கேள்வி(1) ஐயா, எனக்குப் பல நாட்களாக வயிற்று வலி. இந்த வயிற்று வலி, ஆபரேஷன் மூலம் தீருமா? ஆபரேஷன் அவசியமா? டாக்டர்கள் ஆபரேஷன் செய்து ஆக வேண்டும் என்று சொல்கிறார்கள். இதற்கு ஒரு தீர்வு என்ன?
பதில்: உங்கள் ஜாதகம் விருச்சிக லக்னம், கடக ராசி. லக்னத்தில் சுக்கிரனும் சனியும் இணைந்திருக்கிறார்கள். ஆறாம் இடத்தில் கேது இருக்கின்றார். பதினோராம் பாவத்தில் கன்னியில் செவ்வாயும் குருவும் இணைந்திருக்கிறார்கள். 12 ஆம் பாவத்தில் சூரியன், புதன், ராகு.
இனி உங்கள் கேள்விக்கு வருவோம்.
வயிற்றைக் குறிக்கக் கூடிய இடம் ஆறாம் பாவம். அந்த ஆறாம் பாவத்தில் கேது அமர்ந்திருக்கிறார். வீடு கொடுத்த செவ்வாய் பதினோராம் பாவத்தில் கன்னியில் அமர்ந்திருக்கிறார். உடல் காரகனான சந்திரன் ஒன்பதாம் பாவத்தில் ஆட்சியில் அமர்ந்திருப்பது மிகவும் சிறப்பானது. உயர்ந்த பதவியைக் கொடுக்கக் கூடியது. அவர் மூன்றாம் பாவத்தைப் பார்ப்பதால் எதையும் தாங்கிக் கொள்ளும் சக்தி இருக்கும். நடப்பு திசை சந்திர திசை என்பதால் பெரிய அளவில் உடல்ரீதியான ஆபத்தைத் தரமாட்டார்.
இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது, ஆறுக்குடைய செவ்வாய் பதினோராம் பாவத்தில் பகை பெற்று தனது எட்டாம் பார்வையால் ரோக ஸ்தானத்தில் உள்ள கேதுவைப் பார்ப்பதும், அந்த பாவத்தை அஷ்டமாபதி புதன் ராகுவோடு இணைந்து பார்ப்பதும் சில தவிர்க்கமுடியாத சங்கடங்களைத் தரும்.
செவ்வாய்க்கு வீடு கொடுத்த புதன் விரயம் ஏறியதும், அவரோடு ராகு மற்றும் சுக்கிரன் இருப்பதும், உடல் உபாதைகளை உறுதிசெய்கின்றன. சந்திர தசை ஆட்சிபெற்று நடந்தாலும், அது ஸ்திர லக்னமான விருச்சிகத் திற்குப் பாதக ஸ்தானம் என்பதால், பாதகாதிபதி ஆட்சிபெற்று நிலை என்பதால், சந்திர திசை பல நல்ல விஷயங்களைச் செய்தாலும், இப்படிச் சில சங்கடங்களையும் ஏற்படுத்துவார். ஆனால் அதற்காக அச்சப்பட வேண்டியதில்லை. ஆபரேஷன் நல்ல முறையில் நடந்து சரியாகும்.
Jothida Kelvi Pathil Part I (to be cont.,)
send your queries with Name,DOB,palce of Birth,Time of birth in comment and get answer
