திதிகளில் பதினோராவது திதி ஏகாதசி.ஒரு பக்தையின் பெயர் அது.கிருத யுகத்தில் முரன் என்னும் ஒர் அசுரன் இருந்தான்.மிகுந்த பலசாலி.ஆனால் நல்லவர்களை துன்புறுத்தியவன். தேவர்கள், முனிவர்கள் எல்லோரையும் கொடுமைப்படுத்தி வந்தான். இதனால் துன்பமடைந்த தேவர்கள் மற்றும் முனிவர்கள் மகாவிஷ்ணுவை சரணடைந்தனர்..மஹாவிஷ்ணு முரணுடன் சண்டை செய்தார்.1000 ஆண்டுகள் உக்கிரமான போர் நடந்தது. தவம் செய்து தேவர்களிடம் பெற்ற வரபலன் கெடக்கூடாது அல்லவா. எனவே விஷ்ணு காலம் தாழ்த்தி நடிக்கிறார். சற்று களைப்பாறுவது போல் போக்கு காட்டி, ஒரு குகையில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார்.. இது தான் சமயம் என்று, விபரீதம் புரியாத அசுரன் முரன் அவரைக் கொல்ல முற்பட்டான்.
அச்சமயத்தில் யோக நித்திரை கொண்ட மகா விஷ்ணுவின் உடலிலிருந்து ஒரு பெண் தோன்றினாள். அவள் அசுரனுடன் போரிட்டு அவனைக் கொன் றாள். உறக்கத்திலிருந்து விழித்த மகாவிஷ்ணு நடந்த நிகழ்ச்சிகளை அறிந்தார். அந்த பெண்ணைப் பாராட்டி ஏகாதசி என்ற பெயரை சூட்டினார் .11 வது திதி என்பதே ஏகாதசி.(ஏகம்(1) +தசம்(10)=ஏகாதசம்(11) (ஏகாதசி)
“ஏகாதசியே ! நீ தோன்றிய இந்நாளில் விரதமிருந்து என்னை வழிபடுபவர் களுக்கு பாவம் போக்கி, சகல செல்வங்களையும் தந்து, முடிவில் வைகுண்ட பதவியையும் அருள்வேன் !” என்று வரம் தந்தார்.. இந்த ஏகாதசி திதி தோன்றியது மார்கழி மாதத்தில் தேய்பிறையில் .அன்றி லிருந்து ஏகாதசி விரதம் உற்பத்தி ஆனதால் இந்த ஏகாதசிக்கு உற்பத்தி ஏகாதசி என்று பெயர். இன்று உற்பத்தி ஏகாதசி (19.12.2022) கடை பிடிக்கப்படுகிறது.
