இந்த வாரம் இப்படித்தான்
(5.3.2022 முதல் 11.3.2022 வரை)
இவ்வார கிரகநிலைகள்:
ரிஷபத்தில் ராகு, விருச்சிகத்தில் கேது, மகரத்தில் செவ்வாய், சனி, சுக்கிரன், புதன்(மார்ச் 6 முதல் புதன் கும்பத்தில் பிரவேசம்) கும் பத்தில் குரு, சூரியன்,6ம் தேதி காலை 11.22 முதல் புதன்
மேஷம்
சாதகங்கள்: ஐந்தாம் தேதி மகரத்தில் இருக்கும் புதன், ஆறாம் தேதி முதல் கும்பத்தில் சூரியன் குருவுடன் இணைகிறார் .புதிய பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும். நீண்டகாலம் வாங்க யோசித்த ஒரு நகையை வாங்குவீர்கள். குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை இருக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். ஆன்மீக நாட்டம் பெருகும். உத்தியோகத்தைப் பொறுத்தவரை நீங்கள் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டியிருக்கும். கடின உழைப்பிற்கான பலனைப் பெற நீங்கள் சிறிது காலம் காத்திருக்க வேண்டியிருக்கும். பொருளாதார நிலை சிறிது ஏற்ற இறக்கத்துடன் காணப்படும். நிலம் அல்லது சொத்து, வண்டி வாகனம் வாங்குவதற்கு வாய்ப்புகள் உள்ளது. கடன் வேண்டி விண்ணப்பித்திருந்தால் அது கிடைக்கும்.
கவனம் தேவை :நண்பர்களிடம் பண விஷயம் சம்பந்தமான கருத்து வேறுபாடு ஏற்படும். பணியிடச் சூழல் அனுகூலமாக இருக்க வாய்ப் பில்லை. வளர்ச்சியும் மந்தமாக இருக்கும். உரிய அங்கீகாரம் கிட் டுவது கடினம். தேவையற்ற பேச்சுக்கள் மற்றும் வீண் வக்குவாத்தை தவிர்ப்பது நன்மை பயக்கும். புதிய தொழில் முதலீடுகளை மேற்கொள்ளாதீர்கள்.
பரிகாரம்: கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்யவும். முருகனை வழிபடவும்
ரிஷப ராசி
சாதகங்கள்: ராகுவின் பிரச்சனை நீங்கி விட்டது என்று தான் கூற வேண்டும். இனி சில குழப்பங்கள் முடிவுக்கு வரும். 6ஆம் தேதிக்கு மேல் சிறு பிரயாணங்கள், இடமாற்றங்கள் உண்டு. குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும். கணவன் மனைவி உறவில் ஒற்றுமை இருக்கும். புரிந்துணர்வு காரணமாக இருவரும் கருத் தொருமித்து வாழ்வார்கள். இருவருக்கும் இடையே அந்நி யோன்யமும் நெருக்கமும் அதிகமாக இருக்கும். உறவினர்கள் அனைவரிடமும் நல்ல சுமுகமான உறவு நிலை காணப்படும். பொருளாதார நிலைமை சீராக இருக்கும். உழைப்பிற்கேற்ற பலனைக் காண கால தாமதமாகலாம். சொந்தத் தொழில் அல்லது வியாபாரம் செய்பவர்கள் தொழில் சம்மந்தப்பட்ட முக்கியமான ஆலோசனைக் கூட்டங்களை தவிர்ப்பது நல்லது.
கவனம் தேவை: கடந்த காலங்களில் இருந்த நோய் மீண்டும் பிரச்சினை தர வாய்ப்புள்ளது. மருத்துவ பரிசோதனை மேற் கொள் வது நல்லது. உணவு விஷயத்தில் கவனம் தேவை.நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது.சனி லாப ஸ்தானத்தை பார்வையிடுவதால் கடன் வழக்கு போன்ற பிரச்சினைகளில் பின்னடைவு ஏற் படலாம்.வண்டி வாகனங்களில் சில செலவுகள் ஏற்படலாம்.
