கள்.
கடக ராசி
ராசி பலமடைந்தாலே எந்தப் பிரச்சினையையும் சமா ளிக்க கூடிய தைரியமும் புத்திசாலித்தனமும் கிடைக்கும். எனவே இந்த வாரத்தில் வரும் பிரச்சனையை நீங்களே சமாளித்து விடுவீர் கள். பல விஷயங்களில் உங்கள் அலட்சியமும் சோம்பேறித்தனமும் மாற வேண்டும். கணவன் மனைவி உறவுகளில் கருத்து வேற்றுமை ஏற்படாமல் அன்பான அணுகுமுறை இருக்க வேண்டும். எதிலும் ஆத்திரமோ வேகமோ படபடப்போ இருக்கக்கூடாது. சுப கிரகங்கள் மூன்றாம் இடத்தைப் பார்ப்பதால் மன உறுதியால் வெற்றி பெறு வீர்கள்.
வாரத்தின் பிற்பகுதியில் தொழில் ஸ்தானத்திற்கு வரும் சுகாதிபதி சுக்கிரன் ராகுவோடு இணைவது சரியான அமைப்பு அல்ல. தொழில் மற்றும் வணிகத்தில் பின்னடைவுகள் ஏற்படலாம். ஏமாற்றங்கள் வரலாம். தன விரயங்கள் ஏற்படலாம். அல்லது வேலை செய்பவர்களோடு வாக்குவாதங்கள் ஏற்பட்டு மன அமை தியை இழக்கலாம். முன்னெச்சரிக்கையுடன் இருக்கவும்.
பக்கத்தில் உள்ள சிவாலயங்களுக்குச் சென்று வில்வத் தால் அர்ச்சனை செய்யுங்கள். இயன்றால் சிவபுராணம் காலையில் தவறாமல் ஓதுங்கள்..
சிம்மம்
தொழில் மற்றும் ஜயாதிபதி சுக்கிரனும், குடும்ப அதிபதி புதனும் இணைந்து குடும்ப, தன ஸ்தானத்தைப் பார்ப்பதால் நிதி நிலைமை மேம்படும். வர்த்தகம், தொழில்நுட்பம் மற்றும் பத்திரிக்கை தொழிலில் உள்ளவர்களுக்கு நல்ல மாற்றங்களும் முன் னேற்றமும் ஏற்படும். சனி பகவானும் இதற்குத் துணை செய்வார். வாரத்தின் முற்பகுதியில் குடும்பத்தில் ஒரு சில மகிழ்ச்சியான சம்பவங்கள் ஏற்படலாம். அதை தக்க வைத்துக் கொள்வது உங்கள் கையில் தான் இருக்கிறது. தொடர் முயற்சியின் பலனை அறுவடை செய்யும் வாரம் இது.
வாரத்தின் பிற்பகுதியில் ராசிநாதன் அஸ்ட மஸ்தானத்திற்குப் போகிறார். ஆரோக்கியத்தில் கவனம் செலுத் தவும். அலைச்சலைக் குறைத்துக் கொள்ளவும். உடலில் உஷ்ணம் மற்றும் பித்த அவஸ்தைகள் தோன்றலாம். சிறு சிறு கட்டிகள் ஏற் படலாம். அரசாங்க காரியங்களின் தாமதம்ஏற்படலாம்..
வஸ்திரதானமும் அன்னதானமும் வளமான வாழ்க் கையைத் தரும் . சூரிய தோஷத்தைப் போக்கும். தினமும் காலை யில் நீராடி சூரிய பகவானை வணங்குங்கள். சகல சுகங்களையும் அவர் தருவார்.
கன்னி
நாக்கிலும் வாக்கிலும் கவனம் செலுத்தினால் இந்த வாரத்தை எளிதாக்கலாம். அந்த பலத்தை குரு உங்களுக்கு வழங்குவார். நீங்கள் சரியாகப் பேசினாலும் செயல்பட்டாலும் வெற்றி உங்களை நோக்கி வரும். வாரத்தின் பிற்பகுதியில் சுக்கிரன் ராசி மாறும் என்ற பொழுது, சில நல்ல மாற்றங்கள் ஏற்படும். அப்பொழுது அவர் தனஸ்தானத்தையும் பார்வையிடுவதால் பொரு ளாதார சிரமங்கள் குறையும். இழுத்தடித்த கடன்களின் ஒரு பகுதி வந்து சேரும். நீங்கள் கொடுக்க வேண்டிய கடனாக இருந்தாலும் ஒரு பகுதியை கொடுத்து விடலாம். குடும்பத்தில் இனிமை மற்றும் சந்தோஷம் அமையும்.
