மு. ராகவ அய்யங்கார் 1878 ஜூலை மாதம் 26 தேதி ராமநாதபுரத்தில் பிறந்தவர். தந்தையார் சதாவதானம் முத்துஸ்வாமி அய்யங்கார் என்ற தமிழ்ப் புலவர்.இராமநாதபுரத்தில் சேதுபதி அவைப்புலவராக விளங்கியவர் முத்துசுவாமி ஐயங்கார்ராகவ அய்யங்கார் இளமையிலேயே தம் தந்தையை இழந்துவிட்டார். அதன் பின்னர் பாண்டித்துரைத் தேவர் இவரை வளர்த்துக் கல்வி புகட்டினார். (ராகவையங்கார் பாண்டித்துரை தேவரிடம் தமிழ் பயின்றிருக்கிறார். பாண்டித்துரை தேவரோ ராகவையங்காரின் அப்பா முத்துஸ்வாமி ஐயங்காரிடம் தமிழ் பயின்றிருக்கிறார்!)
படிப்பிற்குப் பிறகு சில காலம் தொல் பொருளாராய்ச்சிக் குழுவைச் சேர்ந்த டி. ஏ. கோபிநாதராவுடன் தமிழ் நாட்டின் கோயில்களிலுள்ள கல்வெட்டுகள் பற்றி ஆராய்ந்தார்.
செந்தமிழ் என்ற பத்திரிகையின் உதவி ஆசிரியராக சில காலமும், பின்னர் ஆசிரியராக சில காலமும் பணியாற்றியுள்ளார்.
சென்னைப் பல்கலைக் கழகம் ரெவரெண்ட் ஜே.எஸ். சாண்ட்லர் தலைமையில் “தமிழ்ப் பேரகராதி” தயாரிப்பில் 1913 முதல் தமிழ் உதவி ஆசிரியராக இருந்தார். சாண்ட்லர் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட இம்மாபெரும் முயற்சி, பின்னர் தலைமையேற்ற எஸ்.வையாபுரிப் பிள்ளை காலத்தில் 1936ல் தான் முடிந்தது. (தமிழ் பேரகராதி தயாரிக்கும் முயற்சியில் ரெவ். ஜே.எஸ். சாண்ட்லர் சீஃப் எடிட்டர் ஆகவும் ராகவையங்கார் சீஃப் பண்டிட் ஆகவும் பணி புரிந்திருக்கின்றனர். சீஃப் பண்டிட் என்றால் என்ன என்று சரியாக புரியவில்லை.)
இவரது ஆராய்ச்சித்திறனைப் போற்றும் வகையில் இவருக்கு 1939ல் “ராவ் சாஹேப்” என்ற பட்டத்தையும் முன்னாள் அரசு அளித்துக் கௌரவித்தது.
திருவாங்கூர் பல்கலைக் கழகத்தில், தலைமைத் தமிழ் ஆராய்ச்சியாளராக 1944 முதல் 1951 வரை பணி புரிந்திருக்கிறார். இதற்கிடையே லயொலா கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகவும் இருந்திருக்கிறார்.
கலைமகள், தமிழ் நேசன் பத்திரிகைகளில் மதிப்பியல் ஆசிரியராகவும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.
வேளிர் வரலாறு, தொல்காப்பியப் பொருளதிகார ஆராய்ச்சி, ஆழ்வார்கள் கால நிலை முதலான பன்னிரண்டு நூல்கள் படைத்துள்ளார். தவிரவும், நரி விருத்தம் (அரும்பதவுரையுடன்), திருக்கலம்பகம், விக்கிரம சோழனுலா, கேசவப் பெருமாள் இரட்டைமணிமாலை, நிகண்டகராதி முதலான பத்துக்கும் மேற்பட்ட நூல்களைப் பதிப்பித்துள்ளார்.
செந்தமிழ், கலைமகள், தமிழர் நேசன், ஸ்ரீவாணி விலாசினி, கலைக்கதிர், அமுதசுரபி முதலான பத்திரிகைகளில் நிறையக் கட்டுரைகளும் எழுதியுள்ளார்.
1954ல் தன் மனைவியையும், இளைய மகனையும் இழந்தவர், தன் மூத்த மகனுடன் மானாமதுரையில் வாழ ஆரம்பித்தார். 1960 பிப்ரவரி இரண்டாம் தேதி மானாமதுரையிலேயே காலமானார்.
சிறந்த பதிப்பாசிரியர்
அண்ணாமலை பல்கலைக் கழகம் கம்பராமயாணத்தை உரையோடு பதிப்பிக்க விழைந்தது. எனவே 1951 ஆம் ஆண்டில் பதிப்பாசிரியர் குழுவை உருவாக்கியது. அக்குழுவில் மு. இராகவையங்கார் இடம்பெற்றார். கம்பராமாயணத்தின் சிலபகுதிகளைப் பாடபேத ஆராய்ச்சிக் குறிப்பும் விளக்கவுரையும் எழுதி பதிப்பித்தார்.[4] இந்நூல் தவிர பின்வரும் நூல்களையும் பதிப்பித்திருக்கிறார்.
வ.எண் ஆண்டு நூல்
01 1910 திருக்குறள் பரிமேலழகர் உரையுடன்
02 நரிவிருத்தம் அரும்பத உரையுடன்
03 சிதம்பரப் பாட்டியல் உரையுடன்
04 திருக்கலம்பகம் உரையுடன்
05 விக்கிரம சோழனுலா
06 சந்திரா லோகம்
07 கேசவப் பெருமாள் இரட்டை மணிமாலை
08 1936 பெருந்தொகை
09 1936 திருவைகுந்தன் பிள்ளைத்தமிழ்
10 1949 அரிச்சந்திர வெண்பா
11 1951 கம்பராமாயணம் – பால காண்டம்
12 1953 திரிசிராமலை அந்தாதி
13 1958 கம்பராமாயணம் – சுந்தர காண்டம்
Post Views: 766