வாருங்கள் ஜோதிடம் கற்கலாம்-1

ஜோதிடம் என்பது நமது பாரம்பரியமான சாஸ்திரங்களில் ஒன்று. அதை கற்றுக் கொள்வதும் சிரமமான காரியம் அல்ல. ஒவ்வொருவரும் அதை ஓரளவுக்கு தெரிந்து கொள்வது நல்லது. ஆனால் அதனுடைய பலன்கள் மிகத்துல்லியமாக இருப்பதற்கான வாய்ப்புகள் சற்று குறைவு.
வருகின்ற இடர்ப்பாடுகளை, ஓரளவு கிரக நிலைகளை கொண்டு, உணர்ந்து, அதற்கு ஏற்றபடி நாம் நம்முடைய வழிமுறைகளை மாற்றிக் கொள்வதும், மாற்று ஏற்பாடுகளைச் செய்து கொள்வதும் ஜோதிடம் நமக்குத் தருகின்ற அனுகூலமான செய்தி .
9 நவகிரகங்கள் , 12 ராசிகள், 27 நட்சத்திரங்கள் அடிப்படையில்தான் ஜோதிட சாஸ்திரம் இயங்குகிறது. இதில் பல நுட்பமான கணித முறைகள் இருந்தாலும் கூட நாம் நம்முடைய வாழ்க்கையை எதிர்காலத்தை ஓரளவுக்கு யூகிக்க மிக எளிதான சில வழிகள் இருக்கின்றன.
இதில் மிக மிக அடிப்படையான விஷயங்களான எத்தனை நட்சத்திரங்கள், எத்தனை ராசிகள், அந்த ராசிகளுக்கான பெயர்கள் இவைகளைப்பற்றி எல்லாம், இந்தப் பாடத்தில் நான் சொல்லப் போவதில்லை .
காரணம் அதைத் தெரிந்து கொள்ளாமல் நாம் உள்ளே நுழைய முடியாது . அது எல்லோருக்கும் தெரிந்தது .எல்லாப் பஞ்சாங்கத்தில் இருப்பது .
இதில் சில அடிப்படையான விதிகளைச் சொல்லி ஒரு ஜாதகத்தை எப்படி அணுகுவது என்பதைத் தான் நாம் பார்க்கப் போகிறோம்.
எந்த ஒரு ஜாதகத்தை எடுத்தாலும் முதலில் பார்க்க வேண்டியது ஆயுள் யோகம் என்று சொல்லப்படுகின்ற ஆயுளைப் பற்றியது. ஆயுள் கணிதம் சிக்கலானது.
ஒருவருடைய ஆயுளை அவ்வளவு எளிதாக நிர்ணயித்து விட முடியாது என்பது உண்மைதான். ஆயினும் முதலில் எந்த ஜோதிடரும் இதைத்தான் பார்ப்பார்கள். காரணம் மற்ற யோகங்கள் இருந்தாலும் அதை அனுபவிக்க கூடிய ஆயுள் இல்லை என்று சொன்னால் அந்த யோகங்களால் பயனில்லை.
ஆயுளை கணிப்பதற்கு மிகத் துல்லியமாக நாம் பார்க்க வேண்டியது என்ன?
ஒரு ஜாதகத்தில் ராசியின் வலிமை
லக்னத்தில் வலிமை
லக்னாதிபதியின் வலிமை
ஆயுள் காரகனான சனியின் வலிமை
ஆயுள் ஸ்தானத்தில் வலிமை
இதை இப்படிச் சொல்லுவதை விட சில உதாரணங்களை வைத்துக் கொண்டு மிக எளிதாகப் புரிந்து கொள்ளலாம்.
1.உதாரணமாக முதல் ஜாதகத்தைப் பாருங்கள்.

இதில் மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது கிரகங்கள் வரிசையாக இருக்கக்கூடிய அமைப்பு. இதற்கு கிரகமாலிகா யோகம் என்று பெயர். அது ஒரு நல்ல யோக அமைப்பு .அடுத்ததாக லக்ன கேந்திரத்தில், ஒரு திரி கோண ஸ்தானத்தின் அதிபதியும் கேந்திர ஸ்தானத்தில் அதிபதியும் அமர்ந்திருக்கிறார்கள். புதனும் சூரியனும் உட்கார்ந்து ஏழாம் இடத்தைப் பார்க்கிறார்கள் .
அவருக்கு வீடு கொடுத்த சனி பதினோராம் இடத்தில் குருவோடு அமர்ந்து வலிமை பெற்று இருக்கிறார். ஆக இங்கே லக்னாதிபதி வலிமை அடைந்து விட்டார்.
விருச்சிக ராசி. அங்கே சந்திரன் நீசம் அடைந்தாலும் ராசிக்குரிய செவ்வாய் மகரத்தில் உச்சமடைந்து பாக்கியாதிபதி சுக்கிரனுடன் இணைந்து இருக்கிறார்.
அதனால் ராசியும் வெற்றி பெற்றுவிட்டது. ஆயுள்காரகன் லக்னாதிபதியாகி குருவோடு சேர்ந்து பதினோராம் இடத்திலிருந்து லக்னத்தையும் பார்க் கிறார். லக்னாதிபதி லக்னத்தை பார்வை செய்வது என்பது ஒரு கூடுதல் பலம் என்று எடுத்துக் கொள்ளலாம்.
எட்டுக்குரிய புதன் லக்னத்தில் அமர்ந்திருக்கிறார். பத்திர யோகம் என்னும் யோகத்தைப் பெற்றிருக்கிறார். இப்படி பல அமைப்புக்கள் ஓரளவு சாதக மாக இருப்பதால் ஆயுள் ரீதியில் இது ஒரு நல்ல ஜாதக அமைப்பு என்று சொல்லிவிடலாம்.இதில் மற்ற கஷ்டங்களைப் பற்றி நான் குறிப்பிட வில்லை.அது தனி. இங்கு நாம் பார்ப்பது ஆயுள் பலத்தைப் பற்றி மட்டும்தான் .
இப்பொழுது இரண்டாவது ஜாதகத்தைப் பாருங்கள்.

