இவ்வார கிரகநிலைகள்:
மேஷத்தில் ராகு, ரிஷபத்தில் செவ்வாய்,துலாத்தில் கேது, மகரத் தில் சூரியன், சனி, புதன் கும்பத்தில் சுக்கிரன் , மீனத்தில் குரு
மேஷம்
சாதகங்கள்: ராசியில் ராகு. இரண்டில் செவ்வாய். 12ல் குரு. மூன்றுக்கும் 6க்கும் உடைய புதன் சூரியனோடு கர்ம ஸ்தானத்தில் இணைந்து சுக ஸ்தானத்தை பார்வையிடுகிறார். சகோதர உறவு களால் ஆதாயம் உண்டு. பூமி யோகம் உண்டு. வண்டி வாகனங்கள் மற்றும் வீடு கட்டும் அமைப்பு உண்டு. அரசாங்க உதவிகளும் வங்கி கடன்களும் கிடைக்கும். சுக்கிரன் லாபஸ்தானத்தில் இருப்பதால் கணவன் மனைவி உறவுகள் அன்பு கொண்டதாக இருக்கும். குடும்ப ஒத்துழைப்பு அதிகரிக்கும். இதுவரை வராமல் இருந்த ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு முதலியவை கிடைப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உண்டு.
கவனம் தேவை : ஜென்ம ராகு.நட்பில் கேது.சில நேரங்களில் உங் களுடைய நட்பும் உறவும் பகையாகிவிடும். ஆகையினால் எச்சரிக்கையோடு இருங்கள்..
பரிகாரம்: செவ்வாய்க்கிழமை சஷ்டி கவசம் படியுங்கள். இயன்றால் அருகாமையில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோயிலுக்குச் சென்று ஒரு அர்ச்சனை செய்யுங்கள். வாய்ப்பும் ஆரோக்கியமும் உள்ளவர்கள் இம்மாதம் ஒருமுறை ரத்த தானம் செய்யுங்கள்.
ரிஷப ராசி
சாதகங்கள்: ராசியில் , 12க்குரிய செவ்வாய் இருக்கின்றார். புதன் சுகாதிபதி சூரியனோடு பாக்கியஸ்தானத்தில் இணைந்து உங்கள் வெற்றி ஸ்தானத்தைப் பார்வையிடுகின்றார். நீங்கள் நினைத்த செயல்கள் நிறைவேறும் காலம் இது. எதிலும் நீங்கள் துணிச் சலோடு இறங்குவீர்கள் .வெகு காலமாக காத்திருந்த ஒரு வாய்ப்பு உங்கள் கதவைத் தட்டும். குரு உங்கள் பூர்வ புண்ணிய ஸ்தானத் தைப் பார்வையிடுவதால் தெய்வ பலம் உண்டு. முன்னோர்கள் ஆசிகள் உண்டு. தளராத முயற்சி நிறைவேறாத காரியத்தையும் நிறைவேற்றி வைக்கும். சுக்கிரன் அமைப்பினால் கணவன் மனைவி ஒற்றுமை நீடிப்பது மட்டுமல்ல கலைத்துறையினருக்கும் நல் வாய்ப்பு உண்டு.
கவனம் தேவை : 12ல் ராகு.விரயம்.செலவு. உங்கள் பக்கத்து வீட்டுக் காரர்களையும் அருகாமையில் உள்ளவர்களையும் அனுசரித்துக் கொள் ளுங்கள். வாகனங்களை நல்ல முறையில் பராமரிக்க வேண்டும். ராசியில் செவ்வாய் . உணர்ச்சி வசப்பட்டு உயர் ரத்த அழுத்தத்துக்கு ஆளாக வேண்டாம். எதிர்பாராத பயணங்கள், அலைச்சல்கள் உண்டு.
பரிகாரம்: இம்மாதம் பிரசித்தி பெற்ற மகாலட்சுமியின்கோயிலுக்குச் செல்லுங்கள் .அங்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஒரு தீபம் ஏற்றி வாருங்கள். வாரம் ஒரு முறை உணவில்லாமல் தவிக்கும் ஒருவருக்கு உணவு அளித்து விட்டு சாப்பிடுங்கள்..
