Week Planet positions and astrology predictions – Raasi Palan Jan 2022
(22.1.2022 முதல் 28.1.2022 வரை)
இவ்வார கிரக நிலைகள்:
ரிஷபத்தில் ராகு, விருச்சிகத்தில் கேது, தனுசு ராசியில் சுக்கிரன்(வ) செவ்வாய், மகரத்தில் சூரியன், சனி, புதன்(வ), கும்பத்தில் குரு.
மேஷம்
சாதகங்கள்:
2,7 க்குரிய சுக்கிரன், ராசிநாதனாகிய செவ்வாயோடு இணைந்து 9 இல் இருப்பது நல்ல அமைப்பு. குடும்பப் பிரச்சினைகள் தீரும். தொழில் முயற்சி தடங்கல்கள் விலகும். செயல்களில் தடங்கல்கள் இருந்தாலும் உங்கள் புத்திசாலித்தனத்தால் முறியடிப்பீர்கள். பிள்ளை களால் நன்மை உண்டு .ஆரோக்கியம் மேம்படும். தயக்கங்களை உதறித் தள்ள வேண்டும்.தொழில் போட்டிகள் மேலோங்கும். சமாளிக்க வேண்டியிருக்கும்.
கவனம் தேவை:
வீடு போன்ற விஷயங்களில் முதலீடு செய்வதில் சற்று எச்சரிக்கை வேண்டும். மனத்தை இளக்கமாக வைத்துக் கொள்ளுங்கள். தந்தை யின் உடல்நலம் கவனிக்க வேண்டும். சோம்பல் இருக்கும். எந்த செயலையும் தள்ளிப்போட வேண்டாம். சில தேவையற்ற சந்தேகங் களும் கற்பனையான எண்ணங்களும் வரும். வார்த்தைகளை அளந்து பேசவும்.கொட்ட வேண்டாம். 27, 28ம் தேதிகளில் அதிக கவனம் எடுத்துக் கொள்ளவும் .
சந்திராஷ்டமம் :
27.1.2022 காலை 3.12 முதல் 29.1.2022 காலை 5.07 வரை உண்டு. எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வண்டி வாகனங்களை கவன மாக பார்த்துக்கொள்ளவும். வேகம் வேண்டாம்.இரவுப் பயணம் வேண்டாம்.
பரிகாரம்:
சிவன் கோயில் தரிசனம் சிக்கலைத் தீர்க்கும்..
ரிஷபம்
சாதகங்கள்:
சுக்கிரன் எட்டில் இருப்பதால் மன தைரியம் பிறக்கும். எதிரிகள் மறைவார்கள். தொல்லைகள் குறையும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். அதிர்ஷ்டம் கை கொடுக்காது. உழைப்பே உயர்வு தரும் . எதையும் எதிர்பார்க்காமல் காரியம் செய்யுங்கள்.வேலை மாற்றங்கள் இருக்கலாம். பெற்றோர் ஒத்துழைப்பு உண்டு.நின்று போன வீடு கட்டும் வேலை நடக்கும். உறவினர் வருகை மகிழ்ச்சி தரும். 23,26 ம் தேதிகளில் செய்திகள் சாதகமாக இருக்கும். எழுத்து, பேச்சு, தகவல் தொடர்பு ஆகிய துறைகளில் உள்ளவர்களுக்கு லாபகரமாக இருக்கும். நான்காம் வீட்டை குரு பார்ப்பதால், வீட்டில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். நல்லிணக்கம் இருக்கும். கலைத்துறையினர் மதிப்பு பெறுவார்கள்.
கவனம் தேவை :
தொழிலில் கவனம் தேவை. புது முயற்சிகளை இப்போதைக்கு தள்ளிப் போடுங்கள். ராசியில் ராகு. 2க்குரிய புதன், சனி இணைவு இருக்கிறது.பேச்சில் எச்சரிக்கை தேவை. விவாதங்கள் வேண்டாம். கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய தருணம் இது. “நான் மட்டுமே சரி, மற்றவர்கள் எல்லாம் தவறு” என்கிற மனப்பான்மை விட்டு விட்டால், கவனக் குறைவும் அவசரமும் பல காரியங்களை கெடுத்து விடும் என்பதால் எச்சரிக்கையோடு இருக்கவேண்டும்.
