திருமணத்திற்கு முன் முதல் நிகழ்ச்சியாக நிச்சயதார்த்தம் என்ற திருமண உறுதிப்பாடு நிகழ்ச்சியை நடத்துவார்கள். நிச்சயதார்த்தம் நடத்துவதற்கு முன் அதற்கான சில பொருட்களைத் தயார் செய்து கொள்ள வே ண்டும்.
![]()
தேவையான பொருட்கள்:
மஞ்சள், குங்குமம், கல்கண்டு, கலசம், நூல்கண்டு, வத்தி, சூடம்,
சாம்பிராணி, சுத்தமான தண்ணீர், தீர்த்தத்திற்கு வாச னைப் பொருட்கள், புஷ்பம், உதிரிப்புஷ்பம், மாலைகள், பழங்கள், சர்க்கரை, மாவிலை, பஞ்ச பாத்திரங்கள், மனைப்பலகை, வத்திப்பெட்டி, குத்துவிளக்கு, தீபஎண்ணை, சந்தனம், பஞ்சாங்கம், உறுதிமொழி பத்திரம் எழுதுவதற்கான காகிதங்கள், பேனா.
காரணம், நாம் நிகழ்ச்சியை நடத்திக்கொண்டு இருக்கும்பொழுது ஒவ்வொரு பொருளாகத் தேடுவதில் நேரம் செலவழிந்து கொண்டே யிருக்கும்.
முக்கியமான இன்னொரு விஷயம்.நிச்சயதார்த்தம் செய்யும்போதே , திருமணத்திற்கான தேதியை நிச்ச யப்படுத்தி விடுவது நல்லது.
சிலபேர் திருமண மண்டபத்திலேயே அமர்ந்து கொண்டு மாற்றி மாற்றி தேதிகளை ஆராய்ந்து கொண்டிருப்பார்கள். கடைசியில் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று தேதி குறிப்பிடாமல் எழுந்துவிடுவார்கள்.
இந்த விஷயத்தில் இன்னும் சில செய்திகளைச் சொல்லியாக
வேண்டும்.பொதுவாகவே , நிச்சயதார்த்த நாளுக்கும், திருமண நாளுக்கும் அதிக இடைவெளி கொடுப்பது நல்லதல்ல.
ஆனால்,
நன்கு உணர்ந்த பெரியவர்கள் கூட பல்வேறு காரணங்களால் இந்த இடைவெளியைக் கொடுக்கும்படி ஆகிறது.
ஆண்டாள் பாசுரத்திலே நாளை வதுவை என்று மணநாளிட்டு என்று குறிப்பிடுவது, சுபம் சீக்கிரம் என்பதற்காகத்தான்!
திருமண மண்டபம் கிடைப்பதில் தாமதம், மணமகள் மணமகன் இருவரும் வே லைபார்ப்பதால் விடுமுறை கிடைப்பதில் உள்ள சிரமங்கள் அல்லது இருவரில் ஒருவர் வெளிநாட்டில்வே லை பார்க்கும்போது வந்து போவதில் உள்ள சிக்கல்கள் என இதற்குப் பல்வே று காரணங்கள் சொ ல்லப்படுகின்றன.
நிச்சயதார்த்தம் முடிந்து ஒரு வருட காலம் கழித்து திருமண தேதியை நிச்சயிப்பவர்களும் உண்டு. அதற்குள் பெண்ணும் பிள்ளையும் பேசுகின்றனர். பல திருமண ஏற்பாடுகளில் இந்த இடைவெளியும், பேச்சும் விரும்பத்தகாத பஞ்சாயத்துக்களில் கொண்டு சேர்த்ததையும் பார்க்கிறோம். சில ஏற்பாடுகள் நின்று போவதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
என்னைப் பொருத்தவரை, திருமணப் பேச்சு என்பதில் ஓர் உறுதிப்பாடு நிலைக்காக – மிக முக்கியமானவர்கள் இருபக்கமும் இரண்டு மூன்று பேர் சென்று கைத்தாம்பூலம் மட்டும் மாற்றிக் கொண்டு, திருமணத்திற்கு முதல் நாள் நிச்ச யதார்த்தம் நடத்திக்கொள்ளும் முறை சிறந்ததாகப்படுகிறது.