மிதுனம்
சாதகங்கள்: ராசிநாதன் அஷ்டமத்தில் சூரியனோடு இணைந்து இருக்கின்றார். சூரியன் உங்கள் தன குடும்ப ஸ்தானத்தைப் பார்வையிடுகின்றார். குடும்பத்தில் சிறிய சிறிய பிரச்சனைகள் வந்தாலும் மனம் விட்டு பேசுவதன் மூலமாக நீங்கிவிடும். 11ஆம் இடத்தில் ராகு உங்களுக்கு சில நல்ல செய்திகளையும் லாபங்களையும் தருவார். வணிகத் தடைகளை நீக்குவார். குரு உங்கள் சுகஸ்தானத்தைப் பார்வை செய்வதால் பூமியோகம் உண்டு. வீடு வாசல் முதவியவற்றை விஸ்தரிப்பீர்கள். செவ்வாயும் நான்காம் இடத்தை பார்வையிடுவதால் இடம் வீடு வாங்குபவர் களுக்கு தேவையான பண உதவி கிடைக்கும்.
கவனம் தேவை: 12ல் செவ்வாய்.ராசிநாதன் 8ல். உங்களுக்கு தவறான ஆலோசனை சொல்பவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு குறுக்கே நிற்பவர்களை அடையாளம் கண்டு கொண்டு விலக்குங்கள். விரயச் செலவுகளை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். அவ்வப்பொழுது சிறு ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படும். கடன் பிரச்சினைகள் தலை வலியைத் தரும்.
பரிகாரம்: பசுமையான துளசி மாலையை பெருமாள் கோயிலுக்கு ஒவ்வொரு புதன் கிழமையும் சமர்ப்பியுங்கள். உடல் ஊனமுற்ற ஒருவருக்கு உங்களால் என்ன முடியுமோ, அந்த உதவியைச் செய்யுங்கள்.
கடக ராசி
சாதகங்கள்: சுக்கிரன் அஷ்டமத்தில் இருக்கிறார்.குடும்ப அதிபதி சூரியன் உங்கள் ராசியைப் பார்வையிடுகின்றார். பூர்வ புண்ணிய ஸ்தானத்தை குரு ஒன்பதாம் பார்வையாகப் பார்வையிடுகின்றார் இவைகளெல்லாம் நல்ல அமைப்புகள். தடைகள் வந்தாலும் கூட உடைத்து விட்டு முன்னேறக் கூடிய நல்ல உற்சாகமான மன நிலையை இந்த கிரக அமைப்புகள் தரும் என்பதால் முயற்சிகளைக் கைவிட வேண்டாம் சுக்கிரன் எட்டில் இருந்தாலும் பாதிப்பை ஏற்படுத்த மாட்டார். சில மறைமுகமான ஆதாயங்களைத் தருவார்..
கவனம் தேவை: சந்திரன் நிலையால் விரையங்கள் சற்று அதிகரிக் கும் வாரம் இது. எனவே விழிப்புணர்வோடு செலவு செய்யுங்கள் உங்களைப் பற்றி பொறாமைப் படுபவர்கள் அதிகம் இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டு எச்சரிக்கையோடு பழகுங்கள். அடுத்தவர் விசயத்தில் எக்காரணத்தை முன்னிட்டும் தலை இடாமல் இருக்க வேண்டும்.
பரிகாரம் : அருகாமையில் உள்ள ஏதாவது ஒரு அம்மன் கோவி லுக்குச் சென்று மாலை ஐந்தரையிலிருந்து ஆறரை மணிக்குள் ஒரு விளக்கு போட்டு வாருங்கள்.
