குடமுழுக்கு எந்த மொழியில் நடத்துவது என்பது குறித்து இப்பொழுது விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. . அதில் சைவ அன்பர் ஒருவர் தம்முடைய கருத்தைத் தெரிவித்து இருந்தார். அது வாசகர்களின் பார்வைக்காக………….
1.கும்பாபிசேகம் தமிழில் நடத்த வேண்டும். திடிரென அப்பப்ப முளைக்கும் குரல்கள். 18 சைவ ஆதினங்களில் குன்றக்குடி தவிர வேறு எந்த ஆதினமும் இதற்கு ஆதரவு கிடையாது.
2.பேரூர் ஆதினம் சித்தாந்த சைவ ஆதினம் கிடையாது. அவர்கள் லிங்காயத்து சைவர்கள். கோயிலுக்கு போய் வழி படுவது என்பது அவர்களுக்கு இரண்டாவது பட்சம்தான். நம் சைவ சித்தாந்த கொள்கைகள் வேறு அவர்கள் கொள்கைகள் வேறு. உதாரணத்திற்கு அவர்கள் கொள்கைப் படி ஆணவ மலம் என்ற ஒன்றே கிடையாது என்பார்கள். கழுத்தில் சிவலிங்கத்தை கட்டி தொங்க விட்டிருப்பார்கள். அதற்கு மட்டுமே முதலுரிமை. ஆகவே அவர்கள் தமிழில் நடத்த வேண்டும் என நம் சமயத்தைப் பற்றி கூறுவதற்கு உரிமை கிடயாது.

3.இப்போது கிடைத்துள்ள 28 சைவ ஆகமங்கள் சிவனே அருளியது. விருத்தாச்சலம்(Viruthachalam) கோயிலில் 28 ஆகம லிங்கங்கள் உள்ளன.
4.வைஷ்ணவ ஆகமங்களில்வைகானச ஆகமம் விஷ்ணுவின் அம்சமான விகனாசாச்சாரியார் என்பவரால் அருளப் பட்டது. பாஞ்சராத்ர ஆகமம் 5 இரவுகளில்முனிவருக்கு விஷ்ணுவே அருளியது.
5.ஆகமங்கள் எல்லாம் குரு சீடர் பரம்பரையில் உறவு முறையில் நமக்கு வந்து கொண்டிருக்கிறது.
எந்தந்த தேவதைகளை எவ்வாறு அழைத்து திருப்தி செய்து கோயிலில் சானித்தியம் ஏற்படுவது போன்றவைகளை ஆண்டாண்டு காலமாக தவம் செய்து இயற்கை சக்தியை இறை யருளால் உள் வாங்கி ரிஷிகளும் முனிவர்களும் நமக்களித்துள்ளார்கள்.
6.கிரியைகள் பக்தர்களுக்கு புரிய வேண்டுமானால் அந்தந்த கிரியைகள் நடக்கும் போது இந்தந்த பூஜைகளை இதற்காக செய்கிறோம் என விளக்கம் அளிக்கலாம். அடியேன் பல வருடங்களாக ஒவ்வொரு கும்பாபிசகத்திலும் அந்த விளக்கத்தைத்தான் அளித்துக் கொண்டிருக்கிறேன். அதற்காகவே சிவாச்சாரியார்கள் என்னை விரும்பி அழைத்து செல்கிறார்கள். பக்தர்களும் அதை விரும்பி கேட்கிறார்கள்.
7.தமிழில் செய்ய வேண்டும் என சொல்பவர் களும் ஆகமத்தில் என்ன கிரியைகள் சொல்லப் பட்டுள்ளது அந்த வழியில்தான் செய்கிறார்கள். தமிழில் கிரியைகள் எப்படி செய்ய வேண்டும் என எந்த முனிவர்கள், ரிஷிகளோ, திருமுறை பாடிய 27 அடியார்களோ எங்குமே சொல்லவில்லை.
8.சரி தேவாரம் பாடி நடத்தினால் மட்டும் அர்த்தம் புரிந்து விடுமா? அதற்கும் விளக்கம் கொடுக்க வேண்டும் உதாரணமாக திருமந்திரத்தில் ஒரு பாடல்.
இருட்டறை மூலையில் இருந்த குமரி
குருட்டுக் கிழவனை கூடல் குறித்துக்
குருட்டினை நீக்கி குணம் பல காட்டி
மருட்டியவனை மணம் புரிந்தாளே
இந்தப் பாடலுக்கு நேர் பொருள் எத்தனை பேருக்கு தெரியும்?
இருட்டறை என்றால் அஞ்ஞான இருள் படர்ந்த சரீரம்.
குமரி என்றால் திருவருட் சக்தி.
குருட்டுக் கிழவன் என்றால் ஞானக் கண் இல்லாத ஆன்மா.
மணம் புரிந்தாள் என்றால் தங்கினார் என பொருள்.
இந்தப் பாடலை சாதாரண ஒருவரிடம் கூறினால் தப்பாகத்தான் பொருள் படுவார்.
ஆக தமிழில் பாடி நடத்தினாலும் அர்த்தம் புரியாது.
9.தேவாரம் திருமுறைகள் மிக மிக உயர்ந்ததுதான். சந்தேகமில்லை. ஆனால் அவைகள் இறைவன் முன் பாடி கேட்ட வரத்தை கொடுப்பதற்காக அருளியவை. 63 நாயன்மார்களில் ஒருவர் வட மொழி ருத்ரம் மட்டுமே பாடி நாயன்மாராகி உள்ளார். மாணிக்க வாசகர் *வேத மொழியர் வெண்ணீற்றர்* என்றுதான் பாடுகிறார். அப்பரோ
*வட மொழியும் தென் தமிழும் மறைகள் நான்கும்* ஆனவன் என்று இரு மொழிக்கும் சமமான இடத்தை கொடுத்துப் பாடுகிறார்.
10.இறைவன் திருமணமே பிரம்மா வேதம் ஓதிதான் நடந்தது. தமிழ் வழியில் அல்ல.
தேவார திருவாசகங்களில் கும்பாபிசேகம் இந்த பாடல் படித்து இப்படி நடத்த வேண்டும் என எங்குமே கூறவில்லை.
11.*இவ்வளவு பேசுகிறவர்கள் அந்த குழுவில் உள்ளவர்களும் சரி ஏன் அற நிலையத் துறையின் கீழ் உள்ள 35000 கோயில்களிலும் ஓதுவார் மூர்த்திகளை முதலில் போடுங்கள் .* என்று ஏன் கூறவில்லை 500 கோயில்களில் கூட ஓதுவார்கள் கிடையாது.
12.மருத்துவர் கொடுக்கும் மருந்தை எப்படி மூலக் கூறுகளை ஆராயாமல் நம்பிக்கையோடு சாப்பிடுகிறோமோ அது போல் நாமும் வட மொழி மந்திரங்களை நாயன்மார்கள் வழியில் நம்பிக்கையோடுஅவற்றிற்கு சக்தி உண்டு என்ற நம்பிக்கையோடு கும்பாபிசேகம் நடத்தி அதன் வழி நடப்போம்.
சைவாகமங்களையும் , திருமுறைகளையும், நமஸ்கரித்து போற்றும் சிவ பக்தன்.