இன்னொன்றும் பார்க்க வேண்டும். பல குடும்பங்களில் திருமணம் மிக ஆடம்பரமாக நடத்தப்படுவதைப் போ லவே நிச்ச யதார்த்தமும் பாதி திருமண செலவுக்கு ஒப்ப ஆடம்பரமாக நடத்தப்பெறுகிறது.
பொதுவாகவே , அர்த்தமுள்ள வைதிகச் சடங்குகளுக்கு முக்கியத்துவம் தராமல் வெற்று ஆடம்பர ஆரவாரங்களுக்கும் அனாவசியங்களுக்கும் அதிக முக்கியத்துவம் தர ஆரம்பித்து விட்டோம். இது நல்லதற்கல்ல.
இனி, எளிமையான நிச்சயதார்த்த நிகழ்வினை நடத்தும் முறையைப் பார்ப்போம். மணமகன் பெற்றோர், மணமகள் பெற்றோர், இருவர் குடும்பத்திலும் உள்ள பெரியவர்கள், வீட்டு மாப்பிள்ளைகள், தாய் வழிச் சொ ந்தங்கள் – மண மேடையில் அமர வேண்டும். வீட்டில் நடந்தால் கொஞ்சம் விசாலமான இடத்தை தூய்மைப்படுத்தி, மெழுகி கோலமிட்டு அமரலாம்.
கிழக்குப் பார்த்து குத்து விளக்கு ஏற்றவும். கலசத்தில் நீர் நிறைத்து, பச்சமுது (பச்சரிசி) பரப்பி மாவிலை கொத்து சொருகி, தேங்காய் வைக்கவும். அதற்கு மஞ்சள், குங்குமம், பொட்டு இட்டு, பூச்சரம்
சாற்றவும்.
ஓர் தாம்பாளத்தில் மஞ்சளில் விநாயகரை/விஷ்வக்சேனரை எழுந்தருளச் செய்து, பூஜையை ஆரம்பிக்கவும். பெற்றோர்கள் உட்கார வைக்கும்போது, சுற்றிலும் அவரவர்கள் வீட்டு மாப்பிள்ளைகள், தயாதிகள், தாய் வழி சொந்தங்கள், ஊர்பெரியவர்கள் முக்கியமானவர்கள் இவர்களை அமர வைக்க வேண்டும்.
நிச்சயதார்த்தம் செய்துவைக்கும் புரோகிதர், எப்படி மாப்பிள்ளைக்கும் பெண்ணுக்கும் நிச்சயம் செய்தார்கள் என்பதை ஒரு கதையாகக் கூறுவார். மரபின்படி, மாப்பிள்ளை பெண் தேடவேண்டுமே தவிர, பெண் மாப் பிள்ளையைத் தேடுவது கிடையாது. (இது அக்காலம் – இக்காலத்தோடு குழப்பிக் கொள்ள வேண்டாம்).
தங்கள் பையனுக்கு மணமகளைத் தேடி ஊர் ஊராக கடவுளை வே ண்டிக்கொண்டு சென்றது போலவும், குறிப்பிட்ட ஊரில் ”சுவாமியைத் தரிச னம் செய்துவிட்டு அமர்ந்தபோது, கடவுள் அனுக்கிரகமாக உள்ளூர் பெரியவர் விசாரித்தது போலவும், அப்போது வயது வந்த தங்கள் பையனுக்கு நல்லதொரு பெண்ணைத் தேடிக்கொண்டிருப்பதாகவும், உடனே பெரியவர் இவர்கள் பக்தி, ஆசாரம், குடும்பம், கோத்திரம் விசாரித்து, இவர்களுக்கு ஏற்ற பெண் உள்ளூரில் இருப்பதாகச் சொல்வதாக கதை நீளும்.
