திருக்கண்ணபுரத்தில் மாசிமகம் உற்சவம் 2025
உத்பலாவதகே திவ்யே விமானே புஷ்கரேக்ஷணம் சௌரிராஜ மஹம் வந்தே ஸதா ஸர்வாங்க ஸுந்தரம்
ஆராதனானாம் ஸர்வேஷாம் விஷ்ணோராரா தனம்பரம் தஸ்மாத் பரதரம் ப்ரோக்தம் ததியாராதனம் ந்ருப
இவர் இத்தலத்தில் உற்சவராகத் தலையில் முடியுடன் இருக்கிறார். அமாவாசையன்று உலா செல்லும் போது மட்டுமே திருமுடி தரிசனம் காண முடியும். “சவுரி” என்ற சொல்லுக்கு “முடி” என்றும், “அழகு” என்றும் பொருள்கள் உண்டு. இக்கோவிலில் ப்ரயோக சக்ரம், உபநாச்சிமாருக்கு அப்பால், இடதுபுறம் கிரீடத்துடன் ஆண்டாளும், வலதுபுறம் பெருமாள் மணந்து கொண்ட பத்மாவதி தாயர் என்ற செம்பவாடா அரசகுமாரியும் உள்ளனர். உத்சவபெருமாள் கன்னியா தானம் வாங்கக் கையேந்திய நிலையில் சேவையளிகிறார்.
திருமங்கையாழ்வாற்கு திருமந்திர உபதேசம் செய்பட்ட ஸ்தலம். விபீஷ்ண ஆழ்வாருக்கு ஸ்ரீரங்கநாதர் அருளியபடி அமாவாசை தினத்தன்று பகவான் நடைஅழகை சேவைசாதித்த ஸ்தலம்.
திருக்கண்ணபுரம் இங்கு திருமால் எட்டெழுத்து மந்திரத்தின் வடிவமாகக் கையில் முழுவதும் திரும்பிய பிரயோகச் சக்கரத்துடன் காட்சியளிக்கிறார். 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக இத்தலம் கீழைவீடு என்று சிறப்பாக அழைக்கப்பெறுகிறது.
திருமால் நீலமேகப் பெருமாள், சௌரிராஜப் பெருமாள் என்ற பெயர்களிலும், தாயார் கண்ணபுரநாயகி என்ற பெயரிலும் அருள்புரிகிறார்கள்.
நம்மாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கையாழ்வார், குலசேகர ஆழ்வார் ஆகியோர் இத்தல இறைவனை மங்களாசனம் செய்துள்ளனர்.
சரணமாகும் தனதாள் அடைந்தார் கெல்லாம் மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் அரணமைந்த மதில்சூழ் திருக்கண்ணபுரத்து தரணியாளன் தனதன்பர்க் கன்பாகுமே. ஸ்ரீ நம்மாழ்வார்.
தேவரையும் அசுரரையும் திசைகளையும் படைத்தவனே யாவரும் வந்து அடிவணங்க அரங்கநகர்த் துயின்றவனே காவிரி நல்நதி பாயும் கண்ணபுரத்து என் கருமணியே ஏவரி வெஞ்சிலைவலவா! இராகவனே! தாலேலோ. -ஸ்ரீ குலசேகர ஆழ்வார்
காட்டில் வேங்கடம் கண்ணபுரநகர் வாட்டமின்றி மகிழ்ந்துறை வாமனன் ஓட்டாரா வந்து என்கைபற்றி. தன்னொடும் கூட்டுமாகில் நீகூடிடு கூடலே!-ஸ்ரீ கோதை நாச்சியார்
மற்றும் ஓர்தெய்வம் உளதென்று இருப்பாரோடு உற்றிலேன் உற்றதும் உன்னடியார்க்கடிமை மற்றெல்லாம் பேசிலும் நின் திருவட்டெழுத்தும் கற்றுநான்கண்ணபுரத்துறையம்மானே
ஸ்ரீதிருமங்கையாழ்வார்
