நல்ல நாள் பார்த்துச் செய்தால் நல்லதே நடக்கும்
நாம் ஜோதிடம் பார்க்கச் செல்லும் பொழுது நம்முடைய ஜாதகத்தை வைத்து பலன்களைத் தெரிந்து கொள்கின்றோம்.
ஆனால் அதைவிட முக்கியம் நாம் எப்பொழுது ஒரு காரியத்தைத் தொடங்கினால் அந்தக் காரியம் நமக்கு மங்கலகரமாக வெற்றிகரமாக நடக்கும் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.
குறிப்பாக திருமணத்திற்கு நாள் குறிப்பவர்கள் இதில் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.
முகூர்த்தம் என்பது ஒன்றரை மணி நேரம் கணவன், மனைவி பந்தம், அன்பு,சமுதாயத்தில்அவர்கள் புகழ்,அந்தஸ்து,கெளரவம்,பணம் குழந்தைப்பேறு முதலிய பல விஷயங்கள் நல்லபடியாக அமைவதற்கு முகூர்த்த நாள் மற்றும் நேர நிர்ணயம் அவசியமாகிறது .
அது மட்டுமல்ல மணமக்களின் ஜாதகங்களில் ஒரு சில குறைகள் இருந்தாலும் இந்த முகூர்த்த நேர லக்னம் நன்கு அமையுமானால் அந்தக் குறைகள் மறையும்.
குரு பலம் பார்க்க வேண்டும்.குருபகவான் அவரவர் ஜென்ம ராசிக்கு 2, 5, 7, 9, 11 ம் இடங்களில் இருக்கும் போது குரு பலம் இருப்பதாக கருதப்படுகிறது. குருபகவான் 2 ல் இருக்கும் போது திருமணம் செய்தால் அந்த தம்பதியருக்கு தனசம்பத்துகள் கிடைக்கும்.இரண்டு குடும்பஸ்தானம் அல்லவா?
5 ல் குரு இருக்கும் போது திருமணம் நடந்தால் சத்புத்திரர்கள் பிறப்பார்கள்.திரிகோண ஸ்தானம்.பூர்வ புண்ணிய ஸ்தானம்.
களத்திர ஸ்தானமான 7ல் குரு இருந்தால் பெண்கள் என்றும் தீர்க்கசுமங்கலியாக இருப்பார்கள். 9ல் இருக்கும்போது கணவருக்கு முன்னேற்றம்,பதவி உயர்வு கிடைக்கும்.
சூரிய பலம் என்பது ஒருவரின் ஜென்ம ராசிக்கு சூரியன் 3, 6, 10, 11 ம் இடங்களில் இருப்பது ஆகும். சூரிய பலம் பெண்ணைவிட ஆணுக்கு மிக முக்கியமாக கருதப்படுகிறது. தசை புத்தி பார்க்க வேண்டும்.திருமணக்காலங்கள் மணமக்களுக்கு யோகம் தரும் தசை புத்திகள் அமைந்தால் அந்தத் திருமணம் சீரும் சிறப்புமாக அமையும்.
மணமக்களுக்கு அ;டம சனி காலத்திலும் விரய சனி நேரத்திலும் திருமணத்தை தள்ளிப்போடுவது சிறப்பை தரும்.
1. சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி மற்றும் தை மாதங்ளை தேர்ந்தெடுக்க வேண்டும்.
2. வளர்பிறையின் துவிதியை, திரிதியை, பஞ்சமி, சப்தமி மற்றும் திரயோதசி உள்ள நாட்கள்.
3. இருவர் நட்சத்திரத்திற்கும் தாராபலம் ஏற்றார்போல் உள்ள நாட்கள்.
4. திருமண நாளில் சந்திரன் ஐன்ம ராசிக்கு 1, 3, 6, 7, 10, 11 ராசிகளில் இருப்பது.
5. புதன், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகள் சிறந்தது. ஞாயிறு ஆச்சாரத்தில் உண்டு.
6. அக்னி ராசிகளான சிம்மம் மற்றும் மேஷம் முகூர்த்த லக்னமாக இல்லாது இருப்பது.
7. முகூர்த்த லக்னத்திற்க்கு 7, 8 இடங்கள் திதி சூன்ய ராசிகளாக அமையாமல் இருப்பது.