மனதில் தேவையில்லாத கெட்ட எண்ணங்கள் எழும். பிறரைப் பற்றி உங்களை அறியாமல் ஏதாவது பழுது சொல் வீர்கள். அது உங்களுக்கே தீங்காக அமையும். இவற்றைக் கண் காணித்து மாற்றிக் கொள்ளுங்கள்.சொன்ன சொல்லைக் காப்பாற்ற முடியாத சூழலுக்கு ஆட்பட நேரலாம் .கவனம் தேவை.
உடல் ஊனமுற்றவர்களுக்கு ஏதேனும் ஒரு உதவியைச் செய்யுங்கள் தினம் காலையில் விளக்கேற்றி வைத்து பெருமாள் படத்துக்கு துளசி மாலை சாற்றி வழிபாடு செய்யுங்கள்.
துலாம் ராசி
வாரத்தின் பிற்பகுதியில் ராசிநாதன் சுக்கிரன் உங்கள் ராசியை ஏழாம் இடத்திலிருந்து பார்க்கப் போகிறார். லாபாதிபதி சூரியன், 15ஆம் தேதி முதல், மீன ராசியில் குருவோடு இணைந்து இருக்கப் போகிறார்.அவரோடு பாக்யாதிபதி புதனும் இருக்கிறார். அரசாங்கத்தோடு தொடர்புடைய விண்ணப்பங்கள், வேலைகள், ஒப் பந்தங்கள், உங்களுக்கு சாதகமாக அமையும். வேலைக்கு தேர்வு எழு தியவர்கள் வெற்றி பெறுவார்கள். கணவன் மனைவி கருத்து வேற் றுமை நீங்கும். வீடு கட்டுதல், பழுதுபார்த்தல், புதிய இடம் வாங்கு தல் போன்ற முயற்சிகள் சாதகமாகும்.
உறவினர்களோடு மனஸ்தாபம் ஏற்படலாம். வேலை காரணமாக இடமாற்றங்கள் சிலருக்கு ஏற்படலாம். நீங்கள் இதுவரை அலட்சியப்படுத்தி இருந்த சர்க்கரை, ரத்த அழுத்தம், போன்ற உடல் நோய்கள் சற்று அதிகமாகி சிரமப்படுத்தலாம். பொருள்கள் உடைதல், தவறுதல், திருடு போதல் முதலிய நஷ்டங் கள் ஏற்படலாம் என்பதால் ஜாக்கிரதை அவசியம்.
எந்த வேலையை தொடங்குவதற்கு முன்னாலும் பூஜை அறையில் விளக்கேற்றி வைத்து, மகாலட்சுமியையும், உங்கள் தாயாரையும் (அல்லது தாயார் படத்தையும்) வணங்கித் தொடங் குங்கள். தடைகள் விலகும்.
விருச்சிக ராசி
ராசிநாதன் செவ்வாய் ராசியைப் பார்ப்பதால் ராசி பலம் பெறுகிறது. 2, 5 க்குரிய குரு பலமாக இருப்பதால் பொருளாதார விஷயங்கள் நன்றாக இருக்கும். தொழில், வணிகம், வர்த்தகம், லாபம், இவற்றில் எந்த பிரச்சனையும் இருக்காது. எல்லா விஷயங் களிலும் எச்சரிக்கையாகவும் ஜாக்கிரதையாகவும் நிதானமாகவும் இருக்கின்ற வரை, விருச்சிக ராசிக்காரர்களின் சாதகமான கிரக நிலைகள் முன்னேற்றத்தைக் கொடுக்கும். 12ல் கேது இருந்தாலும் ஆறில் உள்ள ராகு உங்களுடைய மனோரதங்களை நிறைவேற்றி வைப்பார்.