பரிகாரம்:
துர்க்கை வழிபாடு தொல்லைகளைக் குறைக்கும்.
மிதுனம்
சாதகங்கள்:
நண்பர்கள் ஆலோசனைகளைக் கேளுங்கள். புது வாழ்வுக்கான சிந்தனைகள் தோன்றும் .எதிர்காலத்திற்கான முன்னேற்றம் தரும் ஐடியாக்கள் வரும்.அதற்கான வெளிச்சம் கிடைக்கும்.உங்களை சூழ்ந்த இருள் மெல்ல விலகுகிறது. இனி உங்களுடைய நல்ல எண் ணங்கள் பூர்த்தியாகும் .கோயில் வழிபாடுகள், ஆன்மிகச் சிந்த னைகள் மனதில் ஊற்றெடுக்கும், திருமணம் போன்ற சுப காரி யங்கள் நடக்கும், குடும்பத்தினர் நன்றாக ஒத்துழைப்பார்கள். குடும்ப சிக்கல்கள் தீரும். 23 ,28 தேதிகள் நன்மைதரும். தொழில் துறையில் உள்ளவர்களுக்கு நன்மை நடக்கும். பதவி உயர்வு போன்றவை கிடைக்கும். திடீர் பணவரவு உண்டாகும். சகோதர உதவிகள் கிடைக்கும்.
கவனம் தேவை
தந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை . வேலை செய்பவர்களுக்கு சற்று இடமாற்றங்கள் இருக்கும். கூட்டுத் தொழிலில் உள்ளவர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும். 12-ல் ராகு இருப்பதால் அலைச்சல் ஏற்படும். எதிலும் நிதானத்துடன் இருந்தால், எல்லா பிரச்சனைகளையும் சமாளிக்க முடியும்.
பரிகாரம்:
ஹயக்ரீவர் வழிபாடு அற்புதமான பலன்களைத் தரும். பெருமாள் கோயிலுக்குச் சென்று அர்ச்சனை செய்யுங்கள்.
கடகம்
சாதகங்கள்:
பொருளாதாரநிலை ஓங்கும். சில எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் உங்களுக்கு கிடைக்கும். வெளிநாட்டிலிருந்து நற்செய்தி கிடைக்கும். கணவன் மனைவி உறவுகள் மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உறவினர்கள் வருகை உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் . புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். அதன் மூலமாக உங் களுக்கு நன்மைகள் கிடைக்கும். வீண் வாக்கு வாதங்களைத் தவிர்த்து விடுங்கள். 25 ம் தேதி நன்று.கடவுள் பக்தி அதிகரிக் கக்கூடிய வாரம் இது.
கவனம் தேவை:
சிந்தனையை சிதற விட வேண்டாம். பிறர் சொல்வதை கவனமாக கேட்டு முடிவுக்கு வாருங்கள். எதிலும் அவசரப்பட வேண்டாம். தாயின் உடல்நலத்தில் அக்கறை கொள்ளுங்கள் யாருக்கும் இரவல் தராதீர்கள். குறிப்பாக உங்கள் வண்டி வாகனத்தை இரவல் தர வேண்டாம். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் வருகின்ற பொழுது நிதானமாக அணுகி உடனடியாக சரி செய்து விடுங்கள்.ஷேர் மார்க்கெட்டிலும் இப்பொழுது நீங்கள் அதிக முதலீடு செய்ய வேண்டாம். வதந்திகளை நம்ப வேண்டாம். பரப்பவும் வேண்டாம். திடீர் பயணம் ஏற்படும். உடல் நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும்.
பரிகாரம்:
மகாலட்சுமியை வழிபட மகத்தான நன்மைகள் கிடைக்கும்.