சிம்மம்
சாதகங்கள்: ராசிநாதன் சூரியன் ஆறில் சனியோடு இணைந்து இருக்கிறார். அவரோடு புதனும் இருக்கின்றார் அவர்கள் இணைந்து விரைய ஸ்தானத்தைப் பார்ப்பதால் எச்சரிக்கை தேவை. தந்தை வழி உறவுகளிடம் ஜாக்கிரதையாக பழகவும். தேவையற்ற விவா தங்களைத் தவிர்க்கவும். குரு உங்கள் தனஸ்தானத்தைப் பார்வை யிடுவதால் சிக்கல்கள் வந்தாலும் விலகி விடும். வருமானம் அதி கரிக்கும். தொழில் முன்னேற்றமாக நடக்கும். பாக்கியஸ்தானத்தில் உள்ள ராகு உங்களுக்கு உதவுவார்..
கவனம் தேவை: கொடுத்த கடனை வசூலிப்பதில் கவனம் செலுத் துங்கள். நல்ல நண்பர்களை அடையாளம் கண்டு கொண்டு உங் களுக்கு பக்கபலமாக இணைத்துக் கொள்ளுங்கள். குரு ,சனி ஆகிய இரண்டு கிரகங்களும் அவ்வப்பொழுது சில தடைகளை கொடுக்கவே செய்யும். அதிக அலைச்சலையும் தரும்.
பரிகாரம்: அடுத்த ஆறு வாரத்திற்கு ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் ஒரு பெருமாள் கோவிலுக்குச் செல்லுங்கள். தினம் காலை 27 முறை சூரிய காயத்ரியை கிழக்கு நோக்கி நின்று சொல் லுங்கள். உங்கள் தந்தையோ அல்லது தந்தை ஒத்த வயதானவரோ இருந்தால் அவருக்கு இந்த மாதத்திற்குள் ஒரு ஞாயிற்றுக்கிழமை ஆடையை வாங்கித் தாருங்கள் ஆசி பெறுங்கள்.
கன்னி
சாதகங்கள்: ராசி நாதன் புதன் வாரத் தொடக்கத்தில் நான்காம் இடத்தில் சூரியனோடு இணைந்து இருக்கிறார் .சனியும் அவரோடு இருக்கின்றார் .அவர் உங்கள் லாபஸ்தானத்தைப் பார்வை யிடுவதால் வியாபார தடைகள் நீங்கும். வணிகம் அதிகரிக்கும். குரு ராசியைப் பார்வையிடுவதால் கஷ்டங்கள் வந்தாலும் விரைவில் நீங்கிவிடும். கணவன் மனைவி உறவுகள் அன்பு கொண்டதாக இருந்தாலும் கூட, சுக்கிரன் 12ஆம் இடத்தை பார்வையிடுவதால் சில பேச்சுவார்த்தைகள் விவகாரத்தை உண்டாக்கி விடும் என்பதால் எச்சரிக்கை தேவை.. வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். சொந்த வீடு அமையும். தெய்வீக திருத்தலங்களுக்கு செல்லும் வாய்ப்பு ஏற்படும்.
கவனம் தேவை: எட்டாம் இடத்தில் ராகுவும் 2-ஆம் இடத்தில் கேது வும் சிரமங்களை ஏற்படுத்தும். பொருள்கள் சில நேரங்களில் திருட்டுப் போய்விடும் அல்லது தவறி விழுந்து உடைந்து விடும். கவனம் தேவை.
பரிகாரம்: ஏழை மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள், எழுது பொருள்கள் வாங்கித் தாருங்கள். ஏழை மாணவர்களுக்கு இலவசமாகக் கல்வி சொல்லித் தர முடிந்தால் சொல்லித் தாருங் கள்.
