இவ்வார கிரகநிலைகள்:
மேஷத்தில் ராகு, ரிஷபத்தில் செவ்வாய்,துலாத்தில் கேது, மகரத் தில் சூரியன், சனி, புதன்,(13.2.23 முதல் கும்பத்தில் சூரியன்), சுக்கிரன் , மீனத்தில்(17.2.23 முதல் சுக்கிரன்) குரு
மேஷம்
சாதகங்கள்: நீங்கள் கொஞ்சம் சுதாரித்து விட்டு எந்த காரியத்தை செய்தாலும் அது வெற்றி அடையும். ஆரம்ப குழப்பத்தைத் தவிர்த்து விடவும். இந்த வாரம் உங்கள் மனது கவரக்கூடிய ஒரு சம்பவம் நிகழும். செவ்வாய் இரண்டில் இருப்பதால் தைரியம் கூடும். ஆனால் அந்த தைரியத்தை நீங்கள் பேச்சில் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். தொழில் வியாபாரத் தடைகள் நீங்கும். போட் டிகள் குறையும். பழைய பாக்கிகளை நீங்கள் வேகமாக வசூல் செய்து விடுவீர்கள். பணியாளர்கள் ஒத்துழைப்பார்கள். சனி தொழில் வெற்றிகளை உருவாக்கிக் கொடுக்கும். பயணங்களின் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களோடு குதூகலமாக இருப் பீர்கள்..
கவனம் தேவை : ராசியில் ராகு. ராசிக்குடைய செவ்வாய் இரண் டிலிருந்து அஷ்டமத்தைப் பார்க்கிறார்.பேச்சு ஸ்தானத்திலிருந்து கஷ்டஸ்தானத்தைப் பார்ப்பதால் உங்கள் பேச்சு உங்களுக்கு எதிராகப் போய்விடும் என்பதினால் யாரிடமும் சட் புட் என்று கோபத்தோடு பேச வேண்டாம் .அது விவகாரம் ஆகிவிடும்..
சந்திராஷ்டமம்:13.2.23 இரவு 8.37 முதல் 16.2.23 காலை 12.46 வரை சந்திராஷ்டமம் உண்டு. சந்திராஷ்டம தினத்தில் பேச்சில் கவனமாக இருக்கவும். வாதப்பிரதிவாதங்களில் ஈடுபட வேண்டாம்.
பரிகாரம்: செவ்வாய்க்கிழமை சஷ்டி கவசம் படியுங்கள். இயன்றால் அருகாமையில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோயிலுக்குச் சென்று ஒரு அர்ச்சனை செய்யுங்கள். வாய்ப்பும் ஆரோக்கியமும் உள்ளவர்கள் இம்மாதம் ஒருமுறை ரத்த தானம் செய்யுங்கள்.
ரிஷப ராசி
சாதகங்கள்: பொருளாதார நிலை மேம்படும். ராசியில் உள்ள செவ்வாய் சில இடர்பாடுகளைக் கொடுத்தாலும் கூட நீங்கள் கவனமாக இருந்தால் உங்களுக்கு வெற்றியே கிடைக்கும். ஆடை அணிகலன்கள், மற்றும் வீட்டுக்கு வேண்டிய பொருள்களை வாங்கு வீர்கள். வாகன யோகம் உண்டு. புதிய சொத்துக்களை சற்று கவன மாக வாங்க வேண்டும். நண்பர்களுக்கோ உறவினர்களுக்கு உதவி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும். பணவரவு பிரச்சனை இல்லாமல் இருக்கும். வியாபார போட்டிகள் இருந்தாலும் பெரிய அளவில் பாதிக்காது. குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி கருத்து இடைவெளி குறையும். பிள்ளைகளிடம் அன்பு அதிகரிக்கும். உற்சாகமாக எதையாவது கற்றுக் கொள்ள வேண்டும் என்ற விருப் பம் நிறைவேறும்..
கவனம் தேவை : விரையாதிபதி செவ்வாய் உங்கள் தலைப்பாகத்தில் உட்கார்ந்து இருந்து கூட்டாளி ஸ்தானத்தை பார்வையிடுகின்றார். எனவே நண்பர்களிடம் சற்று எச்சரிக்கையோடு பழகவும். நாம் மிகவும் சாதாரணமாக சொன்ன ஒரு விஷயம் வேறு விதமாக அர்த்தம் கொள்ளப்பட்டு நமக்கு எதிராகத் திரும்பும்.
