குத்து விளக்கு வைக்கும் பொழுது டைல்ஸ் அதாவது ஓட்டின் கீழ் வைக்கலாமா? ஏதாவது தட்டு வைக்க வேண்டுமா? வாழை இலையில் வைக்கலாமா ?எதில் வைத்தால் சிறப்பானது என்று சாஸ்திரம் சொல்லுகிறது?.
இதில் முதலில் கவனிக்க வேண்டியது விளக்கு என்பது இரண்டு வகையில் இருக்கும். நாம் விளக்கு பூஜை முதலியவற்றைச் செய்கின்ற பொழுது அந்த விளக்கை மகாலட்சுமியாக ஆவாகனம் செய்கின்றோம். அப்படிச் செய்கின்ற பொழுது மகாலட்சுமியினுடைய படத்தையோ அல்லது ஒரு கலசத்தையோ நாம் வைக்கின்ற பொழுது வெறும் தரையில் வைக்க மாட்டோம் ஒரு அழகான பீடத்தை அலங்காரம் செய்து அதன் மேல் தான் வைப்போம். வெறும் தரையில் வைக்கக்கூடாது என்பது தான் முக்கியமே தவிர அல்லது அசுத்தமான ஒரு பொருளின் மீது வைக்கக் கூடாது என்பதுதான் முக்கியமே தவிர ,மற்றபடி நீங்கள் வாழை இலையில் வைத்தாலும் சரி, ஒரு சுத்தமான தட்டில் வைத்தாலும் சரி தவறு இல்லை.
ஒரு பலகையின் மீது வைத்தாலும் சிறப்பானது.
குறிப்பாக மரப்பலகை நன்கு கழுவி, கோலம் போட்டு அதன் மீது குத்து விளக்கை வைப்பது சிறப்பான பலனைத் தரும்.விளக்குக்கு ஒரு பீடம் அவசியம்.
