பங்குனி மாதம் குருவுக்கு உரியது. உத்தர நட்சத்திரம் சூரியனுக்கு உரியது. பங்குனி மாதத்தில் சூரியனும் குருவும் இந்த ஆண்டு மீன ராசியில் ஒன்றாக இருக்கிறார்கள். அப்படிப்பட்ட தினத்தில் பங்குனி உத்திரம் கொண்டாடப்படுகிறது. 12 வது ராசியான பங்குனி மாதமும் 12-வது நட்சத்திரமான உத்தர நட்சத்திரமும் சேரும் இந்த நல்ல நாளில் முருகப்பெருமானுக்கு விரதம் இருந்து விழாக்களைக் கொண்டாடும் வழக்கம் தொன்று தொட்டு இருக்கிறது. இந்த நல்ல நாளில் முருகனுக்கு தேர் இழுப்பார்கள். அபிஷேகம் செய்வார்கள். நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். திருமால் ஆலயங்களிலும் பங்குனி உத்திரம் சிறப்பான இடத்தைப் பெறுகிறது. பங்குனி உத்திரம் கொண்டாடுவதில் இரண்டு வழிமுறைகள் ஆலயங்களில் பின்பற்றப்படுகின்றன. ஒன்று நட்சத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. ஏப்ரல் நாலாம் தேதி காலை 10:30 மணிக்கு உத்தர நட்சத்திரம் துவங்கி விடுவதால் அன்று சில இடங்களில் பங்குனி உத்திரம் கொண்டாடப்படுகிறது. ஆனால் சில ஆலயங்களில் உத்தரம் நட்சத்திரமும் பௌர்ணமியும் சேர்ந்த தினம் பங்குனி உத்திரமாகக் கொண்டாடப்படுகிறது.(5.4.23) தெய்வத் திருமணங்களுக்கு மிக முக்கியமான இந்த நாளில் பார்வதி பரமேஸ்வரர் திரு மணமும், சீதா கல்யாணமும், முருகன் தெய்வானை திருமணமும் நடை பெறுகிறது.பங்குனி உத்திர விரதத்தால் தடைபட்ட காரியங்கள் எல் லாம் நிறைவேறும் .எல்லாச் செல்வங்களும் வாழ்வில் சேரும். முருகன் தெய்வா னையை மணந்த நாளான பங்குனி உத்தரத்தன்று முருக பக்தர்கள் திருமண விரதம் இருப்பார்கள். இதன் மூலம் திருமணம் ஆகாத ஆண்களுக்கும் பெண்களுக்கும் திருமண தடைகள் விலகும். கோயில் களில் திருக்கல்யாண உற்சவங்களை இன்றைய தினம்தரிசிக்க வேண் டும். வெயில் காலம் தொடங்கி விட்டதால் பங்குனி உத்திர நன்னாளன்று தண்ணீர் பந்தல் அமைத்து நீர்மோர் வழங்குவது மிகச்சிறந்த தர்ம காரியம் ஆகும்.