உன்னையும் ஓக்கலையில் கொண்டு தமிழ்மருவி உன்னொடு தங்கள் கருத்தாயின செய்து வரும் கன்னியரும் மகிழக் கண்டனர் கண்குளிரக் கற்றவர் தெற்றிவரப்பெற்ற எனக்குஅருளி மன்னுக் குறுங்குடியாய்! வெள்ளறையாய்! மதில்சூழ் சோலை மலைக்கு அரசே! கண்ணபுரத்தமுதே! என்னவலம் களைவாய்! ஆடுக செங்கீரை!ஏழுலகும் முடையாய்! ஆடுக ஆடுகவே!-ஸ்ரீ பெரியாழ்வாழ்வார்
04.03.2025 |செவ்வாய்கிழமை |அங்குரார்ப்பணம்
05.03.2025புதன்கிழமைமாசி மாதம் 21-ம் தேதி
காலை: துவஜா ரோஹனம் மாலை : திக்பந்தனம் உத்பலாவதக விமானம்
மாசி மாதம் 22-ம் தேதி 06.03.2025 வியாழக்கிழமை
காலை : தங்கப்பல்லக்கு இரவு : வெள்ளி அனுமார் வாகனம்
மாசி மாதம் 23-ம் தேதி 07.03.2025 வெள்ளிக்கிழமை
காலை : தங்கப்பல்லக்கு இரவு : வெள்ளி சேஷ வாகனம்
மாசி மாதம் 24-ம் தேதி 08.03.2025 சனிக்கிழமை
காலை : தங்கப்பல்லக்கு இரவு : தங்க கருட சேவை
மாசி மாதம் 25-ம் தேதி 09.03.2025 ஞாயிற்றுக்கிழமை
காலை : தங்கப்பல்லக்கு இரவு : தங்க சூரிய, சந்திர பிரபை
மாசி மாதம் 26-ம் தேதி 10.03.2025 திங்கட்கிழமை
காலை : தங்கப்பல்லக்கு இரவு : யானை வாகனம்
மாசி மாதம் 27-ம் தேதி 11.03.2025 செவ்வாய்கிழமை |
காலை : திருத்தேர் இரவு : புன்னைமர வாகனம்
மாசி மாதம் 28-ம் தேதி 12.03.2025 புதன்கிழமை
காலை : தங்கப்பல்லக்கில், வெண்ணைதாழி சேவை இரவு : தங்க குதிரை வாகனம்
மாசி மாதம் 29-ம் தேதி 13.03.2025 வியாழக்கிழமை
அதிகாலை : மாசி மக தீர்த்தவாரிக்கு எழுந்தருளல் மதியம் 3.00 மணிக்கு வெள்ளை மண்டபத்திலிருந்து கருடவாகனத்தில் தீர்த்தவாரிக்கு எழுந்தருளல் மாலை 5.00 மணிக்கு தீர்த்தவாரி திருக்கண்ணபுரம் சவுரிராஜப்பெருமாள் மாசிமகம் அன்று சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருமலைராஜபட்டினம் கடற்கரை சென்று தீர்த்தவாரி செய்வார்.
கொடியேற்றத்துடன் தொடங்கும் மாசிமகப் பெருவிழாவில், பக்தர்கள் கடற்கரை சென்று தீர்த்தவாரி செய்து திரும்புவார்கள். கடற்கரையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு சுவாமிகளை தரிசனம் செய்து கொள்வார்கள்.
மாசி மாதம் 30-ம் தேதி 14.03.2025 வெள்ளிக்கிழமை இரவு சந்நிதிக்கு எழுந்தருளி திருமஞ்சனம்
பங்குனி மாதம் 1-ம் தேதி | 15.03.2025 சனிக்கிழமை
மாலை 3.00 மணிக்கு புஷ்பயாகம் இரவு : உத்பலா வதக விமானம்
பங்குனி மாதம் 2-ம் தேதி 16.03.2025 ஞாயிற்றுக்கிழமை
காலை : பெரிய பெருமாள் திருமஞ்சனம் மாலை : விடையாற்றி மடவிளாகம் புறப்பாடு
பங்குனி மாதம் 3-ம் தேதி 17.03.2025 திங்கட்கிழமை
காலை பெரிய பெருமாள் திருமஞ்சனம் | இரவு: வெள்ளிரதம். பங்குனி மாதம் 4-ம் தேதி
18.03.2025 செவ்வாய்கிழமை காலை: பெரிய பெருமாள் திருமஞ்சனம் இரவு : பங்களாத்தெப்பம்’
இன்று இரவுடன் ததியாராதனை நிறைவு