நரம்பு சம்பந்தப்பட்ட கோளாறுகள் மற்றும் ஜீரணக் கோளாறுகள் பிரச்சனை கொடுக்கலாம் என்பதால் ஆரோக்கியத்தில் கவனம் அவசியம். எதிர்பாராத பழிச்சொல், அவமானம் ஏற்படலாம் என்பதால் பேச்சிலும் செயலிலும் தேவையற்ற கருத்து வேறுபாடுகளையும், சண்டை போக்கையும் தவிர்க்கவும். இந்த விஷ யத்தில் மௌனமே மருந்து..
வீட்டிற்கு அருகே உள்ள கோயிலுக்கு, தினம் தவறாமல் மாலை நேரத்தில் செல்லுங்கள். அங்கு குறைந்தபட்சம் ஒரு அரை மணி நேரமாவது அமர்ந்து தியானம் செய்யுங்கள். மனதை சஞ்சலம் இன்றி வைத்துக் கொள்ளுங்கள்.
தனுசு ராசி
சந்திரனுடைய சாதகமான நிலையினால் இவ்வாரம் நீங்கள் சற்றும் எதிர்பாராத சில நல்ல விஷயங்கள், உங்கள் காதில் விழும். வேலை செய்யும் இடத்திலும் வியாபாரத்திலும் நல்ல வாய்ப்புகள் வரும். அதனைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். உழைத்த உழைப்புக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கும். தொழில்நுட்பத் துறையில் உள்ளவர்களுக்கு நல்ல காலம் இது. கடன்களை அடைப் பதும் புதிய கடன்களைப் பெறுவதும் எளிதாகும். அதன் மூலமாக வீடு கட்டுதல், வாகனங்களை வாங்குதல் போன்ற ஆசைகள் நிறை வேறும். வாரத்தின் இறுதியில் சூரியன் ஐந்தாம் இடத்தில் பிரவேசிக் கும் பொழுது எதிர்பாராத சில நற்செய்திகள், சந்தோஷங்கள், லாபங்கள் ஏற்படலாம்.
சூரியன், புதன்என்ற இரண்டு கிரகங்களும் இருக் கும் நிலை ஆரோக்கிய குறைவையும், அவசரமாக சில காரியங்கள் செய்து விட்டு அவஸ்தைப்படுவதையும் காட்டுகிறது .உறவினர் களிடம் விரோதம் வரலாம் . சகோதர உறவுகள் சஞ்சலப்படுத்தும். குழந்தைகள் பற்றிய குழப்பங்களும் மனக்குறையும் நீடிக்கும். பொறுமையையும் கடமையையும் துணை கொள்ள வேண்டும்..
பெருமாள் கோயிலுக்குப் போனால் கருட பகவானையும், சிவன் கோயிலுக்குப் போனால் துர்க்கையையும் மனம் உருகி பிரார்த்தனை செய்யுங்கள் தடைகளும் குழப்பங்களும் விலகி தெளிவு பிறக்கும்.
மகர ராசி
சில கிரகங்கள் வாரத்தின் பிற்பகுதியில் ராசி மாறுவதால் பலன்களிலும் சிறு மாற்றம் ஏற்படும். அவைகள் சாதகமான மாற்றங்கள் தான். உறவினர்கள் வருகை, சந்திப்பு நிகழும். குடும்பத்தோடு தெய்வ தரிசனம் செய்யும் வாய்ப்பினைப் பெறுவீர்கள். வேலை உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்த்த உதவிகளும், பதவி உயர்வு களும் கிடைக்கும். உங்கள் செயல்களுக்கு கௌரவம், அங்கீகாரம் கிடைப்பதால் மகிழ்ச்சி அடைவீர்கள். நண்பர்கள் வட்டாரம் மற்றும் தகவல் போக்குவரத்து இவைகளில் நல்ல முன்னேற்றம் உண்டு…
மகர ராசிக்காரர்களுக்கு வழி துணையாக வரு வது வைராக்கியம் மட்டும்தான் என்பதால் எதிலும் மன உறுதி யோடு இருங்கள். சூரியனும் புதனும் ராசி மாறும் பொழுது சிற்சில உறவு விரோதங்களும், உடல் அவஸ்தைகளும் ஏற்படலாம். ஆரோக் கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
கண்ணுக்குத் தெரியும்படியாக அனுமன் படத்தையோ, லட் சுமி நாராயணர் படத்தையே வைத்துக் கொள்ளுங்கள். ஒரு முடிவு எடுப்பதற்கு முன் இரண்டு நிமிடம் படத்தின் முன் நின்று வணங்கி விட்டு முடிவெடுங்கள்.