பரிகாரம்:துர்க்கையை வணங்குங்கள். அம்மன் கோயிலுக்குச் சென்று வழிபடுங்கள்.
மிதுனம்
சாதகங்கள்: அஷ்டமத்தில் இருக்கும் சுக்கிரன், நிச்சயம் உங்களை கஷ்டப்படுத்த மாட்டார். ஆனால், சனியின் தொல்லை இன்னும் விலகவில்லை. எனவே காரியங்களை, முன் யோசனையாலும், திட்டமிடுதலாலும் மட்டுமே தவிர்க்கமுடியும். கணவன் மனைவி கருத்தொருமித்து வாழ்வார்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். இளைய உடன் பிறப்புகளுடனான உறவு சிறப்பாக இருக்கும். நிலம் சம்மந்தப்பட்ட முதலீடுகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். தொழிலில் வளர்ச்சி காண்பீர்கள். உங்கள் பணியிடச் சூழல் அனுகூலமாக இருக்கும். தனியார் துறையில் உத்தி யோகத்தில் இருப்பவர்கள் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வை எதிர்பார்க்கலாம். கூட்டுத்தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
கவனம் தேவை: உடல் நலனில் அக்கறை தேவை. வயிறு சம்மந் தப்பட்ட உபாதைகள் வரலாம். மனதை ஒருமுகப் படுத்த வேண் டியது அவசியம். தந்தை வழியில் சில உரசல்கள் வரலாம்.தந்தை உடல்நிலையில் சில பாதிப்புக்கள் வரலாம்.எதிர்ப்பாராத மருத்துவ செலவுகள் ஏற்படலாம்.
பரிகாரம்: பெருமாள் தாயாரை வணங்குங்கள். சனிக்கிழமை பெருமாள் கோயிலுக்குச் செல்லுங்கள்
கடக ராசி
சாதகங்கள்: ஆறாம் தேதி முதல் தேதிக்கு புதன் அஷ்டம ராசியில் பிரவேசிப்பது சில கலக்கங்களை உண்டு பண்ணும். கவலைப் படவேண்டாம். வேறு கிரகங்களின் பார்வையும் சேர்க்கையும் இதை சமாளிக்கச் செய்யும் . குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும். கணவன் மனைவி உறவில் ஒற்றுமை இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நல்ல பலன்களைக் காண் பார்கள். நீங்கள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு கிட்டும். இசை மற்றும் கலையில் உங்கள் ஆர்வம் அதிகரிக்கும். பொருளாதாரம் சீராக இருக்கும். சிறு சிறு உபாதைகள் தவிர உங்கள் ஆரோக்கியத்தில் எந்தவிதப் பிரச் சினையும் இருக்க வாய்ப்பில்லை. மாணவர்கள் சிறப்பாகக் கல்வி பயில்வார்கள். போட்டித் தேர்வு எழுதும் மாணவர்கள் அதில் வெற்றி காண்பார்கள்.
கவனம் தேவை:உடல்நிலை சம்பந்தமாக ஏதோ ஒரு உறுத்தல் இருக்கவே செய்யும். கவலைப்படவேண்டாம். பெரும்பாலும் அது கற்பனையாகவே இருக்கும். பீதியை விட்டுத்தள்ளுங்கள். தொழில் வியாபாரம் மூலம் லாபம் காண இயலாது. கூட்டுத் தொழிலிலும் இதே நிலை இருக்கும். புதிய முதலீடுகள் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமை மகாலட்சுமி தாயாரை வணங்குங்கள் . திங்கட்கிழமை அம்மன் கோயிலுக்குச் செல்லுங்கள்.