சந்திராஷ்டமம் :16.2.2023 காலை 12.46 முதல் 18..2.23 அதிகாலை 1.48 வரை சந்திராஷ்டமம் உண்டு. சந்திராஷ்டம தினத்தில் பேச்சில் கவனமாக இருக்கவும். வாதப் பிரதிவாதங்களில் ஈடுபடவேண்டாம். இயன்ற அளவு மௌனமாக இருப்பது நல்லது.
பரிகாரம்: இம்மாதம் பிரசித்தி பெற்ற மகாலட்சுமியின்கோயிலுக்குச் செல்லுங்கள் .அங்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஒரு தீபம் ஏற்றி வாருங்கள். வாரம் ஒரு முறை உணவில்லாமல் தவிக்கும் ஒருவருக்கு உணவு அளித்து விட்டு சாப்பிடுங்கள்..
மிதுனம்
சாதகங்கள்: எதைத் தொட்டாலும் ஒரு பின்னடைவு இருப்பதாக நீங்கள் கருதிக் கொண்டிருக்கிறீர்கள். உண்மை அது அல்ல. கிரக தோஷத்தால் விளைவதை விட உங்கள் கவன குறைவால்தான் சில நேரங்களில் அப்படி ஏற்படுகிறது. உண்மையில் இப்பொழுது உங்களுக்கு சாதகமான நிலையில் சில கிரகங்கள் மாறி வருவதை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.வெகு காலமாக வாங்க வேண்டும் என்று நினைத்த பொருள் வாங்கி விடுவீர்கள். சகோ தரவகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். பயணங்களின் மூலம் ஆதாயம் உண்டு. மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் அடைவார்கள். ஒன்பதில் சுக்கிரன் இருப்பதால், கணவன் மனைவி உறவுகள் நன்றாகவே இருக்கும்.
கவனம் தேவை: ராசிநாதன் அஷ்டமத்தில் இருக்கிறார். ஏராளமான மனக்கவலைகளை கொடுப்பார். கொஞ்சம் கவனமாக இல்லா விட்டால் நம் கஷ்டத்துக்கு நாமே காரணமாகி விடுவோம் .யோசித் துச் செய்யுங்கள்.அவசரம் ஆபத்து.
பரிகாரம்: பசுமையான துளசி மாலையை பெருமாள் கோயிலுக்கு ஒவ்வொரு புதன் கிழமையும் சமர்ப்பியுங்கள். உடல் ஊனமுற்ற ஒருவருக்கு உங்களால் என்ன முடியுமோ, அந்த உதவியைச் செய்யுங்கள்.
கடக ராசி
சாதகங்கள்: எட்டாம் இடத்து சுக்கிரன் சில எதிர்பாராத நன்மை களைச் செய்வார். உங்களுடைய முயற்சிகளுக்கான பலன் கிடைக் கும். பண வரவு அதிகரிக்கும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்பு உண்டு. நீங்கள் நேரடியாக முடிக்க நினைக்க வேலைகள் மறை முகமாக முடியும். உங்கள் மனதில் இருந்த தயக்கமும் மயக்கமும் நீங்கும். மற்றவர்களுடைய கருத்துக்களை நீங்கள் அனுசரித்து, சற்று சமயோகிதமாக நடந்து கொண்டால், வெற்றி தான், அது குடும்பமாக இருந்தாலும் சரி, வேலையாக இருந்தாலும் சரி.
கவனம் தேவை: சூரிய பகவான் 13ஆம் தேதி முதல் அஷ்டமத்தில் பிரவேசிக்கிறார்.அலைச்சல்களை குறைத்துக் கொள்ளவும். உஷ்ண நோய்களிலிருந்து காத்துக் கொள்ளவும். உடலுக்கு சற்று ஓய்வு தரவும். பிரயாணங்களின் போது எச்சரிக்கை அவசியம்.
பரிகாரம் : அருகாமையில் உள்ள ஏதாவது ஒரு அம்மன் கோவி லுக்குச் சென்று மாலை ஐந்தரையிலிருந்து ஆறரை மணிக்குள் ஒரு விளக்கு போட்டு வாருங்கள்.
