எப்பேர்பட்ட மனிதர் வாழ்வும் கொஞ்சம் ஏற்ற இறக்கத்தோடு இருக்கும். யாரும் நிரந்தரமாக இருந்ததாக சரித்திரத்திலே இல்லை. சேர சோழர்களாக இருக்கட்டும், முகலாயர்களாக இருக்கட்டும் இதை தெரிவிப்பது தான் இந்த பாசுரம் .
ஒரு நாயகமாய் ஓட உலகுடன் ஆண்டவர்
கருநாய் கவர்ந்த காலர் சிதைகிய பானையர்
பெருநாடு கான இம்மையிலே பிச்சைதான் கொள்வர்
திரு நாராணன் தாள் காலம் பெற சிந்தித்து உய்ம்மினே
நிரந்தரமின்மையை நிரந்தரம் செய்வது ஏகாதசி
ஏகாதசி விரதம் இருப்பவர்களை பகவானே தேடி வருகின்றார்.
ஜலம் என்றால் தீர்த்தம். நிர் என்றால் இல்லை என்று அர்த்தம். வாயில் ஒரு சொட்டு தண்ணீர் கூட பருகாமல் இருக்கக்கூடிய ஏகாதசி விரதத்துக்கு நிர்ஜல ஏகாதசி என்று பெயர் .ஆண்டு தோறும் ஜ்யேஷ்ட சுக்ல பக்ஷத்தில், அதாவது ஆனி மாதத்தில் வளர் பிறையில் வரக்கூடிய ஏகாதசி நிர்ஜல ஏகாதசி என கடைப் பிடிக்கப்படுகிறது.சில முறை வைகாசியிலேயே இந்த விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது.இதில் மற்றொரு விஷயம் என்னவென்றால், நிர்ஜல ஏகாதசி, பீம ஏகாதசி அல்லது பாண்டவ ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது. ஏனெனில் இந்த விரதத்தை பாண்டவர்கள் ஐவரும் கடைப்பிடித்தனர். இந்த ஒரு ஏகாதசி விரதம் இருந்தாலே எல்லா ஏகாதசி பலனும் கிடைத்து விடுமாம்.ஒரு வேளை கூட சாப்பிடாமல் இருக்க முடியாது என்று எண்ணிய பீமசேனனுக்கு “பீமா, மற்ற ஏகாதசி விரதம் இருக்க உன்னால் முடியாவிட்டால் இந்த ஒரு நாளாவது இரு” என்று வியாசர் சொல்லியதைக் கேட்டு இருந்ததால் பீம ஏகாதசி என்றும் சொல்வார்கள். இந்த ஏகாதசி விரதம் இருப்பவர்களைத்தேடி பகவான் வருகிறான். இன்று சொல்ல வேண்டிய பாசுரம் .
ஓயும் மூப்புப் பிறப்பிறப்புப் பிணி
வீயுமாறு செய்வான் திருவேங்கடத்து
ஆயன் நாள்மலராம் அடித் தாமரை
வாயுள்ளும் மனத்துள்ளும் வைப்பார்கட்கே
அலர்ந்த திருவடித்தாமரைகளை வாக்குள்ளும் மனத்துள்ளும் வைப்பவர்களுக்கு பலவீனத்தைக் கொடுக்கும் வயோதிகம், பிறப்பு, இறப்பு, நோய்கள் ஆகியவை அழியும்படிச் செய்பவன் திரும லையிலே வாழும் கண்ணன் எம்பெருமான் என்பது இதன் பொருள்.
தாள் பரப்பி மண் தாவிய ஈசனை
நீள் பொழில் குருகூர்ச் சடகோபன் சொல்
கேழில் ஆயிரத்து இப்பத்தும் வல்லவர்
வாழ்வர் வாழ்வெய்தி ஞாலம் புகழவே
தன் திருவடிகளைப் பரப்பி பூமியை அளந்துகொண்ட ஸர்வேச் வரனை, உயர்ந்த சோலையையுடைய ஆழ்வார்திருநகரிக்குத் தலை வரான நம்மாழ்வார் அருளிச்செய்த ஒப்பில்லாத ஆயிரம் பாசுரங் களுள் இந்தப் பத்து பாசுரங்களையும் அர்த்தத்துடன் சொல்ல வல் லவர்கள் கைங்கர்ய ஸாம்ராஜ்யத்தைப் பெற்று உலகம் புகழும்படி வாழ்வார்கள்.என்பது இதன் பொருள்.இந்த நிர்ஜல ஏகாதசி திதியில் தான்பிரம்ம தேவர் குபேரனைத் தோற்றுவித்தார் என்பது ஐதீகம். மகாவிஷ்ணுவின் ஆணைப்படி குபேரன் நிதிக்கு அதிபதி ஆனார்.
