தைப்பூசம் நாளில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் தனது தங்கையான சமயபுரம் மாரியம்மனுக்கு சீர் கொடுக்கும் நிகழ்வு நடைபெறுகிறது. சிறப்புமிக்க சமயபுரம் கோவிலில் சித்திரை தேரோட்டம், பூச்சொரிதல் விழா, தைப்பூச திருவிழா உள்ளிட்ட விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா கொடியேற்றத்தைத் தொடர்ந்து, ஒவ் வொரு நாளும் இரவு சிம்மம், பூதம், அன்னம், ரிஷபம், யானை, சேஷம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கடைசி நாள் 10ஆம் நாளான பிப்ரவரி 4ஆம் தேதி காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் தைப்பூசத்திற்காக கண்ணாடி பல்லக்கில் அம்மன் புறப்பட்டு வழிநடையாக ஸ்ரீரங்கம் வட திருகாவிரிக்கு வழிநடை உபயம் கண்டருள செல்கின்றார். மாலை அங்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு 10 மணி முதல் 11 மணி வரை ஸ்ரீரங்கம் ரங்கநாதரிடம் இருந்து சீர் பெறும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பிப்ரவரி 5ஆம் தேதி அதிகாலை மகா அபிஷேகமும், தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங் காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். காலை முதல் அன்று இரவு வரை அம்மன் வழி நடை உபயம் கண்டருளி மண்டகப்படி கண்டருளுகிறார். இரவு 11 மணிக்கு கோவில் வந்தடைகிறார்.