8. முகூர்த்த லக்னத்திற்க்கு ஏழாமிடம் சுத்தமாக இருப்பின் நல்ல கணவன் மனைவி.அமையும். எட்டாம் இடம் சுத்தமாயின் நீடித்த திருமணபந்தம். 12ம் இடம் சயன (படுக்கை)ஸ்தானம் அல்லவா?சந்தோத்தை குறிக்கின்றது. ஆக 2,7,8ம் இடங்கள் சுத்தமாக இருக்க வேண்டும் மற்றும் எட்டாம் இடத்தை குரு அல்லது சுக்ரன் பார்க்கலாமேவொழிய இந்த இடங்களில்இவர்கள் யாரும் இருக்கக்கூடாது.
9. உபஜெய ஸ்தானங்களான 3, 6, 11 ல் தீய கிரகங்கள் இருப்பது வாழ்க்கையின் வெற்றி மற்றும் ஆதாயங்களை குறிக்கும்.
10. திருமணநாள் மணமக்களின் ஜென்ம நட்சத்திரமாகவோ, ஜென்ம கிழமையாகவோஅமையாமல் இருப்பது மிக நல்லது.
11. நவக்கிரகங்களில் அதிக சுபத்தன்மை பொருந்திய குருவும் சுக்ரனும் அஸ்தங்க தோம் அடைந்திருக்க கூடவே கூடாது.
12. ராகு காலம் மற்றும் ஏமகண்டம் போன்ற விநேரங்களை ஒதுக்க வேண்டும்.
13. அசுப கரணங்களை ஒதுக்கவேண்டும்.
14.பஞ்சகம் என்ற முறையில் நாளை பார்க்க வேண்டும். பஞ்சகமுறையில் பார்த்தால் வருடத்திற்கு மிக குறைந்த முகூர்த்த நாட்களே வரும். அப்படியானால் என்ன செய்வது என்ற கேள்வி எழலாம். விதி என்று இருந்தால் விதிவிலக்கு அல்லது பரிகாரம் என்று இருக்கும் பஞ்சக ப்ரீதி பரிகாரம் செய்து நாம் அந்த காரியங்களைச் செய்யலாம்
15. பெண்ணிற்கு மாதவிலக்குக்கு உரிய நாட்களாக அமையாமல் இருப்பது அவசியம். அதனால் பெண் வீட்டார் சொல்லும் தேதி அனுசரித்து தான் கல்யாண தேதியை வைக்கவேண்டும் இன்னும் சொல்லப்போனால் தேதி குறிப்பதே பெண்வீட்டாராகத்தான் இருக்க வேண்டும். ராமாயணத்தில் சீதா ராமன் கல்யாணத்தை ஜனக மகாராஜா தான் இந்த நாளில் திருமணத்தை வைத்தால் வசதியாக இருக்கும் என்று சொல்லி நாள் குறித்து கொடுக்கிறார் என்பதை மனதில் கொள்ள வேண்டும் மாதவிலக்கு நாளை ஏன் தவிர்க்க வேண்டும் என்று சொன்னால் அன்று அக்னி காரியம் எல்லாம் இருக்கிறதல்லவாஏனென்றால் இதில் புனிதமான அக்னியை வார்த்து இறைவனை அதில் வரவழைத்து வணங்குகிறோம்.
16.திருமண முகூர்த்த நாளுக்கு முன்னால் செய்யவேண்டிய சில அடிப்படையான பூஜைகள் உண்டு முக்கியமாக முன்னோர்களுக்கு நந்தி பூஜை செய்ய வேண்டும் சிலர் கல்யாண நாளன்று அதை செய்கிறார்கள் செலவு செய்யாமல் விட்டு விடுகின்றார்கள் அதைப்போலவே முதலில் குலதெய்வம் கோயிலுக்கு சென்று படையல் போட்டு குலதெய்வத்தின் அனுமதி வாங்கிக் கொண்டுதான் நாம் மற்ற விஷயங்களை தொடங்க வேண்டும்
17 தினங்கள் முன்பு அவரவர் குல தெய்வத்திற்குபொங்கலிட்டு பூஜை செய்து பிறகு முன்னோர்களை தியானித்துஅனுமதி பெறவேண்டும்.
இப்படி எல்லாம் எல்லா விஷயத்தையும் முறையாகச் செய்தால் சம்பந்தப்பட்ட திருமண தம்பதிகள் வாழ்வு இருந்தாலும் அது நீங்கி நன்றாக அமையும்