இவர் விருச்சிக லக்ன காரர் .கன்னி ராசிக்காரர். லக்னாதிபதி செவ்வாய் 12ல் போய் மறைந்துவிட்டார் என்று சொல்வார்கள் .ஆனால் அவர் சுக்கிர னோடு பரிவர்த்தனை பெற்று இருக்கிறார். அப்படியானால் லக்னத்தில் செவ்வாய் இருப்பதாகப் பொருள்.
லக்னம் வலுவடைந்தது. அதற்குப்பிறகு லக்னாதிபதி செவ்வாய் குருவோடு இணைந் திருக்கிறார். லக்னத்தில் சுப கிரகமான சுக்கிரன் இருக்கிறார். அவர் கேதுவோடு இருப்பதால் சில பிரச்சனைகள் இருந்தாலும் ஆயுள் பிரச்சினை வராது.
பாக்கிய ஸ்தானத்தில் ஆயுள்காரகன் சனி வலுவடைந்து இருக்கிறார். ராசிக்கு(கன்னி ) 3,8 க்குடைய செவ்வாய் இரண்டாமிடத்தில் குருவோடு இணைந்து இருக்கிறார்.
குருவும் புதனும் லக்னத்தை நோக்கி நகர்வதால் மறைமுகமாக அவர்க ளுக்கு திக்பலம் ஏற்படுகிறது. புதன் குருவின் விசாக நட்சத்திரத்தில் இருக்கிறார். அவர் 2,5 க்கு உரியவர் அல்லவா. எனவே இதுவும் ஓரளவு. ஆயுள் தோஷம் இல்லாத ஜாதகம்.75 வயதுக்கு மேல் ஆகிறது.
மூன்றாவதாக ஒரு ஜாதகத்தைப் பாருங்கள். கிட்டத்தட்ட 80 வயது ஆகிறது. இவர் துலா லக்கினக்காரர். லக்னத்திலேயே பதினோராம் அதிபதி சூரியன். மேலோட்டமாகப் பார்த்தால் இவர் நீசம் அடைந்து விட் டார் என்று சொல்லலாம். ஆனால் பரிவர்த்தனை யோகத்தில் இருக்கிறார் .

பாக்கிய ஸ்தானத்தில் சனி அமர்ந்து லக்னாதிபதியைப் பார்க்கிறார். குரு , சுக்கிரன் என இரண்டு சுபக்கிரகங்கள் ராசிநாதனோடு இணைந்து இருப் பதால் ஆயுள் தோஷம் இல்லை.
லக்னாதிபதியே அஷ்டமாதிபதி ஆகி வலிமை பெற்று விட்டதால் ஆயுள் தோஷம் இல்லை.
ராசி, லக்னம் வலிமை பெற்றுவிட்டது அல்லவா.
இந்த அடிப்படையில் இந்த மூன்று ஜாதகங்களும் ஆயுள் தோஷம் இல்லாத ஜாதகங்கள். எனவே ஒரு ஜாதகத்தில் ஆயுளை மேலோட்டமாக நிர்ணயம் செய்வதற்கு எளிதான வழி.
- லக்னம் வலுவோடு இருக்கிறதா என்று பார்க்கவேண்டும்
- லக்னாதிபதி ராசி அதிபதி வலுவோடு இருக்கிறார்களா என்று பார்க்க வேண்டும்.
- லக்னம் பாவிகளால் பாதிக்கப்படக்கூடாது.
- ஆயுள்காரகன் சனி தோஷம் இன்றி இருக்க வேண்டும்
5.ஆயுள் ஸ்தானம் பாதிப்படையாமல் இருக்க வேண்டும்.
இந்த ஐந்து கட்டங்களும் “டிக்” கடித்துவிட்டால் நீங்கள் எளிதாகச் சொல்லிவிடலாம் இது ஆயுள் தோஷம் இல்லாத ஜாதகம் என்று.
திருமணப் பொருத்தத்தில் முதலில் இதைத்தான் ஜோதிடர்கள் பார்ப்பார் கள். தொடர்ந்து பார்ப்போம்.
