மிக்க மதிப்போடு பிறரையும் பார்த்து தன்னம்பிக்கையை மனதில் கொண்ட மிருகசீரிஷ நட்சத்திரக்காரர்களே, ஒருவகையில் இந்த சனி உங்களுக்கு யோகத்தை தருவதாகவே அமைந்திருக்கிறது. அதற்கு ஏற்ற வாறு சர்ப்ப கிரகங்களான ராகு பகவானின் பெயர்ச்சியும் அமைய இருக்கிறது. அதே சமயம் கேது பகவான் உங்கள் நேர் எதிரிலே அமர்வதால் நட்பு வட்டாரங்களிடமும் பொதுஜன தொடர்புகளிலும் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். வாக்குறுதிகளைத் தருகின்ற பொழுது நிதானம் அவசியம். கணவன் மனைவி கருத்து வேறுபாடுகள் வளரும் வாய்ப்பு உண்டு. அடுத்த ஒரு வருடம் குரு உங்களுக்கு விரயத்தில் அமர்வதாலும், அந்த விரயத்தை சனி பார்ப்பதாலும் ,திட்டமிடாத செலவுகள் அதிகரிக்கும் என்பதால் சேமிப்புக்களில் அதிக கவனம் செலுத்தவும், மனத் துணிச்சலோடு எதையும் சமாளித்து விடலாம் என்ற சிந்தனையும் கொண்டு மிக வேகமாக செயல்படுவீர்கள். வேகம் தவறில்லை. ஆனால் விவேகமும் அவசியம்.அரசியலில் இருப்பவர்களுக்கு நல்ல வரவேற்பும் ஆதாயமும் பதவி முதலிய அனு கூலங்களும் உண்டு. ஆனால் அதற்கு அவர்கள் முறையாக திட்டமிட்டு உழைக்க வேண்டும். பொதுவாகவே இந்த சனிப் பெயர்ச்சி உங்கள் நட்சத் திரத்திற்கு சாதகமாகவே இருக்கிறது. மருத்துவ செலவுகள் சற்று குறையும் வாய்ப்பு உண்டு. இதுவரை நீங்கள் செய்த பல்வேறு காரியங் களில் பலன் இந்த சனிப்பெயர்ச்சியால் உங்களுக்குக் கிடைக்க இருக் கிறது. உங்கள் வாக்கு வன்மையும் மற்றவர்களிடம் பழகும் விதமும் உங்களுக்கு பயன்பட வேண்டும் என்றால் நிதானத்தோடும் கவனத்தோடும் செயல்பட வேண்டும். கருத்து வேறுபாடு கொண்ட உறவுகளை கண்ணி யமாக வளைத்துக் கொள்ளுங்கள். அது உங்களுக்கு ஆதாயம். மனைவி மற்றும் தாய் முதலியவர்களுக்கு உடல் ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படும். சனி குரு பார்வை, குரு ராகு சேர்க்கை போன்ற சில விஷயங்கள் திடீர் தடைகளை ஏற்படுத்தும்.நூதனப் பிரச்சினைகளைத் தரும் என்பதால் எந்த விஷயத்திலும் கூடுதல் கவனம் தேவை.
பெண்களுக்கு
எதையும் எல்லோரிடமும் கொட்டி தீர்க்காதீர்கள். ரகசியம் என்று சொல்லி மூன்றாம் மனிதரிடம் குடும்ப விஷயத்தை பகிர்ந்து கொள்ளாதீர்கள்.
மாணவர்களுக்கு
அடுத்து இரண்டு ஆண்டுகள் உங்கள் உயர்வுக்கான நல் வாய்ப்புக்கள் காத்திருக்கின்றன. தேவையற்ற விஷயங்களை ஒதுக்கி விட்டு திட்டமிட்டு படித்தால் முன்னேற்றம் உங்களை வந்து அணைத்துக் கொள்ளும். கலைஞர்களுக்கு
சோர்வை விட்டோழியுங்கள். பெரிய அதிர்ஷ்டங்கள் இல்லாவிட்டாலும் உங்களுடைய உழைப்பு நல்வாய்ப்புக்களை அடுத்த இரண்டரை ஆண்டு களுக்கு தரக் காத்திருக்கிறது.
மதிப்பெண்கள்
இந்த சனி பெயர்ச்சி உங்களுக்கு 60 மதிப்பெண்களைத் தருகின்றது பெரும் பாலான விஷயங்கள் உங்களுக்கு சாதகமாகவே அமையும். சில தடை களையும் நீங்கள் பொறுமையுடன் சமாளித்தால் அதையும் நீங்கள் வெற்றி கரமாக மாற்றிக் கொள்ளலாம்
பரிகாரம்
1.முருகப்பெருமானை தவறாது வணங்குங்கள்
2.முதியோர்களுக்கு உங்களால் ஆன உதவியை செய்யுங்கள்
3.சிவாய நம என்ற பஞ்சாட்சர மந்திரத்தை நேரம் கிடைக்கும் போதெ ல்லாம் ஜபம் செய்யுங்கள். அது உங்களை கவசம் போல பாதுகாக்கும்.