துலாம் ராசி
சாதகங்கள்: ராசிநாதன் சுக்கிரன் 5 ம் இடத்திலிருந்து உங்கள் லாபஸ்தானத்தை பார்வையிடுகிறார். கலைஞர்களுக்கு இதுவரை இல்லாத வாய்ப்புகள் கிடைக்கும். பெண்களுக்கு நினைத்த எண்ணங்கள் பூர்த்தியாகும். புதிய பொருள்களையும் நகைகளையும் வாங்கக்கூடிய வாய்ப்பு கிடைக்கும். சூரியன் தொழில் ஸ்தானத்தைப் பார்வை இடுகின்றார். தொழில் நல்லபடியாக நடக்கும். வருமானம் ஓங்கும். நட்பு வட்டாரங்களில் சிறிய பிரச்சனைகள் ஏற்படலாம்.. உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் மறையும். ஆன்மீக சிந்தனைகள் ஓங்கும். ராசிக்கு அதிபதி சுக்கிரன் பலம் பெற்று இருப்பதால் கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
கவனம் தேவை: உங்களைப் பற்றி குறை சொல்பவர்கள் இருக் கிறார்கள் அவர்களிடம் எச்சரிக்கையோடு இருங்கள். அவ்வப் பொழுது மனத் தடுமாற்றம் ஏற்படும். அது உங்கள் வேகத்தை தடுக் கும்.
பரிகாரம்: அருகாமையில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்குச் சென்று பிரகார வலம் வாருங்கள். முதியவர்களுக்கு உங்களால் இயன்ற உதவியை தவறாமல் செய்யுங்கள் அது எந்த உதவியாக இருந்தாலும் சரி உங்களால் இயன்ற உதவியை கட்டாயம் செய்யுங்கள்.
விருச்சிக ராசி
சாதகங்கள்: ராசிநாதன் செவ்வாய் ராசியைப் பார்வையிடுவதால் எது வந்தாலும் சமாளித்துக் கொள்ளலாம் என்கின்ற தைரிய எண்ணம் ஏற்படும் அது தவிர குரு பகவானும் உங்கள் ராசியைப் பார்வையிடுகின்றார் அவர் தன குடும்ப அதிபதி. எனவே குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிடைக்கும். கணவன் மனைவி உறவுகள் அன்பு கொண்டதாக இருக்கும் .சுகஸ்தானத்தில் சுக்கிரன் இருப்பதால் வீடு, வாகனம் முதலிய பொருள் சேர்க்கைகள் ஏற்படும். விரும்பிய பொருளை வாங்கும் யோகம் ஏற்படும். பெண்களால் ஆதாயம் உண்டு.. பதவி உயர்வு, ஊதிய உயர்வு , சலுகைகள் முதலியன கிடைக்கும் காலம் இது. அதற்கான முயற்சியை மேற்கொள்ளலாம். தொழில் விஸ்தரிப்பு முயற்சிகளும் பலன ளிக்கும்.
கவனம் தேவை:. 12-ல் இருக்கும் கேது பிரச்சனைகளும் தரும். அவரை ராகு பார்ப்பதால் நன்றாக இருக்கும் ஆரோக்கியத்தில் தீடிர் சிறு நோய்கள் ஏற்படலாம்.அது தற்காலிகமானதுதான். உடனடியாக கவனியுங்கள். அலட்சியப்படுத்த வேண்டாம்.
பரிகாரம்: இந்த மாதம் முழுக்க ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ராகு காலத்தில் துர்க்கையை வணங்குங்கள். இயன்றால் ஒரு முறை பட்டீஸ்வரம் சென்று வாருங்கள் .
தனுசு ராசி
சாதகங்கள்: ராசிநாதன் குரு உங்கள் தொழில் ராசியைப் பார்வை இடுவதால் வியாபார உத்தியோக இடங்களில் தேவையான உதவிகள் கிடைக்கும். உங்களுக்கு கீழே பணிபுரிபவர்கள் சற்று முரண்டு பிடித்தாலும் கடைசியில் உங்கள் ஆணைக்குக் கட்டுப் பட்டு உதவுவார்கள். மூன்றாம் இடத்தில் உள்ள சுக்கிரன் பாக்கிய ஸ்தானத்தைப் பார்வையிடுகின்றார். கணவன் மனைவி ஆலோ சனைகளும் ஒத்துழைப்புகளும் குடும்ப அமைதியைச் சீராக்கும். அதனால் உங்கள் செயல் திறன் கூடும். வெற்றிகள் கிடைக்கும். சிந் தனை வளம்பெறும். தெய்வ பலம் உண்டு.. சிலருக்கு பதவி உயர் வுகளும் கிடைக்கும். தொழில் போட்டிகள் குறையும். வருமானம் திருப்திகரமாக இருக்கும்.