சிம்மம்
சாதகங்கள்:ஏழில் சூரியன் உலவுவதால் சில காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி இருக்கும். அரசாங்க காரியங்களும் கொஞ்சம் இழுத்தடிக்கும். மற்றபடி குடும்ப உறவுகள் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும். தடைகளைத் தாண்டி வெற்றி இலக்கை எட்டுவீர்கள். பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கிட்டும். கூட்டுத் தொழிலில் இருப்பவர்கள் அதிக லாபத்தை எதிர்பார்க்கலாம். வருமானம் கூடும். கையில் பணம் சரளமாகப் புழங்கும். செலவுகளும் கட்டுக்குள் இருக்கும். நன்கொடை போன்ற தரும காரியங்களுக்கு பணத்தை செலவு செய்வீர்கள். கலைத் துறையில் இருப்பவர்கள் சிறந்த வகையில் வருமானம் ஈட்டு வார்கள்.
கவனம் தேவை:வழக்குகள் வாய்தா வாங்கும் தீர்ப்பு தள்ளிப் போகும்.பேச்சில் கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தில் இருக்கும் பெரியவர்களை அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். வியாபாரத்தில் போட்டி பொறாமை அதிகம் காணப்படும்.
சந்திராஷ்டமம்: 5.3.22 முழுநாளும் 6.3.22 பகல் 2.29 வரையிலும் சந்திராஷ்டமம் உண்டு. சந்திராஷ்டம காலத்தில் எந்தப் புது திட்டமும் முதலீடும் பேச்சுவார்த்தையும் வேண்டாம். பயணங்களில் மிகுந்த விழிப்புடன் இருக்கவும்.
பரிகாரம்:சிவனை வணங்குங்கள். வியாழக்கிழமை சிவன் கோயி லுக்குச் செல்லுங்கள்.
கன்னி
சாதகங்கள்: குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும். பொருளாதாரத்தைப் பொறுத்தவரை அனுகூலமாக இருக்கும். பண வரவு அதிகரிக்கும். பொருளாதார பாதுகாப்பை உணர்வீர்கள். கடன்களை அடைத்து முடிப்பீர்கள் உத்தியோகத்தைப் பொறுத்தவரை சிறப்பான பலன் களைப் பெறுவீர்கள். உங்கள் திறமைக்கான அங்கீகாரமும் பாராட் டும் பெறுவீர்கள். அரசுப் பணியில் அனுகூலமான பணியிடச் சூழ லும் சக பணியாளர்களின் ஆதரவும் கிட்டும். தொழிலும் சிறப்பாக நடக்கும். சக பணியாளர்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் கிட்டும். ஆரோக்கியம் சீராக இருக்கும். மாணவர்கள் பல புதிய விஷயங் களை கற்றுக் கொள்வார்கள்.
கவனம் தேவை:கணவன் மனைவி உறவில் சுமுகமான நல்லிணக்க உறவு மேற்கொள்ள ஒருவரை ஒருவர் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டியிருக்கும். பாதகாதிபதி குரு 6-ல் இருக்கிறார் குழந்தைகள் மற்றும் வேலைக்காரர்களிடம் கருத்து வேறுபாடு வரலாம் அதனால் மனத் துயரம் அடையும் வாய்ப்பு உண்டு உங்களை சற்று பலவீனமாக உணர்வீர்கள். மனதை தைரியப் படுத்திக் கொண்டால் பிரச்சனைகள் சூரியனைக் கண்ட பனிபோல விலகிவிடும்.
சந்திராஷ்டமம்: 6.3.22 பகல் 2.29 முதல் 8.3.22 , 12.30 வரையிலும் சந்திராஷ்டமம் உண்டு. சந்திராஷ்டம காலத்தில் எல்லாத் திட்டங் களையும் தள்ளிப்போடவும். வீண் வாக்குவாதங்களைத் தவிர்க் கவும். இரவுப் பயணத்தை தவிர்க்கவும் .
