வாழ்க்கை எளிமையானதுதான்.ஒரு பறவைக்கும் விலங்குக்கும் உள்ள எளிமையான இனிமையான வாழ்க்கை மனிதர்களுக்கு இல்லாமல் போய் விடுமா என்ன?ஆனால் அதை நாம் சிக்கலாக்கிக் கொண்டு விட்டோம்.
ஒரு ஞானி தினசரி கடைத்தெருவுக்கு வந்து கடையில் விற்கும் பொருள்களை வேடிக்கை பார்ப்பாராம்.ஆனால் ஒருநாளும் ஒரு பொருளும் வாங்கிய தில்லை.ஒருநாள் ஒரு கடைக்காரன் கேட்டுவிட்டான்.”என்ன ஐயா,நீங்கள் தினமும் வருகிறீர்கள் .வெகுநேரம் பார்க்கிறீர்கள்.ஒன்றும் வாங்குவ தில்லையே ..”அவர் சொன்னாராம். “இதில் எதாவது ஒரு பொருள் இல்லா விட்டால் வாழமுடியாது என் ற நிலையில் தவிர்க்கமுடியாத ஏதாவது ஒரு பொருள் வந்தால் வாங்கலாம் என்று தினமும் பார்க்கிறேன்…
வாழ்க்கையின் கடுமைக்கு காரணம் எதிர்பார்ப்பதும் ஏமாறுவதும் தான். அதற்குக் காரணம் ஆசை. தேவையற்ற ஆசை என்ற உணர்வை அழித்து விட்டால் போதும். வாழ்க்கை நாம் நினைக்கும் படி எளிமையாக இருக்கும். ஆசை ஏற ஏற, அதை நிறைவேற்றுவதில்