எப்படிப் பையனுக்கு பெண்ணை தேடவே ண்டும், எப்படி பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடவேண்டும் என்பதை இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ளலாம்.எந்தச் சம்பவமோ நிகழ்வோ – அதன் பின்னணி மூலம் நாம் சில விஷயங்களைத் தெரிந்து கொள்கிறோம். அனுபவம் பெறுகிறோம் என்று பார்க்க வேண்டும்.
இந்த விஷயத்தில் காதல் திருமணத்தைப் பற்றியும் ஒரு வார்த்தை. திருமங்கையாழ்வார் ஒரு நாள் குமுதவல்லி நாச்சியாரைப் பார்க்கிறார். பெண் பிடித்து விடுகிறது. நேரடியாக குமுதவல்லியின் பெற்றோரிடம் பேசு கிறார். குமுதவல்லி சில நிபந்தனைகளை விதிக்க, அதனை ஏற்றுக் கொண்டு திருமணம் நடக்கிறது.
அடுத்து நிச்சயதார்த்த நிகழ்வுக்கு வருவோம். எதிரெதிரே மண மக்களின் பெற்றோரை அமரவைத்து, சந்தனம் போன்றவற்றைத் தந்து திலகமிட்டு, புஷ்பமாலைகளை அணிவித்து தாம்பூலத்தட்டை மாற்றிக் கொள்ளச் செய்ய வேண்டும்.
ஸ்ரீமந் நாராயணன், பஞ்ச பூதங்கள், ஆசார்யர்கள், பாகவதர்கள், உறவினர்கள் சாட்சியாக இந்த நிச்சயதார்த்தத்தை நடத்திக் கொள்கிறோம் என்று சொல்ல வேண்டும்.(இன்னாரின் கொள்ளுப்பேத்தியும், இன்னாரின் பேத்தியும், எனது குமாரத்தியுமான இந்தப் பெயருள்ள கன்னியை)
இன்னாரின் கொள்ளுப்பேரனும், இன்னாரின் பெயரனும், இன்னாரின் குமாரனுமாகிய இந்தப் பெயருள்ள வரனுக்கு கன்னிகாதானம் செய்ய நிச்சயிக்கிறோம்.
இப்படியே மணமகன் பெற்றோர் மாற்றிச் சொல்ல வேண்டும். மூன்று தடவை தாம்பூலம் மாற்றிக் கொள்ள வேண்டும்.இதற்கடுத்து மணமகளை அழைத்து, புடவை, பூ, மங்கலப்பொருள் தட்டினை கொடுத்து கட்டி வரச்செய்ய வேண்டும். புஷ்ப மாலை சூட்ட வேண்டும்.
ஆசிர்வாதம் செய்த பிறகு பெண்ணுக்கு நலங்கு இடவேண்டும். பின்பு மஞ்சள் ஆரத்தி எடுக்க வேண்டும். வந்திருப்பவர்களுக்கு சந்தனம், தாம்பூலம் வழங்க வேண்டும்.
மாப்பிள்ளை அழைப்பு ஏன்?
மாப்பிள்ளை அழைப்புஎன்பது திருமணம் நடக்கும் இடத்துக்கு மாப்பிள்ளையை உரிய மரியாதையுடன் ஊர்வலமாக அழைத்து வரும் சடங்கு.
அந்த காலத்தில் கல்யாணம் என்றாலோ எல்லோருக்கும் கொண்டாட்டந்தான். வீட்டின் முன்பாக முகூர்த்தக் கால்நட்டு தென்னை ஓலையில் பந்தலிட்டு பந்தல் முழுவதும் மாவிலைத்தோரணங்கள் கட்டி,வாசலின் இருபுறமும் தழைய தழைய குலையுடன் கூடிய வாழை மரங்களைக் கட்டி, மின்விளக்குகளால் அலங்காரம் செய்து ஜொலிக்கும் இடமாக திருமண வீடு இருக்கும்.அப்போது கல்யாண மண்டபங்களில் திருமணம் இல்லை..