பரிகாரம்:பெருமாள் தாயாரை வணங்கி புதன்கிழமை பெருமாள் கோயிலுக்குச் செல்லுங்கள்
துலாம் ராசி
சாதகங்கள்: இந்த வாரம் 5ல் சூரியன் குரு.புதனும் சேர்கிறார். குடும்பத்தில் தம்பதிகள் கருத்தொருமித்து சந்தோஷமான சூழ்நிலை இருக்கும். நெருக்கம் அதிகரிக்கும். நண்பர்கள் உடனான உறவு நிலை சிறப்பாக இருக்கும்.புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். பொரு ளாதார ஏற்றம் காணப்படும். உத்தியோகத்தைப் பொறுத்த வரை உங்களுக்கு அனுகூலமான நிலை இருக்கும்.பொறுப்புகள் கூடும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வெளிநாட்டில் வேலை தேடு பவர்களுக்கு வேலை கிடைக்கும். தொழில் தொடங்க காத்திருப் பவர்களுக்கு புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்கும்.
கவனம் தேவை:எதிர்பாராத சிறு மனக்கசப்பு சந்திக்கும் வாய்ப்பு சிலருக்கு உண்டு .நீங்கள் செய்யாத பழியை சுமக்க வேண்டி யிருக்கும். ஆனால் விரைவில் இந்த சூழல் மாறிவிடும். உண்மை தெரியவரும். உங்கள் ஆரோக்கியத்தில் நீங்கள் அக்கறை செலுத்த வேண்டும்.
சந்திராஷ்டமம்: 8.3.22 , 12.30 முதல் 11.3.22 ,அதிகாலை 1.03. வரை யிலும் சந்திராஷ்டமம் உண்டு. வீண் வாக்குவாதங்களைத் தவிர்க் கவும். பயணங்களில் மிகுந்த விழிப்புடன் இருக்கவும். இரவுப் பயணத்தை தவிர்க்கவும் . வண்டி வாகனங்களை நன்கு பராமரித்து சரி செய்த பிறகே ஓட்டவும்.
பரிகாரம்:மகாலட்சுமித் தாயாரை வணங்குங்கள். வெள்ளிக்கிழமை பெருமாள் கோயிலுக்குச் சென்று தாயாரை வணங்குங்கள்.
விருச்சிக ராசி
சாதகங்கள்:4ல் குரு, சூரியன் இணைவு.கணவன் மனைவி அனு சரித்து நடந்து கொள்வதன் மூலம் உறவு வலுப்படும். சிறு சல சலப்புகள் தவிர குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். மங்கள கரமான காரியங்கள், திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடை பெறும் வாய்ப்புகள் உள்ளது. வீடு மனை வாங்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உங்கள் உத்தியோகம் சிறப்பாக இருக்கும். மூத்த உடன் பிறப்புகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். ட்ராவல்ஸ் தொழில் செய்பவர்கள் அதிக நன்மை லாபம் தரும்.உங்கள் கடின உழைப்பிற்கான பாராட்டும் அங்கீகாரமும் கிட்டும்.
கவனம் தேவை:முன்பின் யோசிக்காமல் “இந்த காரியத்தை செய்து விட்டோமே” என்று பின்னால் நினைக்கக் கூடிய சில விஷயங்கள் நடக்கும். எனவே எதையும் யோசித்துச் செய்யுங்கள். நாலில் சூரியன் இருப்பதால் சில துரோகங்களையும் மன அழுத்தங்களையும் சந்திக்க வேண்டியிருக்கும். பொருளாதார நிலை சீராக இருக்கும் என்றாலும் செலவுகள் அதிகம் இருக்கும்.சொந்தத் தொழிலில் அதிகம் போராட வேண்டியிருக்கும். ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துங்கள்.
சந்திராஷ்டமம்: 11.3.22 ,அதிகாலை முதல் 13.3.22 ,பகல் 1.30. வரையிலும் சந்திராஷ்டமம் உண்டு. சந்திராஷ்டம காலத்தில் எந்தப் புது திட்டமும் முதலீடும் பேச்சுவார்த்தையும் வேண்டாம். இரவுப் பயணத்தை தவிர்க்கவும் . வண்டி வாகனங்களை நன்கு பராமரித்து சரி செய்த பிறகே ஓட்டவும். இயன்ற அளவு சந்திராஷ்டமத்தில் அதிகம் பேசாமல் மௌனமாக இருங்கள்.
