By our staff
சிவநெறிச் செல்வவர்களாக விளங்குகின்ற 63 நாயன்மார்களின் வர லாற்றை நாம் சிந்தித்துப் பார்க்கின்ற பொழுது ஒரு சிறப்பு தெரியும் .63 நாயன்மார்களில் ஆண்டிகளும் உண்டு. அரசர்களும் உண்டு .
ஒருவர் சிவனை சிந்தையில் நிறுத்தி, சிவனடியார்களை, சிவனைப் போலவே எண்ணி பூஜித்து, உலகத்தை சிவமாக கருதி, உலக உயிர்க ளுக்குத் தொண்டு செய்யும் உயர்வுடையவர்களாக இருந்தால் அவர்கள் பிறப்பினாலோ,பெறும் கல்வியினாலோ, செல்வத்தினாலோ, பட்டம், பதவி களாலோ, உலகில் வருகின்ற வேறுபாடுகளைக் கடந்து நாயன்மார்கள் என்கின்ற உன்னத நிலைக்கு உயர்த்தப்படுகிறார்கள் .
இன்றைக்கு சதய நட்சத்திரம் .சதயம் அற்புதமான நட்ஷத்திரம். பெரும் பாலும் சோழ மகாராஜாக்களின் நட்சத்திரம் சதய நட்சத்திரமாக அமைந் திருப்பது ஒரு சிறப்பு. .சதய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மாவீரர் களாகவும், உலகை ஆளும் சாம்ராஜ்ய தலைவர்களாகவும் விளங்கு கிறார்கள்.
கோச்செங்கட் சோழ மன்னனின் பிறப்பின் பின்னணியில் ஒரு அற்புதக் கதை உண்டு.
திருவானைக்கோயில் என்கின்ற திருத்தலத்தில் நாவல் மரத்தடியில் உள்ள சிவலிங்கத் திருமேனியை வெள்ளை யானை ஒன்று தினமும் தன்னுடைய துதிக்கையால், நன்னீரைக் கொண்டு வந்து, திருமஞ்சனம் செய்து மலர் தூவி, வழிபாடு செய்தது. அப்படிச் செய்ததால் அந்த தலத்திற்கு திரு ஆனைக்கா என்ற பெயர் வந்தது
அதே நேரத்தில் அந்த மரத்தின் மேலிருந்து, எந்த தூசுகளும் லிங்கத்தின் மீது விழாமல் இருக்க, சிலந்தி ஒன்று வாய் எச்சிலை நூலாக்கி, வலை கட்டி பந்தல் போட்டது .
அடுத்த நாள் யானை, இந்தப் பந்தலைப் பார்த்து, “ யார் இப்படிச் செய்தது?” என்று கோபித்து, அந்தப் பந்தலை பிரித்துப் போட்டது. சிலந்தி பந்தலை போடுவதும் யானை அதைப் பிரித்து தள்ளுவதுமாக சில காலம் நடக்க, கோபம் கொண்ட சிலந்தி ,யானையின் துதிக்கையில் புகுந்து கடித் தது. வலி பொறுக்க முடியாத யானை நிலத்தில் விழுந்து இறந்தது .துதிக் கையை தரையில் அறைந்ததால் சிலந்தியும் இறந்தது. அந்த யானைக்கு உடனடியாக வீடு வேறு கிடைத்தது. ஆனால் அந்த சிலந்தி மறுபிறப்பாக சிவத்தொண்டு புரிய சோழ குலத்தில் மன்னனாக உதித்தது.
சோழ மன்னன் சுபதேவனின் பட்டத்தரசி கமலவதி சிறந்த சிவ பக்தை. அவளுக்கு ஜோதிடர்கள் சொன்னார்கள்.
“ குழந்தை பிறக்கும் வேளையை ஒரு நாழிகை தள்ளிப் போட்டால் குழந்தை மூன்று உலகத்தையும் ஆள்வான்.”
உடனே அரசி, “அப்படியானால், என்னுடைய கருவில் இருக்கும் குழந்தை வெளிவராத வண்ணம், என்னை தலைகீழாக ஒரு நாழிகை நேரம் தொங்க விடுங்கள் “என்று சொல்ல அப்படியே செய்தனர்.
சொன்ன வண்ணமே ஒரு ஆண் குழந்தை பிறந்தது. ரத்தம் முழுக்க பரவி கண்கள் சிவந்து பிறந்த அந்த குழந்தைக்கு செங்கண் சோழன் என்ற பெய ரும் கிடைத்தது .அவர் சோழதேசத்தை விரிவுபடுத்தி சாம்ராஜ்ய சக்கர வர்த்தியானார் . சைவ நெறி சிறக்க பல சிவாலயங்களை எழுப்பினார்.
ஏற்கனவே சிலந்தியாக தான் இருந்தபோது யானை வந்து பந்தலைப் பிரித்ததால்,( பூர்வ வாசனையால்) , யானை ஏற முடியாதபடிக்கு படிகளை அமைத்து மாடக்கோயிலாக எழுப்பினார்.சைவக் கோயில்கள் மட்டு மல்லாது வைணவக் கோயில்களையும் புதுப்பித்தார். சைவ சமயத்தை சார்ந்தவரானாலும் பிற சமயத்தையும் மதிக்கும் பெரும் குணத்துடன் திகழ்ந்தார் பலகாலம் சிவத்தொண்டு புரிந்து,அம்பலவாணன் திருவடி நிழலை அடைந்தார். அப்படிப்பட்ட கோச் செங்கனாரின் குருபூஜை தினம் (மாசி சதயம்) இன்று.