பெரும்பாலும் அப்போது வீடுகளில் தான் கல்யாணம் நடக்கும். வீடு சற்றுச் சிறியதாக இருந்தால் அந்தத் தெருவில் யார் வீடு பெரிய வீடோ அவர்கள் இந்த திருமணத்திற்காக வீட்டை உபயோகப்படுத்திக் கொள்ளச் சொல்வார்கள்.
எங்கள் தெருவில் உள்ள 2,3 பெரிய வீடுகளில் 1970 வரைக்கும் கூட ஒரு 150, 200 கல்யாணங்கள் நடந்த வீடுகளாக இருக்கும் என நினைக்கிறன்..
அதைப்போலவே பாய், தலைகாணி முதலியவற்றை எல்லாம் மற்ற வீடுகளில் இருந்து இரவல் வாங்கி உபயோகப் படுத்திக் கொள்வார்கள், பிறகு திருப்பித் தந்து விடுவார்கள்.
இன்றைக்கு மக்கள் தனித்தனித் தீவுகள் ஆகிவிட்டோம். கல்யாண மண்டபங்கள் பெருகிவிட்டன. அவ்வளவு பெரிய மண்டபத்தில் கூட வசதி போதவில்லை என்று சொல்லி நகரங்களுக்கு வெளியே பெரிய மைதானங்களில் பந்தல் போட்டு திருமணம் செய்யக் கூடியவர்களும் இருக்கிறார்கள் இந்த ஆடம்பரத்தில் ஆடம்பரம் தான் பெரிதாக இருக்குமே தவிர ,உண்மையான கலாச்சார பண்பாடு, அது தரும் மகிழ்ச்சிகள் இருப்பதில்லை.
அதேபோல் கல்யாணத்திற்கு முதல் நாள் மாலை மாப்பிள்ளை அழைப்பு எனும் ஜானவாசம் நிகழ்ச்சி வெகுவிமர்சையாக நடக்கும். இந்நிகழ்ச்சியில் மாப்பிள்ளையை ஊராரும் பார்க்கும் வண்ணம் நீண்டகாரில் ஊர்வலமாக அழைத்து செல்வது வழக்கம். சிலர் குதிரைமீது மாப்பிள்ளையை ஏற்றி ஜானவாசம் வருவதும் உண்டு.
திருமணம் செய்துகொள்வதற்கு முன் தனியாக தன்னை அலங்கரித்துக்கொண்டு உறவினர்களுடன் குதிரை மீது ஆரோகணித்து அல்லது அலங்கரிக்கப்பட்ட காரில் பெண் வீட்டுக்கு மாப்பிள்ளை செல்வார். ஊரார் எல்லாம் “இவர் தான் மாப்பிள்ளை. நம் ஊரில் இந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்” என்பதை பார்த்துத் தெரிந்து கொள்வார்கள். அவர் பெண்ணின் வீட்டு வாசலில் போய் நின்றதும் ஆரத்தி எடுப்பார்கள் திருஷ்டி சுத்தி போடுவார்கள். சிதறு தேங்காய் உடைப்பார்கள்.
இந்த ஊர்வலத்தின் போது நாதஸ்வரக் காரர்கள் போட்டிபோட்டுக்கொண்டு நாதஸ்வரம் வாசிக்க ரம்மியமாக இருக்கும். திருமணம் செய்து கொள்வதற்கு முன்னால் தனியாக குதிரை மீது சென்ற மாப்பிள்ளை திருமணம் முடிந்து எல்லாச் சடங்குகளும் முடிந்தவுடன் சாரட் வண்டியில் இருவராக ஊர்வலம் வர ஒவ்வொரு வீட்டிலும் அவர்களுக்கு உபசாரம் செய்வது அத்தனை மகிழ்ச்சியான அனுபவமாக இருக்கும்.
இப்பொழுது அந்த கலாச்சாரம் இல்லாமல் போய்விட்டது. திருமணம் முடிந்தவுடன் மணமக்கள் இருவரும் இணைந்து ஊர்வலம் போக வேண்டும் என்பதை ஆண்டாள் ஒரு பாசுரத்தில் சொல்லுகின்றாள் . திருமணம் முடிந்தவுடன் கண்ணனோடு நான் யானை மீது ஊர்வலம் சென்றேன் என்று ஆண்டாள் பாடுகின்றாள் .