கும்பம்
வாரத்தின் பிற்பகுதியில் சுக்கிரன் ராசி மாறுகின்ற பொழுது உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். நல்ல செய்திகள் கிடைக் கும். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் மற்றும் வருமானம் கிடைக் கும் சூழல் இருக்கிறது. அதைப் பயன்படுத்திக் கொள்ளவும். குரு வின் பலத்தினால் குடும்ப உறவுகள் அன்பு கொண்டதாக இருக்கும். நிதிச் சிக்கல்கள் குறையும். அவர் லாபாதிபதி என்பதால் தொழில் மற்றும் வணிகங்கள் சிறப்பாகவே நடைபெறும். எண்ணங்களில் வலிமை கிடைக்கும். புதன், சுக்கிரன் முதலிய கிரகங்களின் அமைப்பு உங்களுக்குச் சாதகமாக இருப்பதால் இவ்வாரம் சிரமம் இல்லாத வாரமாகவே இருக்கும்.
அஷ்டம ராசி சற்று பாதித்திருப்பதால் தேவை யில்லாத பிரச்சனைகளில் தலையிட வேண்டாம். குறிப்பாக பிறர் விஷயத்தில் எந்தக் கருத்தும் கூற வேண்டாம். உடல் ஆரோக் கியத்தில் கவனம் செலுத்தவும். குறிப்பாக கொழுப்பு, உடல் எடை, சர்க்கரை, ரத்த அழுத்தம் பிரச்சனைகள் சற்று அதிகரிக்கலாம் என் பதால் உணவு, மாத்திரை, உடற்பயிற்சிகளில் கவனம் செலுத்தவும்.
கோயில்களில் ஏதேனும் உங்களால் முடிந்த பணிகள் (உழவாரப்பணி, கோயிலைச் சுத்தப்படுத்துவது போன்ற பணிகள்) நேரம் கிடைக்கும் போது செய்யவும். உங்கள் நேரம் நல்ல நேரமாக அமையும்.
மீன ராசி
சப்தமாதிபதி புதன் ராசிநாதனோடு இணைந்து ஏழாம் இடத்தைப் பார்ப்பதால் குடும்பத்தில் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும்.. கணவன் மனைவி இடையே கருத்து வேறு பாடுகள் இருந்தாலும் அவைகள் உடனுக்குடன் விலகிவிடும். இப் பொழுது சுக்கிரன் ராசியில் இருக்கிறார். வார இறுதியில் இரண்டாம் இடத்திற்குச் செல்கின்றார். இரண்டும் உங்களுக்கு சாதகமான நிலை என்பதால் பொருளாதார முன்னேற்றம் தடைபடாது .கலைஞர் கள் நல்ல வாய்ப்பினைப் பெறுவார்கள். தகவல் தொழில்நுட்ப துறை மற்றும் பத்திரிகை துறையில் பணிபுரிபவர்களுக்கு ஊதிய உயர்வு, பதவி உயர்வு புகழ் முதலிய முன்னேற்றங்கள் எதிர் பார்க்கலாம்..
வாரத்தின் இறுதியில் ஆறுக்குரிய சூரியன் ராசியில் வந்து அமர்கின்ற பொழுது செரிமான கோளாறு, பித்தம் அதிகரித்தல், தலைவலி, கண் எரிச்சல் முதலிய உபாதைகள் ஏற்படலாம் என்பதால் முன்னெச்சரிக்கை தேவை .அலைச்சலை குறைத்துக் கொள்ளவும். அரசாங்க காரியங்கள் தாமதமாகும். மூன்றில் செவ்வாய் இருப்பது ஒரு விதத்தில் நன்மை என்றாலும் சகோதர உறவுகளிடம் கவனம் தேவை என்பதையும் காட்டுகிறது..
சந்திராஷ்டமம்: 10.3.23 மாலை 6.37 முதல் 13.3.23 காலை 2.18 வரை சந்திராஷ்டமம்
வீட்டில் நுழைவதற்கு முன் நிலை வாசலின் முன் இரண்டு நிமிடம் மகாலட்சுமித் தாயாரை பிரார்த்தித்து பின் உள்ளே நுழையவும். மனமும் செயலும் தூய்மையாகி வெற்றி கிடைக்கும்.
.
