திரு ……………….
பிறந்த தேதி 8.10. 74 நேரம் காலை 2.28
பிறந்த இடம் ………………..
பிறந்த கிழமை: செவ்வாய் கிழமை ,தேய்பிறை சப்தமி திதி
திருவாதிரை 1ஆம் பாதம் ,மிதுன ராசி, கடக லக்னம்,
பிறக்கும் பொழுது, ராகு தசை 15 வருடம் 6 மாதம் 13 நாள் .
தற்சமயம், சனி திசை ராகு புத்தி சூரிய அந்தரம் சுக்கிரன் சூட்சுமம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இன்று காலை 10. 40க்கு உங்களுடைய பிரச்சனைகளுக்கு பிரசன்ன ஜாதகம் போட்டுப் பார்த்த பொழுது லக்னாதிபதி சந்திரன் விரயத்தில் இருக்கிறார். அது பணம் முடங்கிப் போனதையும், மன அமைதி இன்மையையும் ,அடுத்து என்ன செய்வது என்ற தவிப்பையும் காட்டுகிறது.
நோய், கடன், பகை காட்டும் கிரகமான குரு, தனது ராசியில் வலுப்பெற்று இருக்கிறார். அவரோடு லக்ன பாதகாதிபதி சுக்கிரன் இணைந்து இருக்கிறார். தனாதிபதி சூரியன் ராகுவின் பிடியில் இருக்கிறார் இவைகளெல்லாம் மூன்று விதமான துன்பத்தை காட்டுகின்றன.
1.மனைவியால் குடும்பத்தில் அமைதி இல்லாமல் இருத்தல் (அல்லது)
2.நோய்வாய்ப்படுதல் (அல்லது)
3.கடன் சுமைகள், துன்பங்கள் பழி சொல் சம்பாதித்தல்
இந்த மூன்றும் அல்லது மூன்றில் பிரத்தியேகமாக ஒன்று இருக்கும். இதுதான் பிரஸ்ன ஜாதகம் காட்டும் நிலை.
இனி ஜனன ஜாதக நிலைக்கு வருவோம்.
தற்சமயம் உங்களுக்கு கடுமையான அஷ்டமச் சனி நடந்து கொண்டிருக் கிறது.
இது கடுமையான கடன் சுமையைத் தந்து பாடாய்படுத்துகிறது.
ஒருகால் கடன்சுமை இல்லாவிட்டால் உடல்நிலையை கடுமையாக பாதிக் கும்.
ஜென்ம ஜாதகத்தில் குரு அஷ்டமத்தில் வலுப்பெற்று தனம் என்று சொல்லப்படும் 2-ஆம் இடத்தைப் பார்ப்பதால், தவறாக பொருளாதாரத்தை அனுமானித்து, தேவையில்லாத முதலீடுகளை செய்யவைத்து சிக்க வைத்திருப்பார்.
சந்திரனும் சனியும் இணைந்து உங்கள் ஆறாம் இடத்தை கடன் ரோகம் பகை என்று சொல்லப்படும் இடத்தை) பார்க்கிறார்கள்.
தற்சமயம் நடந்து வருகின்ற திசை 7,8 க்குரிய சனி திசை. அவர் விரய ஸ்தானத்தில்(12) இருந்து திசையை நடத்துகின்றார். கட்டாயம் கூட்டு தொழில் என்பது உங்களுக்கு எந்த விதத்திலும் லாபகரமானது அல்ல.
தசையும், புத்தியும் ஒற்றைப்படை ராசிகள் சார்ந்து இயங்குவதால் பொருளாதாரப் பிரச்சனைகளை நீங்கள் மிகவும் கவனமாகக் கையாண்டால் தவிர, அவைகள் பிரச்சனை தந்து கொண்டுதான் இருக்கும்.
மிக மிக ஜாக்கிரதையாக நீங்கள் திட்டமிட்டு பொருளாதார பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டும்.
11. 5. 2022 தேதிக்குள் நன்கு யோசித்து நீங்கள் முயற்சி செய்தால் ஒரு பகுதியை பெற்றுவிடலாம்.
அப்படி இல்லாவிட்டால் அடுத்த ஐந்து மாதங்கள் காத்திருக்க வேண்டி இருக்கும்.
இதை மிகவும் நீக்கு போக்காக செய்ய வேண்டும்.
தற்சமயம் குருவின் பார்வை உங்கள் லக்கினத்தின் மீது விழுவதால் உங்களுக்கு ஓரளவு தன்னம்பிக்கையும், முயற்சியும், அடுத்து என்ன செய்யலாம் என்கிற யோசனையும் வரும்.அதை கெட்டியாக பிடித்துக் கொள்ளுங்கள். தினசரி மாலை உங்கள் பூஜை அறையில் கிழக்கு நோக்கி 48 நாட்கள் ஒரு மண் அகல் விளக்கில் சுத்தமான பசு நெய்யை விட்டு ருண விமோசன ஸ்தோத்திரம் பாராயணம் பண்ணுங்கள் அல்லது கேசட்டில் ஓடவிட்டு கேளுங்கள். தினசரி காலை சூரிய உதயத்திற்கு முன் நீராடும் பொழுது ஒன்பது முறை உங்கள் கடன்கள் வசூலாகும் வேண்டும் பொருளாதாரச் சிக்கல் நீங்க வேண்டும் என்று கிழக்கு பார்த்து உங்களுக்கு நீங்களே சொல்லிக்கொண்டு பிறகு நீராடிவிட்டு பூஜை அறைக்கு சென்று அதே பிரார்த்தனையை வைக்கவும்.
வீட்டின் தெற்குப் பகுதியில் காலியாக உள்ள இடத்தில் செவ்வாய்க்கிழமை காலை 6 -7 செவ்வாய் ஹோரையில் ஏழு தீபத்தை ஏற்றி வைக்கவும்.
ஒருமுறை குலதெய்வம் கோயிலுக்கு சென்று வரவும் சனிப் பிரீதி ராகு பிரீதி அவசியம் செய்யவேண்டும்.
அருகாமையில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்கு சனிக்கிழமை ஒரு அபிஷேகம் செய்து வடைமாலை சாத்தி வழிபடுங்கள். மாலை வேளையில் சுந்தரகாண்ட புத்தகத்தில் ஒரு அத்தியாயம் படித்து வாருங்கள்.
அந்தப் பகுதியை “நஷ்ட ஜாதகம்” என்பார்கள். அதாவது இழந்ததைப் பெற்றுத் தரும் பகுதி.
இவற்றை நம்பிக்கையோடு செய்தால் ஜாதக ரீதியாக உள்ள தோசங்கள் நீங்கி உங்களுக்கு நல்வழி பிறக்கும்.நம்பிக்கையோடு செய்யுங்கள்.