குங்கும மப்பிக் குளிர்சாந்தம் மட்டித்து
மங்கல வீதிவ லம்செய்து மணநீர்
அங்கவ னோடுமு டஞ்சென்றங் கானைமேல்
மஞ்சன மாட்டக்க னாக்கண்டேன் தோழீநான்.
திருமணத்திற்காக அலங்காரமாக தோரணம் கட்டப்பட்ட வீதிகளில் ,கண்ணனோடு ஆனை மீதேறி (பாருங்க பெண் தனியா ஊர்வலம் வரல..கணவனோடு வருகிறாள்..இவர் தாம் என் கணவர் இவள் தாம் என் மனைவி என்று ஊருக்குப் பறை சாற்ற வலம் வருகின்றனர்.)
தீக்குண்டத்தில் தீ வளர்த்து வலம் செய்து பொரிமுகம் தட்டி முடிச்ச களைப்பு இருக்குமல்லவா..ஆதலால்உடல் முழுவதும் குங்குமம் அப்பி, குளிர்ச்சியான சந்தனமும் பூசி நறுமணம் மிக்க நீரினைக் கொண்டு ,அவள் தன் கணவன் கண்ணனோடு வருகின்ற வேளையிலே ,திருமஞ்சனம் செய்யக் கனவு கண்டாளாம் ஆண்டாள்.என்பது இந்த பாசுரத்தில் பொருள்.இதில் மாப்பிள்ளையின் பதட்டம் இருக்கும்.ஆதியும் சுவையாக ஆண்டாள் சொல்கிறாள்..
ஆண்டாள் அருளிய நாச்சியார் திருமொழியில் ஒரு பாடல்.
கதிரொளி தீபம் கலசமுடன் ஏந்தி
சதிரிள மங்கையர் தாம் வந்தெதிர் கொள்ள
மதுரையார் மன்னன் அடிநிலை தொட்டு எங்கும்
அதிரப் புகுதக் கனாக் கண்டேன் தோழீ நான்
என்பது ஆண்டாள் வர்ணிக்கும் மாப்பிள்ளை அழைப்புப்பாடல்.
ஒரு கவிதை படிக்கும் பொழுது அதன் சுவை தெரிய வேண்டும்.
அதிலிருந்து கற்பனை விரிய வேண்டும் .பாடலுக்கு நயம் மட்டும் சொன்னால் போதாது. அந்த நயத்திற்குப் பொருத்தமும் சொல்ல வேண்டும் உலகியல் உண்மைகளும் உளவியல் உண்மைகளும் அந்த உரையில் துலங்க வேண்டும்.
ஆண்டாள் இதில் அற்புதமான சித்திரத்தைக் காட்டுகின்றாள்.
ஒரு திருமண மண்டபம்.நன்கு அலங்கரிக்கப்பட்டிருக்கின்றது.
அந்த மண்டபத்தில் மாப்பிள்ளை அழைப்பு நடந்துகொண்டிருக்கிறது.பெண் ஆவலோடு அமர்ந்திருக்கின்றாள்.
மணமகன் என்ன சாதாரணமானவனா..?.
நினைவுகளில் முகம் வந்து வந்து மறைகிறது.இப்போது நேரில் வரப்போகிறான்.இதோ கொஞ்ச நேரம்.பிறகு……… கொஞ்சும் நேரம்.
வெட்கம் தலையைத் தாழ்த்தச்சொல்ல ஆசையோ வதனத்தில் உள்ள விழிச்சுடரை வாசல் பக்கம் திருப்புகிறது.
அதுவும் தான் விரும்பிய மாப்பிள்ளை கிடைத்துவிட்டால் பெண்ணுக்கு அதிக உற்சாகம்.
மிகுந்த எதிர்பார்ப்பு. எப்பொழுது மாப்பிள்ளை வருவார் என்று மேடையிலே காத்திருக்கின்றாள்.
இந்த மனநிலையோடு இந்த பாசுரத்தில் லயிக்க வேண்டும்.