பரிகாரம்:வேல்விருத்தம் கந்தரனுபூதி பாராயணம் செய்யுங்கள் செவ்வாய்க்கிழமை முருகன் கோயிலுக்குச் செல்லுங்கள் .
தனுசு ராசி
சாதகங்கள்:மூன்றில் சூரியன் அளவற்ற நன்மைகளைத் தருவார். வெற்றியைத் தருவார். 2ல் சுக்கிரன் இருப்பதால், பணவரவில் குறை வில்லை. எப்படியோ பணம் கைக்கு வந்துவிடும் குடும்பத்தில் குதூ கலம் இருக்கும். திருமணத்திற்குக் காத்திருப்பவர்களுக்கு ஏற்ற துணை கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பீர்கள். பொறுப்புகள் அதிகரிக்கும். புதிய வேலை கிடைக்கும். குடும்பத்தில் குதூகலம் இருக்கும். மனதில் மகிழ்ச்சியான உணர்வு இருக்கும். உறவுகளுக்கு முக்கியத்துவம் அளித்து நடந்து கொள் வீர்கள் .வயதானவர்களின் ஆலோசனை வழி நடத்தும்.ஊடகங்களில் பணி புரிபவர்களுக்கு அதிர்ஷ்டமான வாரம் .
கவனம் தேவை: 3ல் குரு, உங்களுக்கு உடல் ரீதியான சிறு பிரச் சனைகளை ஏற்படுத்தும் வாய்ப்பு உண்டு .சிறு சிறு உடல் உபாதைகள் வந்து சரியாகும். பணியிடத்தில் உங்களுக்கு கூடுதல் பொறுப்புகளை வழங்குவார்கள். ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துங்கள்.ஞாபக மறதியும் அறிவுக்குப் பொருந்தாத சில காரியங்களைச் செய்து சங்கடப்படும் வாய்ப்பு உண்டு
பரிகாரம்: ஸ்ரீ ராமஜெயம் எழுதுங்கள். சுந்தரகாண்ட பாராயணம் செய்யுங்கள்.
மகர ராசி
சாதகங்கள்: ராசியில் சுக்கிரன், செவ்வாய்.2ல் சூரியன், குரு.கூட புதன் இணைகிறார்.குடும்பத்தில் கணவன் மனைவி ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டு இருப்பார்கள். விருந்து விசேஷங்கள் நடக்கும் வாய்ப்புகள் உள்ளது. கலை தொழிலில் ஆதாயம் உண்டு. புது வாய்ப்புக்கள் வரும்.உத்தியோகத்தில் சிறந்த முன்னேற்றம் இருக்கும். அரசுத் துறை ஆதாயம் உண்டு.புது ஒப்பந்தங்கள் உங் களை நாடி வரும்.தொழிலும் சிறப்பாக நடக்கும். மாணவர்கள் சிறப் பாகக் கல்வி பயில்வார்கள். போட்டித் தேர்வு எழுதும் மாணவர்கள் அதில் வெற்றி காண்பார்கள்.உறவினர்களிடம் நல்ல சுமுகமான உறவு நிலை காணப்படும். பணியிடச் சூழல் அனுகூலமாக இருக்கும். சக பணியாளர்கள் நட்புறவுடன் ஒத்துழைப்பை அளிப்பார்கள்.
