ஆரியன், திராவிடன், அந்நியன், மண்ணியன் என்ற வேறுபாடுகளை கவியரசர் ரவீந்திரநாத் தாகூர் குறுகிய (Narrow domestic Walls) வீட்டு சுவர்கள் என்கிறார்.
ஆரியன் என்பது வீரமும் வீரமும் உள்ள எவராயினும் பொருந்தும். திராவிடன் என்பது திராவிடம் என்ற தென்னிந்திய மண் சார்ந்த குறியீடு.
திராவிட மொழிகளில் தமிழ் மட்டுமே தனித்தன்மை உடையது. மற்ற மொழிகள் வடமொழிச் சார்புடையது. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கணியன் பூங்குன்றனாரைப் பேசிக்கொண்டே பிரிவினை பேசுவது மதீயீ னம்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பவர் சிறப்பு செய்தொழிலால் வேறுபடும் என்பதை எண்ணிப் பார்ப்பதில்லை.
வசிஷ்டர், விசுவாமித்திரர், வியாசர் அகத்தியர் போன்ற பலர் பிராமணர்கள் அல்லர்.சௌராஷ்ட்ரா பிராமணர்கள், விஷ்வகுல பிராமணர்கள் என உள்ளதை எண்ண வேண்டும்.
வருணம் எனப்படும் பிரிவு மாறக்கூடியது. எனவே பிரம்மத்தை அறிந்த உணர்வு கொண்ட அனைவரும் பிராமணரே.
அறப்பளீஸ்வர சதகத்தில் சாதி ஈனத்தில் பிறக்கினும்
கற்றோர்கள் சபையின் மேல் வட்ட மன்றோ
என்று கூறுகிறார்.
முகத்தில் இருந்து பிறந்தவன் பிராமணன், காலிலிருந்து பிறந்தவன் சூத்திரன் என்பது சிந்திக்கப்பட வேண்டிய ஒன்று.அடியார் (சைவம், வைணவம் இரண்டிலும்) என்பது அடியைக் கொண்டாடுபவர் கடவுளுடைய திருவடிகளையே எல்லோரும் போற்றுகின்றனர்.
சரணாகதி என்பதுதான் வைணவத்தின் உயிர்நாடி.
திருமாலின் திருவடிகள் தான் சாதனைகள் புரிந்துள்ளன.
” என் காலைப் பற்றிக்கொள்” என்பதே கீதையின் போதனை.
சடாரி எனப்படும் சடகோபமே இறைவனின் காலில் அணிந்த காலணிகளே !அதுவும் பிராமணர் அல்லாதவரான நம்மாழ்வார் அம்சமே.வைணவக் கோயில்களில் அதுவே எல்லோர் தலையிலும் வைக்கப்படுகிறது.
தயவு செய்து இதனை உணர்ந்து கொண்டு வீணான வதந்திகளைப் பரப்புவதில் நேரத்தையும் பொருளையும் வீணாக்காதீர்கள் .பிரிவினையைத் தூண்டாதீர்கள்.
