
கோயில் வாசலில் நீங்கள் செருப்பை மட்டும் கழட்டி விட்டு போகாதீர்கள். கூடவே மனதிற்குள் இருக்கும் அழுக்கையும், கோபம், போட்டி, பொறாமை போன்ற கெட்ட குணங்களையும் கழற்றி வைத்துவிட்டு செல்லுங்கள் அதை யாராவது திருடிவிட்டு போகட்டும்.
கேள்வி : வாழ்க்கையில் கற்றுக் கொள்ள வேண்டிய உயர்ந்த பாடம் எது?
பதில்: விவேகானந்தர் இதற்கு சரியான விடையை அளித்திருக்கிறார். “செயலின் பலனில் செலுத்தும் அதே அளவு கவனத்தை, அக்கறையை அந்த செயலைச் செய்கின்ற முறையிலும் செலுத்த வேண்டும்” என்பது என் வாழ்வில் நான் கற்று உயர்ந்த பாடங்களில் ஒன்று என்பது விவேகானந்தர் வாக்கு. அதை நாமும் பின்பற்றலாம். வெற்றி என்பது முக்கியம் தான் .ஆனால் அதை பெறுகின்ற வழி அதைவிட முக்கியம்.தவறான வழியில் பெற்ற வெற்றியும் தோல்வியே.சரியான வழியில் நடந்து பெற்ற தோல்வியும் .வெற்றியே.
கேள்வி சுமுகமான வாழ்க்கைக்கு எது முக்கியம்?
பதில்: நம்பிக்கை தான் முக்கியம். இந்த நம்பிக்கையை எக்காரணத்தை முன்னிட்டும் இழந்து விடக்கூடாது. இன்றைக்கு நிறைய தற்கொலைகள் நடக்கின்றன. மனதில் இனம் புரியா அச்சமும், எதிர்காலம் பற்றிய நம்பிக்கையின்மையும் தான் இதற்குக் காரணங்கள். நாம் இரண்டு இரண்டு விஷயங்களில் உறுதியாக இருக்க வேண்டும் .ஒன்று நாமே நம்பிக்கையுடன்(self confidence) இருக்க வேண்டும்.இரண்டாவதாக மற்றவர் களுக்கும் நாம் நம்பிக்கையைத் தர வேண்டும். பூரண நம்பிக்கை இல் லாமல் ஒரு அடி கூட நம்மால் எடுத்து வைக்க முடியாது. நீங்கள் இங்கிருந்து வீடு திரும்புகிறீர்கள் என்றால், வீடு அதே இடத்தில் இருக்கும் என்ற நம்பிக்கையுடன் தான் செல்கிறீர்கள். உங்களுக்கு தெரிகிறதோ இல்லையோ,உள்ளத்தில் வீடு நாம் விட்டு வந்த இடத்திலேயே இருக்கும் என்கின்ற நம்பிக்கை பூரணமாக இருக்கிறது. இந்த நிஷ்டை தான் நம் உள்ளே நேர்மறையாக(positive effect) வேலை செய்கின்றது.