அற்புதமான வாழ்வுக்காக காத்திருக்கும் அஸ்வினி நட்சத்திர நேயர்களே, இந்த சனிப்பெயர்ச்சி உங்களுக்கு பல நல்ல வாய்ப்புகளையும் ஆற்றலையும் தரும். எப்பொழுதும் ஏதோ ஒரு புதிய விஷயத்தைத் தேடிச் சிந்தனை செய்து கொண்டே இருப்பீர்கள். அவ்வப்பொழுது தைரியம் வந்தாலும் சஞ்சலமும் சேர்ந்து வரும். புதுமைகளைச் செய்ய வேண்டும் என்ற சிந்தனையோடு களத்தில் இறங்கி நிற்கும் உங்களுக்கு சனி நல்ல வாய்ப்புகளை தருகின்றார். செவ்வாயினுடைய அவிட்ட நட்சத்திரத்தில் தான் அவர் நுழைந்திருக்கிறார் .அந்த வகையில் உங்களுக்கு எல்லா விதமான சகாயத் தையும் அவர் நிச்சயம் செய்வார். சில விஷயங்கள் தாமதமானாலும் கூட உங்களுக்கு வெற்றி வாய்ப்பை தருவதாகவே அமையும். அதற்கு உங் களுக்கு பொறுமையும் நிதானமும் தேவை. சர ராசியில் இருக்கும் அஸ் வினி நட்சத்திரக்காரரான உங்களுக்கு பாதக ராசியில் நுழையும் சனி பகவான் சில தடுமாற்றங்களையும் சறுக்கல்களையும் தரவே செய்வார். அதற்கு காரணம் அவர் மூன்றாம் பார்வையாக உங்கள் ராசியைப் பார்ப் பதும் ராசியில் ராகு பகவான் இருப்பதும் காரணம் ஆகும்..
எனவே எந்த காரியத்தைச் செய்தாலும் ஒரு முறைக்கு பலமுறை யோசனை செய்யுங்கள். உங்களை அருகில் இருந்து தவறான யோசனை சொல்லி அலைக்கழிப்பவர்களைத் தள்ளி வையுங்கள். உடலில் குறிப்பாக உங்கள் முழங்காலுக்கு கீழே சில நோய்கள் வருவதற்கு வாய்ப்பு உண்டு. ஆரோக்கியத்தை பேணுங்கள். எப்பொழுதும் இருட்டு அறையில் வெளிச்சம் இல்லாத அறைகளிலோ அமர்ந்து முடிவெடுக்காதீர்கள்.சோம்பலைத் தவிர்த்து உழைத்தால் நீங்கள் சாதனை செய்யலாம் .அலுவலக பிரச்சினைகள் அனுகூலமான சூழலைக் கொடுக்கும். உங்கள் உயர் அதி காரிகள் மகிழ்ச்சியும் ஆதரவும் தருவார்கள். உங்கள் செயல்களால் பாராட் டப்படுவீர்கள். சக ஊழியர்களை அனுசரிக்க வேண்டும். நீங்கள் விரும்பிய பதவி உயர்வு வருமான உயர்வு இந்த ஆண்டு கிடைத்துவிடும். தொழில் பொருளாதாரம் முன்னேற்றம் உண்டு .
பெண்களுக்கு
பெண்கள் தங்கள் குடும்ப பிரச்சினைகளை வெளியில் சொல்லக்கூடாது. தவறான ஆலோசனைகளை சொல்பவர்களை நம்ப கூடாது. சடார் என்று ஒரு முடிவு எடுத்து குடும்பத்தில் எந்த பிரச்சனைகளையும் உண்டாக்கி விடாதீர்கள். குழந்தைகள் விஷயத்தில் கவனம் செலுத்துங்கள்
கலைஞர்களுக்கு
கலைத்துறையினர்களுக்கு கவனம் தேவை. வருகின்ற வாய்ப்பை மிகச் சிறப்பாகப் பயன்படுத்த வேண்டும். அந்த வாய்ப்பை நீங்கள் எப்படிப் பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் பொறுத்து தான் அடுத்த வாய்ப்புகள் அமையும். காரணம் உங்களைப் பொறுத்தவரை ஒரு முறை தான் அதிர் ஷ்டம் கதவை தட்டும்.கவனமாக கெட்டியாகப் பிடித்துக் கொள் ளுங்கள்
மாணவர்களுக்கு
நல்ல மதிப்பெண்களை வாங்கி விரும்பிய துறைக்கு செல்லும் மகத்தான வாய்ப்பு உண்டு.
மதிப்பெண்கள்
இந்த சனி பெயர்ச்சி உங்களுக்கு 65 மதிப்பெண்களைத் தருகின்றது பெரும் பாலான விஷயங்கள் உங்களுக்கு சாதகமாகவே அமையும் சில தடை களையும் நீங்கள் பொறுமையுடன் சமாளித்தால் அதையும் நீங்கள் வெற்றி கரமாக மாற்றிக் கொள்ளலாம்.
பரிகாரம்
- விநாயகரை வணங்குங்கள்.
2.தினம் இந்த அபிராமி அந்தாதி பாடலை பாராயணம் செய்யுங்கள்
ஆசைக் கடலில் அகப்பட்டு, அருளற்ற அந்தகன் கைப்
பாசத்தில் அல்லற்பட இருந்தேனை, நின் பாதம் என்னும்
வாசக் கமலம் தலைமேல் வலிய வைத்து, ஆண்டு கொண்ட
நேசத்தை என் சொல்லுவேன்?- ஈசர் பாகத்து நேரிழையே.