கவனம்தேவை: எக்காரணத்தை முன்னிட்டும் தன்னம்பிக்கையை இழக்க வேண்டாம். திடீர் மனச் சோர்வுகள் ஏற்படும். எதிரும் பொறுமை தேவை. வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும்
சந்திராஷ்டமம்:4.2.23 காலை 2.31 முதல் 6.2.23 பிற்பகல் 3.03 வரை சந்திராஷ்டமம் உண்டு. சந்திராஷ்டம தினத்தில் பேச்சில் கவனமாக இருக்கவும். வாதப் பிரதிவாதங்களில் ஈடுபட வேண்டாம்.
பரிகாரம்: இந்த மாதம் முழுக்க ஸ்ரீ ராகவேந்திரர் மடத்திற்குச் சென்று மாலை சற்று அமர்ந்து தியானம் செய்து வாருங்கள் செருப்பு இல்லாத ஏதேனும் ஒரு ஏழைக்கு ஒரு காலணி வாங்கித் தாருங்கள் .
மகர ராசி
சாதகங்கள்: ராசிநாதன் சனி ஆட்சியில் இருக்கிறார். அஷ்டமாதிபதி சூரியனும் அவரோடு இணைந்து இருக்கிறார் இவைகளெல்லாம் சற்று சிரமத்தைத் தந்தாலும், உங்கள் சொந்த ராசிநாதன் சனி கை விடமாட்டார் .அவ்வப்பொழுது குழப்பத்தை தந்த அனுபவத்தை ஏற் படுத்துவார் அந்த அனுபவம் உங்கள் எதிர்கால நலனுக்கு உகந்தது என்பதை மறந்து விட வேண்டாம். இரண்டில் சுக்கிரன். எனவே பணப் பிரச்சனை பற்றிக் கவலைப்பட வேண்டாம். மூன்றில் உள்ள குரு உங்களுக்கு தைரியமான சிந்தனையைத் தருவார். ஆக்க பூர்வமாக வழி நடத்துவார். நீங்கள் எக்காரணத்தை முன்னிட்டு எதிர் காலத்தைப் பற்றிய தேவையற்ற அச்சத்தை மனதில் கொள்ளக் கூடாது. உற்சாகம் தான் உங்கள் வாழ்க்கைக்கு ஒரே உதவி.
கவனம் தேவை: தேவையில்லாத மன அழுத்தங்களும் அச்சுறுத் தல்களும் கற்பனை பயன்களும் வரும். அது குறித்து சிந்தித்து அமைதியை இழக்க வேண்டாம். உங்களைச் செயல் படாமல் வைக்கும் அதிலிருந்து விலகி வெளியே வாருங்கள். ஊக்கமுடன் இருங்கள்.
சந்திராஷ்டமம் :6.2.2023 பிற்பகல் 3.03 முதல் 9.2.23 காலை 2.49 வரை சந்திராஷ்டமம் உண்டு. சந்திராஷ்டம தினத்தில் பேச்சில் கவனமாக இருக்கவும். வாதப் பிரதிவாதங்களில் ஈடுபடவேண்டாம். இயன்ற அளவு மௌனமாக இருப்பது நல்லது.
பரிகாரம்: அருகாமையில் உள்ள ஈஸ்வரன் கோவிலுக்குச் சனிக் கிழமை தோறும் சென்று அம்பாளையும் ஈஸ்வரனையும் வலம் வந்து வணங்குங்கள் ஆதரவற்ற பெண்களுக்கு உங்களால் இயன்ற உதவியைச் செய்யுங்கள்.