சிம்மம்
சாதகங்கள்: உங்கள் திறமை பளிச்சிடும். காரியத் தடைகள் நீங்கும். பண வரவு அதிகரிக்கும். ஆனால் அது சற்று தாமதமாக உங்களுக்குக் கிடைக்கும். கூடுதல் கவனம் இருந்தால் சிக்கல் இல்லாமல் உங்கள் காரியத்தை ஜெயித்து விடலாம். சமூகத்தில் உங்கள் அந்தஸ்தும் மரியாதையும் கூடும். திட்டமிட்ட முன் னேற்றம் உண்டு. மற்றவர்களுக்கு ஆலோசனை சொல்லும் நீங்கள் உங்கள் விஷயத்தில் கோட்டை விட்டு விடாமல் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளால் பாராட்டப்படுவார்கள். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும் வாய்ப்பு உண்டு. ஆறில் புதன் இருப்பதால் தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் பத்திரிக்கை துறை நண்பர் களுக்கு சில நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்..
கவனம் தேவை: இந்த வாரம் தேவையில்லாத அலைச்சல்கள் அலைகழிக்கும். நம்பி தேடிச் சென்றவர்கள் வீட்டில் இருக்க மாட்டார்கள். இல்லாவிட்டால் வேலைகளில் தாமதம் ஏற்படும். சோர்வு ஏற்படும். ஆகையினால் எதையும் ஒரு தரத்துக்கு இரண்டு தரம் நன்கு விசாரித்துவிட்டு எந்த வேலையையும் செய்யவும்.
பரிகாரம்: அடுத்த ஆறு வாரத்திற்கு ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் ஒரு பெருமாள் கோவிலுக்குச் செல்லுங்கள். தினம் காலை 27 முறை சூரிய காயத்ரியை கிழக்கு நோக்கி நின்று சொல் லுங்கள். உங்கள் தந்தையோ அல்லது தந்தை ஒத்த வயதானவரோ இருந்தால் அவருக்கு இந்த மாதத்திற்குள் ஒரு ஞாயிற்றுக்கிழமை ஆடையை வாங்கித் தாருங்கள் ஆசி பெறுங்கள்.
கன்னி
சாதகங்கள்: உங்கள் பேச்சுக்கு ஒரு நல்ல மதிப்பு உள்ள வாரம் இது. ஆகையினால் உங்களுடைய பேச்சுக்களை நீங்கள் சமயோஜீதமாகவும் உங்களுக்குச் சாதகமாகவும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வாக்கு வன்மை உண்டு. மற்றவர்களுடைய உதவி கிடைக்கும். ஒன்பதில் செவ்வாய் இருப்பதால் சகோதரர்கள் மற்றும் சகோதரரை போன்ற நண்பர்களுடைய உதவி கிடைக்கும். தாய் வழி சொந்தங்கள் கைகொடுக்கும். அரசு மூலம் சாதகமான சில விஷயங்கள் நடக்கும் .ஆன்மீக சிந்தனை மேலோங்கும் . திருத் தல யாத்திரை செய்யக்கூடிய யோகமும் உண்டு. தொழில் வியா பாரம் சற்று வேகம் எடுக்கும். கலைத்துறையினர்களுக்கு வெளியூர் பயணங்கள் அல்லது வெளிநாட்டு பயணங்கள் குறித்த ஒப்பந் தங்கள் ஏற்படலாம். சற்று திட்டமிட்டு கூடுதலாக உழைத்தால் வெற்றி உங்கள் பக்கம்.
கவனம் தேவை: பித்தம் மற்றும் உஷ்ண நோய்களிலிருந்து சற்று காத்துக் கொள்ளவும். இதுவரை உள்ளுக்குள் இருந்த சில வியா திகள்,” நானும் இருக்கிறேன்” என்று தலை தூக்கும் .உடனடியாக அதனை கவனித்து சரி செய்து கொள்வது நல்லது.
பரிகாரம்: ஏழை மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள், எழுது பொருள்கள் வாங்கித் தாருங்கள். இலவசமாகக் கல்வி சொல்லித் தர முடிந்தால் சொல்லித் தாருங் கள்..