பெண்வீட்டுக்காரர்கள் யாரோ சொல்கிறார்கள்.
அம்மா மாப்பிள்ளை இதோ சற்று நேரத்தில் மண்டப வாசலுக்கு வந்து விடுவார். மங்கையர்கள் எல்லாம் வரவேற்கத் தயாராகுங்கள்.
மங்கையர்கள் தயாராகிவிட்டார்கள்.
அழகான தீபங்களை ஏந்திக்கொண்டு மங்கலமாக மாப்பிள்ளையை வரவேற்க வாசலுக்குச் செல்லுகின்றார்கள்.
எல்லோருடைய பார்வையும் வாசலிலே இருக்கிறது. பெண்ணின் பார்வையும் வாசலிலே இருக்கிறது .மிகுந்த ஆர்வமாக எப்பொழுது மாப்பிள்ளை வருவாள் என்று காத்துக்கொண்டிருக்கிறார் இவளுடைய உள்ளமும் தடக் படக் கென்று அதிர்ந்து கொண்டிருக்கிறது.
இதோ மாப்பிள்ளை வந்து விட்டான்.இது வரை ஒழுங்காக நடந்து வந்த மாப்பிள்ளை ………….ஏன் இத்தனை பதட்டம்?………அவன் தடதடவென்று நடந்து வரும் போது இடையில் அங்கங்கே சில நாற்காலிகள் சரிந்து விடுகின்றன.
எங்கும் அதிர புகுந்தான் என்கிற வரியை இந்த இடத்தில் நாம் சிந்திக்க வேண்டும்.
ஆண்டாள் தன் உள்ளத்தின் அதிர்வைச் சொல்லுகின்றாளா அல்லது மாப்பிள்ளையின் அதிர்வைச்சொல்லுகின்றாளா அல்லது எங்கும் என்றதால் இருவரின் அதிர்வுகளையும் இணைத்துச் சொல்கின்றாளா…?
சரி. இங்கு அதைவிட முக்கியமான கேள்வி.
இந்த அதிர்வு ஏன் வந்தது ?
இவன்(கண்ணன்) அவளைப்(ஆண்டாள்) பார்க்க ஏங்கி, சூழ்நிலையை மறந்து, ஆவலில் தடதடவென வந்தானாம் என்று காட்சிப்படுத்துகின்றாள் ஆண்டாள்.
ஆர்வம், பதற்றம்,………. அதிர்வுக்கு – இது தான் காரணம்.
அடுத்து இது ஒரு காதல் திருமணம்.
இதிலே ஒரு சிக்கல் என்ன என்று சொன்னால் பெண் பெரியாழ்வாராகிய அந்தணரின் பெண்.
இவன் ஆயர்குலத்தில் அவதரித்த கண்ணன்.
பட்டரின் மனம் புரிந்த அளவுக்கு தன் மாமனாராகிய அவர் மரபு புரியவில்லை.
பழக்க வழக்கம் மாறுகிறது.தட்டு வேட்டிய கட்டிய இடையில் பஞ்சகச்சம் ஏறுகிறது .
நவீன உடை அணியும் இக்கால இளம் பெண்கள் திடீரென சேலை கட்டினால் நடக்க தடுமாறுவது போல நடந்தான் கண்ணன்.
புது இடம். புது உறவு. புது பழக்கம். புது ஆடை.
புதிதாகப் பழகும் போது ஏற்படும் பதற்றம். அதிர்வு.
அவன் அதிர வந்தது எப்படி இருந்தது என்றால் முற்காலத்தில் வாமனன் மகாபலியிடம் மூன்றடி மண் கேட்டு அவனுடைய யாக பூமியிலே வந்ததுபோல் இருந்தது என்று ஒரு உவமையோடு உரை செய்தார்கள்.
உவமை சொல்லும் போது எச்சரிக்கை வேண்டும்.
வாமனன் நடக்க ஏன் பூமி அதிர வேண்டும் என்ற கேள்வியை கேட்டு விட்டார்கள்.
