இன்று அரச மரத்தை வலம் வந்தால்
அற்புதப் பலன்கள் கிடைக்கும்
இன்று திங்கட்கிழமை.. மாசி மாத அமாவாசை. பிரளயம் முடிந்து உலகம் தோன்றியதாகக் கருதப்படும் இந்த மாதத்தில் வருகின்ற அமாவாசை மிகச் சிறப்பானது. எந்த அமாவாசை சந்திரனுக்குரிய திங்கட்கிழமை வரு கிறதோ, அந்த அமாவாசைக்கு சோமாவதி அமாவாசை என்று பெயர். மற்ற அமாவாசைகளுக்கு இல்லாத சிறப்பு சோமாவதி அமாவாசைக்கு உண்டு. இந்த அமாவாசையில் மிகவும் விசேஷமாக நீத்தார் கடன் செய் வதோடு அன்னதானமும் செய்ய வேண்டும்.அதோடு வெல்லமும் எள்ளும் கலந்த உருண்டையும் கொடுக்கலாம்.
மாலை குலதெய்வ கோயிலுக்குச் சென்று வழிபடலாம் அல்லது இஷ்ட தெய்வ கோயிலுக்குச் சென்று வழிபடலாம்
அதைவிட முக்கியம் இந்த நாளில் அஸ்வத்த விருட்சம் என்று சொல்லப் படுகின்ற அரச மரத்தை குறைந்தபட்சம் 108 முறை வலம் வருவது நல்லது நேரம் இல்லாவிட்டால் ஏழு முறையாவது சுற்றி வர வேண்டும் மும்மூர்த்திகளின் சொரூபமாக கருதப்படும் அரச மரத்தை திங்கள் கிழமை அமாவாசை நாளில் வலம் வருவதன் மூலமாக நம்முடைய பாவங்கள் நீங்கும்
. ” மூலதோ ப்ருஹ்ம ரூபாய மத்யதோ விஷ்ணு ரூபிணே
அக்ரத: சிவ ரூபாய வ்ருக்ஷ ராஜாய தே நம:
அக்ஷி ஸ்பந்தம் புஜ ஸ்பந்தம் து:ஸ்வப்னம்
துர் விசிந்தனம் சத்ரூணாம் ச ஸமுத்பன்னம்
அச்வத்த சமயஸ்வ மே”
என்ற மந்திரத்தை கூறிக்கொண்டு சுற்றினால் நல்லது . மரத்தின் அடிப்பகுதியில் ப்ருஹ்மாவாகவும், மரத்தின் நடுப்பகுதியில் மஹா விஷ்ணுவாகவும் மரத்தின் நுனி கிளை பகுதியில் சிவஸ்வரூபமாகவும் காட்சியளிக்கும் மரங்களின் தலைவனான அரச மரமே உனக்கு நமஸ் காரம் என்பது இதன் பொருளாகும்.