துலாம் ராசி
சாதகங்கள்: இதுவரை உங்கள் மனதை அரித்துக் கொண்டிருந்த கவலை நீங்கிவிடும். வீட்டில் சுப காரியங்கள் நடக்கும். சிறிய இட மாற்றங்கள் ஏற்பட்டாலும் அது உங்களுக்கு நன்மையே. எடுத்த காரியத்தை நன்கு முடித்து விடுவீர்கள்.வணிகத்தில் புதிய ஆர் டர்கள் கிடைக்கும். பணவரவு திருப்தியாகவே இருக்கும். கணவன் மனைவி கருத்து வேற்றுமைகள் நீங்கி ஒத்துழைப்பு கிடைக்கும் .அதனால் உற்சாகம் அதிகரிக்கும். நண்பர்களால் நன்மை உண்டு. சிறிய தடைகள் இருந்தாலும் கலைஞர்களுக்கு ஆதாயம் உண்டு. பேச்சிலும் செயலிலும் சற்று வளைந்து நடந்து கொண்டால் வெற்றி உங்கள் வசம்.
கவனம் தேவை: எப்பொழுதுமே நீங்கள் ஒன்றை நினைத்துக் கொண்டிருப்பீர்கள். அது அப்படியே திசை திரும்பி வேறு விதமாக நடக்கும். அப்படியும் நடப்பதற்கான ஒரு சாத்திய கூறி இருப்பதை முன்கூட்டியே நீங்கள் தீர்மானித்துக் கொண்டு மாற்று வழியைக் கண்டுபிடித்துக் கொள்ளுங்கள். எதிர்பாராத ஏமாற்றங்களை எதிர்பார்த்து தப்பித்துக் கொள்ளுங்கள்..
பரிகாரம்: அருகாமையில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்குச் சென்று பிரகார வலம் வாருங்கள். முதியவர்களுக்கு உங்களால் இயன்ற உதவியை, அது எந்த உதவியாக இருந்தாலும் சரி தவறா மல் செய்யுங்கள்.
விருச்சிக ராசி
சாதகங்கள்: இரண்டு வாரங்களாக சற்று தாமதமான பணிகள், விறு விறு என்று நிறைவேறிவிடும். எந்தக் காரியத்தைச் செய்தாலும் உங்களுக்கு அதில் ஒரு மன திருப்தியும் சந்தோஷமும் இருக்கும். ஆத்மார்த்தமான சில காரியங்களைச் செய்யக்கூடிய வாய்ப்பு உண்டு. பிள்ளைகளுக்காக அதிகம் கஷ்டப்படுகிறீர்கள். ஆனால் மிக விரைவில் வீட்டில் சுப காரியங்கள் நடைபெறும். ஐந்தில் உள்ள குரு உங்கள் லாபஸ்தானத்தைப் பார்ப்பதால் தொழில், உத்தியோகம், வருமானம் முதலியவற்றைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்.பழைய பகைகள் நட்பாக மாறும் வாரம் இது. அப்படி ஒரு வாய்ப்பு இருந்தால் அதை புதுப்பித்துக் கொள்ளு ங்கள் .வீண் வாக்கு வாதங்களில் ஈடுபடாமல் தொடர்ந்து உங்கள் இலக்கை நோக்கி நகரங்கள்..
கவனம் தேவை:. அர்த்தாஷ்டம சனி தன்னுடைய வேலையைக் காட்ட ஆரம்பித்து விட்டதை அனுபவத்தில் உணர்வீர்கள். உடல் நிலையில் மிகுந்த கவனம் தேவை. ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதிகளை அவப்பொழுது சரி பார்த்துக் கொள்ளுங்கள்..
பரிகாரம்: இந்த மாதம் முழுக்க ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ராகு காலத்தில் துர்க்கையை வணங்குங்கள். இயன்றால் ஒரு முறை பட்டீஸ்வரம் சென்று வாருங்கள் .
