சனி பகவான் என்று ஏன் பெயர் வந்தது. ‘ஶனைஶ்சர’ (மெதுவே நகர்வது) என்னும் சமக்கிருதப் பெயர் வைக்கப்பட்டு, தமிழில் சனீசுவரன் என்றாகி விட்டது.இருப்பதிலேயே இரண்டரை வருடம் ஒரு ராசியைக் கடக்க சனி எடுத்துக்கொள்கிறார்.
சனிப்பெயர்ச்சி என்றவுடன் பலரும் அச்சப்படுகின்றனர். இந்த அச்சம் தேவையற்றது. காரணம் சனி மட்டுமே ஒரு ஜாதகரின் முழுமையான பலன் களைத் தீர்மானிப்பது இல்லை. அது மட்டும் இல்லாமல் சனி தரும் பலன்கள் ஒரே அட்சத்திரம் ராசிக்கு பல்வேறு காரணங்களால் வேறு படும்.ஜாதகரின் வயது பொருத்தும் வேறுபாடும்.ஏழரைச் சனி என்பது எல் லோருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. சிலருக்கு அது பலமான பாதிப்பைத் தருகிறது. சிலருக்கு அது மிகச் சாதாரணமான பாதிப்பையே தருகிறது.
எனவே நீங்கள் சில எதிர்மறைப் பலன்களை கண்டு பயப்படத் தேவை யில்லை. அதற்கு ஏற்றவாறு உங்கள் எச்சரிக்கை உணர்வையும் முன்னேற் பாடுகளையும் அதிகப்படுத்திக் கொள்ளுங்கள். பிரார்த்தனையை அதிகப் படுத்திக் கொள்ளுங்கள்.எதையும் கவனமாகச் செய்யுங்கள். இதுதான் சனிப்பெயர்ச்சி நமக்கு தருகின்ற செய்தி. பொதுவாக சனி பெயர்ச்சி அதிக அளவு பாதிக்காமல் இருப்பதற்காக சில எளிமையான பரிகாரங்களை நம் முடைய பெரியவர்கள் பரிந்துரைத்து இருக்கிறார்கள். அந்த பரிகாரங்களை நாம் பார்ப்போம்.
1.அன்னதானம். எள் பொடி அன்னதானம் வழங்குங்கள்..ஒருவர் பசி ஆறும் போது எரியும் வயிறு குளிரும்.சனியின் கொதிப்பு பலன்கள் குளிரும்.
2.சனிக்கிழமை கை கால் ஊனம் கொண்டோர்களுக்கு உதவி செய்யுங்கள். வசதி இருப்போர் கால் ஊனம் கொண்டோர்க்கு ஊன்று கோல்,உந்து வண்டி வாங்கித் தாருங்கள்.
3.காக்கைக்கு உணவு படையுங்கள். பிதுர் ஆசிகளை பெற்றுத்தரும்.
4.கருப்பு கலந்த வஸ்திர தானம் குறிப்பாக பாடல் பெற்ற தலங்களில் செய்யுங்கள்..இதனால் உள்ளம் திடம் கொள்ளும்.காரணம் சனி பகவான் சில நேரங்களில் அவமானமான கஷ்டங்களை ஏற்படுத்துவார். ஒருவருக்கு வஸ்திரம் தருவது அவருடைய மானத்தைக் காப்பது போல. அதன் மூலமாக இந்த அவமானங்களில் இருந்து நாம் தப்பித்துக் கொள்ளும் வழி கிடைக்கும்.
5.சனிக்கிழமைநல்லெண்ணெய் தீபம் ஏற்றுங்கள் .சிவன் கோயில் சென்று ,சிவனையும் அம்பாளையும் வணங்கி விட்டு, நிறைவாக நவகிரக சன்னதியில் நல்லெண்ணெய் தீபம் போட்டு, ஒன்பது முறை வலம் வந்து வணங்குவதன் மூலம் சனி பகவானின் அருளை பெறலாம்.
6.விநாயகர் மற்றும் ஆஞ்சநேயரை வழிபாடு செய்வதன் மூலம் சனி பகவானின் அருளைப் பெறலாம். வன்னி மர பூசையும் மிகச் சிறப்பான பலனைத் தரும். இயன்ற பொழுதெல்லாம் சனியின் காயத்ரி மந்திரத்தை ஜெபம் செய்யுங்கள்.
ஓம் காகத்வஜாய வித்மஹே
கட்கஹஸ்தாய தீமஹி
தன்னோ சனிஹ் ப்ரசோதயாத்