கும்பம்
சாதகங்கள்: ராசியில் சுக்கிரன் இருக்கிறார்.சப்தம ராசியைப் பார்க் கிறார்.நட்பு பலப்படும்.கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக் கும் பெண்களுக்கு இது நல்ல காலம். இரண்டாம் இடத்தில் குரு ஆட்சி. அவர் லாபாதிபதியும் கூட எனவே தொழில் விஸ்தரிப்புகள் செய்யும் காலம் இது. வணிகம், வியாபாரம் முதலியவற்றில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மேலதிகாரிகள் ஒத்துழைப்பார்கள். அலு வலகத்தில் உங்கள் எண்ணங்கள் பூர்த்தியாகும். பலருடைய பாராட்டு பெறுவீர்கள். கௌரவம் ஓங்கும். கணவன் மனைவி உறவு கள் அன்பு கொண்டதாக இருக்கும் .வீட்டில் அமைதி தவழும். பிள் ளைகள் திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
கவனம் தேவை: வாழ்க்கை தரம் உயரும் போது சில குறுக் கீடுகளும் சஞ்சலங்களும் இடையூறுகளும் ஏற்படும் என்பதால் மிகவும் ஜாக்கிரதையோடு முன்னேறுங்கள். அதிகமான உழைப்பும் பொறுப்பும் கூடிக் கொண்டே போகும். அதிக வெளியூர் பயணங்கள் ஏற்படும் வாய்ப்புண்டு.
சந்திராஷ்டமம்: 9.2.23 காலை 2.49 . முதல் 11.2.23 பிற்பகல் 1.02 வரை சந்திராஷ்டமம் உண்டு. சந்திராஷ்டம தினத்தில் பேச்சில் கவனமாக இருக்கவும். வாதப் பிரதிவாதங்களில் ஈடுபட வேண்டாம்.
பரிகாரம்: இந்த மாதம் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை ஏதேனும் பாதுகாப்பான, பலன் தரும் இடத்தில், ஒரு மரச்செடியை நடுங்கள். அருகில் உள்ள மருத்துவமனையில் வசதி இல்லாத ஏழைகளுக்கு பழமா பிஸ்கட்டோ வாங்கித் தாருங்கள்.
மீன ராசி
சாதகங்கள்: ராசிநாதன் குரு ஆட்சியில் இருக்கிறார். தைரிய ஸ்தா னத்தில் செவ்வாய். ராசியில் குரு இருந்து சில அலைச்சல்களைத் தந்தாலும் கூட அது தரும் அனுபவத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள். குடும்ப அதிபதி செவ்வாய் தைரிய ஸ்தானத் திலிருந்து வழி நடத்துவார்.குருவும் செவ்வாயும் பாக்கிய ஸ்தானத்தைப் பார்வையிடுவதால் இடர்பாடுகள் ஏற்படாது. சூரிய னும் சனியும் உங்கள் பூர்வ புண்ணிய ஸ்தானத்தை பார்க்கிறார்கள். முன்னோர்கள் ஆசிகள் உண்டு .குலதெய்வத்தையும் இஷ்ட தெய்வத்தையும் வணங்க வேண்டும் என்று உள்ளுணர்வு தூண்டும். உடனே செயல்படுத்துங்கள். எல்லா விஷயங்களும் உங்களுக்கு நன்மையாக முடியும். வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு அனு கூலமான பலன்களே ஏற்படும். தொழிலில் நல்ல லாபம் எதிர் பார்க்கலாம் .போட்டிகள் குறையும்.
கவனம் தேவை: வெளிவட்டாரப் பழக்கங்களில் சில சறுக்கல்கள் உண்டு என்பதால் கவனமுடன் இருங்கள்.எதிலும் உடனடியாக யோசிக்காது பதில் சொல்லி மாட்டிக் கொள்ளாதீர்கள்.
பரிகாரம்: இந்த மாதம் அருகாமையில் உள்ள ஏதேனும் முதியோர் காப்பகம், அனாதை இல்லம் சென்று உங்களால் இயன்ற பணமா உணவோ ஆடையோ கொடுத்து உதவுங்கள். எதுவும் இல்லா விட்டால் சற்று நேரம் அவர்களிடம் ஆறுதலாகப் பேசிவிட்டு வாருங்கள்.
.