தனுசு ராசி
சாதகங்கள்: கைநழுவிப் போவதாக சில விஷயங்கள் தெரிந்தாலும் கூட உண்மையில் கைநழுவிப் போய்விடவில்லை. ஆனால் நீங்கள் மனம் தளர்ந்து விடக்கூடாது. கட்டுப்பாட்டுடன் எந்தக் காரியத் தையும் செய்யுங்கள். சில நேரம் தேவையில்லாத சில காரியங் களை செய்து நேரத்தை வீணடிப்பீர்கள். அதை மாற்றிக் கொள்ளுங் கள். மற்றவர்களை அனுசரியுங்கள். அதே நேரத்தில் உங்களுடைய கருத்துக்களை விட்டுக் கொடுக்க வேண்டாம். குடும்பத்தில் இருப் பவர்களுடன் நல்ல அனுசரணை என்பது உங்கள் செயல் வேகத்தை அதிகரிக்கும். சுக்கிரன் உங்கள் பொருளாதார முன்னேற்றத்தை நல்ல வகையாகவே அமைத்துக் கொடுப்பார். அவரோடு சூரியன் இருப்பதும் நன்மைதான். எனவே கவலையை விடுங்கள். செயல் வேகத்தை அதிகப்படுத்துங்கள்.
கவனம்தேவை: பொறுப்பையும் வேலைகளையும் அள்ளிக் கொடுப் பார்கள் .ஆனால் அதற்கான ஆதாயத்தை இப்போதைக்கு நீங்கள் எதிர்பார்க்க முடியாது. உங்களின் கீழ் பணிபுரிபவர்கள் சற்று அலட் சியமாகவே விசுவாசக் குறைவோடு நடந்து கொள்வார்கள். எச்சரிக் கையோடு அவர்களை கையாளவும்.
பரிகாரம்: இந்த மாதம் முழுக்க ஸ்ரீ ராகவேந்திரர் மடத்திற்குச் சென்று, மாலை சற்று அமர்ந்து தியானம் செய்து வாருங்கள் செருப்பு இல்லாத ஏதேனும் ஒரு ஏழைக்கு ஒரு காலணி வாங்கித் தாருங்கள் .
மகர ராசி
சாதகங்கள்: ஏன் இத்தனை தாமதம் ஆகிறது? நம்முடைய எண்ணங்கள் எப்பொழுது நிறைவேறும்? என்று சதா நினைத்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு அதற்கான ஒரு பிரகாசமான வாய்ப்பினை கிரக நிலைகள் ஏற்படுத்திக் கொடுப்பதை, இந்த வாரம் முதலே நீங்கள் உணரலாம். கொஞ்சம் கொஞ்சமாக உங்களுக்கு வெளிச்சம் கிடைக்கும் காலம் இது. உங்கள் கற் பனையான எண்ணங்களை விட்டு வெளியே வாருங்கள். உங்களுக்கு இயல்பான , திடமான சித்தத்துடன் எதையும் அணுகுங்கள். தொழில் வியாபாரங்கள் எல்லாம் நல்ல விதமாகவே நடந்து கொண் டிருக்கும். பணத்திலும் எந்த குறைபாடும் இல்லை .உத்தியோகத்தில் இருப்பவர்கள் நல்ல முன்னேற்றத்தை காண்பார்கள் வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். நண்பர்கள் மத்தியில் நல்ல மதிப்பு உண்டாகும். இந்த சாதகங்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள்..
கவனம் தேவை: ” வாழ்வே மாயம்” என்று தத்துவம் பேச வைக்கும் வாரம். ஆனால் உண்மையில் உங்களுக்கு எதிர்கால வாழ்வு சிறப் பாகவே இருக்கிறது. உற்சாகத்தை மட்டும் இழக்க வேண்டாம். ராசி சனி இன்னும் கொஞ்சம் தூரம் நகரட்டும். அதுவரை காத்திருங்கள்..
பரிகாரம்: அருகாமையில் உள்ள ஈஸ்வரன் கோவிலுக்குச் சனிக் கிழமை தோறும் சென்று அம்பாளையும் ஈஸ்வரனையும் வலம் வந்து வணங்குங்கள் ஆதரவற்ற பெண்களுக்கு உங்களால் இயன்ற உதவியைச் செய்யுங்கள்..