கவனம் தேவை:அலுவலக நிமித்தமாக நீங்கள் பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். நண்பர்களிடம் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது.ராசியில் இருந்த புதன் ஆறாம் தேதி முதல் இரண்டாம் இடத்தைப் பெறுவது நன்மைதான் ஆனால் செவ்வாய் ராசியில் இருப்பது சில தவறான முடிவுகளை குருட்டாம்போக்கில் எடுக்கத் தூண்டிவிடும் எனவே,” நில், கவனி, செல்” என்ற வாச கத்தை நினைத்துக்கொண்டு, எதிலும் அவசரப்பட முடிவெடுங்கள்
பரிகாரம்: சனிக்கிழமை ஆஞ்சநேயர் கோயிலுக்குச் செல்லுங்கள். அனுமன் சாலீசா பாராயணம் செய்யுங்கள்
கும்பம்
சாதகங்கள்:ராசியில் குரு,சூரியன்,6ம் தேதி புதன் இணைகிறார். கணவன் மனைவிக்கு இடையே நல்லிணக்கம் கூடும்.குடும்பத்தில் உள்ளவர்களுக்கு இடையே நல்லுறவு நீடிக்கும். மூத்த சகோதரத்தின் மூலமாக தன உதவிகள் கிடைக்கும்.குடும்பத்தில் அன்பும் அமைதி யும் காணப்படும். பொறுப்புகள் அதிகரிக்கும். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு திருமணம் கைகூடும். கூட்டுத் தொழில் மூலம் அதிக லாபங்களும் ஆதாயங்களும் கிட்டும். பங்கு வர்த்தகம் செய்பவர்கள் அதிக லாபம் காண்பார்கள். குடும்பத் தொழிலை விரிவு படுத்த பணத்தை முதலீடு செய்வீர்கள்.வீட்டு உபயோக பொருட் களை வாங்க செலவு செய்வீர்கள்.
கவனம் தேவை: சில உஷ்ண உபாதைகள் தலைதூக்கும். ஓய்வு ஒழிச்சல் இன்றி தொடர்ந்து பணிகளை மேற்கொள்வதன் காரணமாக ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். தலை வலி மற்றும் தோள்பட்டை வலி போன்ற உபாதைகளை சந்திக்க நேரும். இட மாறுதல் திடீர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி இருக்கும். பணம் மற்றும் பொருட்களை ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ளவும்.
பரிகாரம்: வியாழக்கிழமை சிவாலயம் சென்று அம்பாள், சிவன் மற்றும் நந்திகேஸ்வரர், சண்டிகேஸ்வரரை வணங்குங்கள்
மீன ராசி
சாதகங்கள்: 12ல் குரு ,சூரியன் மற்றும் சுகாதிபதி புதன் .புதிய தொழில் ஒப்பந்தங்கள் கையெழுத்து இடும் வாய்ப்பு உண்டு.கூட்டுத் தொழில் செய்பவர்கள் நல்ல லாபத்தை எதிர்பார்க்கலாம். வித்தைக் காரகன் பலம் பெற்றதால் மாணவர்கள் சிறந்த முறையில் கல்வி பயில்வார்கள். நிலம் மற்றும் வீடு வாங்குவது லாபம் மிகுந்ததாக இருக்கும். ஊதிய உயர்வு ,பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்பு உண்டு. போட்டித்தேர்வுகள் வெற்றியாகும்.
கவனம் தேவை:ராசியாதிபதி விரயத்தில் இருக்கிறார் அவர்கூட சுகாதிபதி புதனும் வந்து சூரியனோடு சேர்வதால் எதிர்பாராத செலவுகள், தேவையற்ற செலவுகள், மனைவிக்காக வைத்தியச் செலவுகள் வந்து சேரும். வர வேண்டிய கடன்கள் தாமதமாக வசூலாகும். லாபம் தொழிலில் குறைந்த அளவே கிடைக்கும். குடும்ப சூழ்நிலை சற்று அப்படி இப்படி இருக்கும்.மூத்த சகோதர சகோதரிகளுடன் பேசும் போது கவனம் தேவை. தேவையற்ற பேச்சுகள் மற்றும் வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும்.
பரிகாரம்: லட்சுமி நரசிம்மரை வணங்குங்கள் நரசிம்மருடைய ஸ்தோத்திரங்களைச் சொல்லுங்கள்