என்ன விடை சொல்வது.?வாமனன் சிறு பிள்ளையாக இருந்தாலும் சர்வேஸ்வரன். அதனால் அவன் பாதம் பட்டு கடலோடு சேர்ந்த பூமி நெளிந்தது என்று உரை சொன்னார்கள்.இது ஏற்புடைய உரையாக பலருக்கும் தெரியவில்லை.
நஞ்சீயர் என்கிற உரையாசிரியருக்கும் இவ்வுரையில் திருப்தி இல்லை. ஆகையினாலே தன் ஆசிரியரான பராசரபட்டர் என்கிற மேதையிடம் இக்கேள்வியை நஞ்சீயர் எழுப்பினார்.
அதற்கு அவர் அழகான பதில் சோன்னார்
இதுவரை பகவான் யாசகம் கேட்டதில்லை. இப்பொழுதுதான் இந்திரனுக்காக மகாபலியிடம் யாசகம் கேட்கிறார்.எல்லோருக்கும் கொடுத்துப் பழக்கப் பட்டவன் ஏதோ ஒரு நிலையில் வாங்கும்பொழுது கூச்சப்படுவான்.அப்போது அவருக்குப் பேச்சு வராது. நடை தடுமாறும்.அதனால் வாமனன் பதட்டத்தோடு வந்தான் என்றார் பட்டர்.
மூன்றடி மண் கேட்ட வாமனனுக்கே இந்த பதட்டம் என்றால் மகாபெரியவரான பெரியாழ்வாரின் பெண்ணை அடைய எத்தனை பதட்டம் கண்ணனுக்கு இருக்கும்.?
அந்தப் பதட்டத்தால் ஏற்பட்ட அதிர்வு தான் இது .
வாமனனுக்கு ஒரு பதட்டம்.கண்ணனுக்கு ஒரு பதட்டம்.
ஆண்டாளுக்கு கண்ணன் வந்த அந்த காட்சியில் கொண்டாட்டம்.
இக்கொண்டாட்டம் தான் அப்பாசுரத்திலே பரிபூர்ணமாக இருக்கிறது.
மாப்பிள்ளை அழிப்பு எதனை முக்கியம் என்பதை உணர்த்தும் இலக்கியச் சான்று இது.
இந்த மாப்பிளை அழைப்புக்கு இன்னொரு நுட்பமான காரணமும் சொல்கிறார்கள்.
பெரும்பாலும் பெண்கள் வீட்டில்தான் திருமணம் நடக்கும்.இந்த காலம் போல் இல்லாது,அப்போது மற்றவர்கள் சுகம்,துக்கத்தில் அந்த அந்த ஊர்கார்ர்கள் பங்கு கொள்வதுடன் நல்லது,கெட்டது இவற்றை மற்றவர்களுடன் கலந்து கொள்வார்கள்.தன் மகளுக்கு பார்த்த மாப்பிள்ளையை முதல் நாள் இரவு ஊரை சுற்றி தனியாக அமர வைத்து கல்யாணம் நடைபெறும் இடத்திற்கு அழைத்து வருவார்கள்.அப்போது அந்த மாப்பிள்ளையை பார்க்கும் ஊர் மக்கள் யாராவதுஅவரை பற்றி வெளியூர் சென்றவர்கள் விபரம் அறித்தவர்கள், ஏதாவது நல்லது கெட்டது பற்றி அறிந்திருந்தால், அதை எனக்கு உடன் தெரிவிக்கவும் என்று கூறாமல் கூறுவதற்க்கு தான் இந்த சடங்கு. அப்படி கெட்ட செய்திகள் ஏதாவது மாப்பிள்ளையை பற்றி அறிந்தால் உடன் அந்த செய்தியை, மணமகள் வீட்டாருக்கு தெறிவித்து திருமணத்தை நிருத்தி விடுவார்கள்.நமக்கு ஏன் ஊர் வம்பு எண்று ஒதுங்கவும் மாட்டார்கள்,பொய்யான தகவலும் தரமாட்டார்கள்.அதனால் தான் திருமணத்திற்கு முதல் நாள் இந்த சடங்கு செய்யப்பட்டது.