கும்பம்
சாதகங்கள்: இரண்டில் குரு. அவரே தனாதிபதி. குடும்ப அதிபதி. பொருள் காரகன். அவர் ஆட்சி பலத்தோடு இருப்பது பொருளாதாரச் சிக்கல்களைத் தவிர்க்கும் நல்ல அமைப்பு. அதே நேரத்தில் நீங்கள் பொருளாதாரத்தை அலட்சியமாக கையாளக் கூடாது என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள் .தேவையற்ற கடன்களை வாங்கக் கூடாது. புதிய நண்பர்கள் புதிய நிகழ்ச்சிகள் புதிய அனுபவங்கள் உள்ள வாரம் இது. புதிய தொழில்களைத் தொடங்குகின்ற சிந்தனையும் பிறக்கும். கலைத்துறையினர்களுக்கு நல்ல வாய்ப்புகளும் வருமானமும் அதிகரிக்கும். நீங்கள் எந்த வேலையைச் செய்தாலும் உங்கள் உடல் நிலையும் கவனத்தில் கொள்ளுங்கள்.
கவனம் தேவை: ராசியில் சூரியன் வந்து அமரப் போகிறார், நீங்கள் உங்கள் உடல் நிலையைப் பார்த்துக் கொள்ள வேண்டும். உங்கள் நண்பர்களிடம் பழகும் போது எச்சரிக்கையோடு பழக வேண்டும். தேவையில்லாத வதந்திகளை வாயால் பரப்பினாலும் சரி வாட்ஸ் அப்பில் பரப்பினாலும் சரி கட்டுப்படுத்திக் கொள்ளவும்.
பரிகாரம்: இந்த மாதம் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை ஏதேனும் பாதுகாப்பான, பலன் தரும் இடத்தில், ஒரு மரச்செடியை நடுங்கள். அருகில் உள்ள மருத்துவமனையில் வசதி இல்லாத ஏழைகளுக்கு பழமா பிஸ்கட்டோ வாங்கித் தாருங்கள்..
மீன ராசி
சாதகங்கள்: ராசி குரு தடுமாற்றத்தைத் தந்தாலும், நீங்கள் கவனத் தோடு வைக்கும் காலடிகள் அந்தத் தடுமாற்றத்தை நீக்கிவிடும். அவரே அதற்கான ஒரு வாய்ப்பினையும் தன்னுடைய பார்வை பலத்தால் தருவார். கணவன் மனைவி உறவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத்தோடு பேசி, சில நல்ல முக்கியமான முடிவு களை எடுப்பீர்கள். அது வெற்றிகரமாகவே நடக்கும் .பிள்ளைகளுக்கு தேவையான பொருள்களை வாங்கிக் கொடுப்பீர்கள். சில எதிர்பாராத பாராட்டும் கௌரவம் கிடைக்கும் வாரம் இந்த வாரம்.சில பணிகள் கூடுதலாக உங்கள் மீது சுமத்தப்படும். அதனை மனதிருப்தியோடு ஏற்றுக் கொள்ளுங்கள்.12 இல் சுக்கிரன் இருந்தாலும் அது சுகம்தான்.
கவனம் தேவை: ராசி குரு அவ்வப்பொழுது சில தொந்தரவுகளை தந்து கொண்டு தான் இருப்பார். மிக முக்கியமான விஷயமாக மறதி வந்து கஷ்டப்படுத்தும் ,.பொருட்களை ஏதாவது ஒரு இடத்தில் வைத்துவிட்டு வேறு இடத்தில் தேடுதல் போன்ற விஷயங்களில் கவனம் அவசியம். இல்லாவிட்டால், சில தவிர்க்க முடியாத பொருள் நஷ்டம் ஏற்படும்.
சந்திராஷ்டமம் :11.2.2023 பிற்பகல் 1.02 முதல் 13.2.23 இரவு 8.37 வரை சந்திராஷ்டமம் உண்டு. சந்திராஷ்டம தினத்தில் பேச்சில் கவனமாக இருக்கவும். வாதப் பிரதிவாதங்களில் ஈடுபடவேண்டாம். இயன்ற அளவு மௌனமாக இருப்பது நல்லது.
பரிகாரம்: இந்த மாதம் அருகாமையில் உள்ள ஏதேனும் முதியோர் காப்பகம், அனாதை இல்லம் சென்று உங்களால் இயன்ற பணமோ, உணவோ, ஆடையோ கொடுத்து உதவுங்கள். எதுவும் இல்லா விட்டால் சற்று நேரம் அவர்களிடம் ஆறுதலாகப் பேசிவிட்டு வாருங்கள்.
.
