புரட்டாசி முதல் வாரம் ராசி பலன் – பகுதி – 1
Purattasi 1 Week Raasi Palan Weekly Astrology Predictions in Tamil – Part – 1
(25.9.2021 முதல் 1.10.2021 வரை)
இவ்வாரகிரகநிலைகள்: இந்தவாரம் ரிஷபத்தில் ராகு இருக்கிறார். கன்னியில் சூரியன் செவ்வாய் இருக்கிறார்கள் .துலாத்தில் சுக்கிரன் புதன் இருக்கிறார்கள். விருச்சிகத்தில் கேது இருக்கிறார் மகரத்தில் குரு மற்றும் சனி வக்கிரநிலையில் இருக்கிறார்கள்.
மேஷம்(Aries)
கம்பீரமும் ஆற்றலும் உள்ள மேஷ ராசி நேயர்களின் ராசிநாதன் செவ்வாய் சூரியனோடு இணைந்து6 ஆம் இடத்தில் இருப்பது அற்புதம். ஆரோக்கியம், வெற்றிமுதலியவற்றைக்காட்டுகிறது.நீங்கள்எதிலும்திடமானமுடிவுகளைஎடுக்கும்தன்மையைக்காட்டுகின்றதுஇந்தகிரகநிலை. குரு பாக்கியாதிபதி அல்லவா. அவர் 10-ஆம் இடத்தில் தொழில்காரகனான சனியோடு இணைந்து நீசபங்கம் பெற்றுஇருக்கிறார். தர்ம கர்மாதி பதிகள் இணைந்து 1 0-ஆம் இடத்தில இருப்பது யோகம்தான். ஓரளவுக்கு அடுத்த இரண்டு மாதங்கள் இந்த யோகம் செயல் படத்தொடங்கும். செயலில் தடங்கல்கள் மாறும். இதுவரை இருந்த தேக்கம்மாறும். குடும்பச் சிக்கல்கள் விலகும். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு கூடும். மாணவர்களுக்கு கல்வி முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாராத செலவுகள் ஏற்படும் அலைச்சல்கள் அதிகரிக்கும். அஷ்டமத்தில் கேது2-ஆம் இடத்தில் ராகு இருப்பதால் பேச்சினால் வரும் சங்கடங்களைக் குறைத்துக் கொள்ளவேண்டும். வீண் பிடிவாதங்களையும் குறைத்துக் கொண்டால் சமாளித்துவிடலாம்.
என்ன பரிகாரம்? (Parikaaram)
ராசிநாதன்செவ்வாய், புதன்ராசியானகன்னிராசியில்சூரியனோடுஇணைந்துஇருப்பதால்காலைவேளையில்சூரியநாராயணனைநமஸ்காரம்செய்யவேண்டும். மாலையில்முருகனைவணங்குங்கள்.கந்தசஷ்டிகவசம்பாராயணம்பலனளிக்கும்.
————————————————————————————-
ரிஷபம் (Taurus)
இனிமை ,தோற்றத்தில் புதுமை விரும்பும் ரிஷபராசிக்கு 8 ,11 க்குஉரியகுரு, 9 , 10-க்குரியசனியோடுஇணைந்திருக்கிறார்.
சனியும் சுபத்துவம் பெற்று தடங்கல்களை நீக்குவதால் தொழிலும் வேலையும் சுறுசுறுப்பாக நடக்கும். ராசிக்கு அதிபதியான சுக்கிரன் 6-ம் இடத்தில்இருப்பதுஒருயோகம்தான்.5-ஆம்இடத்தில்சூரியன்செவ்வாய்இணைந்து 11-ஆம் இடத்தைப் பார்ப்பதால் நினைத்த காரியம் கைகூடும். சனியோடு குரு இருப்பது ஒரு வகை யோகம் என்றாலும், பிறிதொரு வகையில் பிரச்சனைகளைத் தருவது என்பதால் கவனம் தேவை. வருமானம் வந்தாலும் கூடுதல் செலவுகளும் வரும்.
சுக்கிரன்ஆட்சிபெற்று6-ஆம் இடத்தில் இருப்பதால் சில நேரங்களில் எதிரிகளின்கை ஓங்கும். எனவே, பிரச்சனைகளையும் செலவுகளையும் உடல் ஆரோக்கியத்தையும் முன்எச்சரிக்கையோடு அணுகவேண்டும். கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைக்கும். பணவரவு எதிர்பார்த்த படிஅமையும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு .இடமாற்ற அனுகூலங்கள் உண்டு. கணவன் மனைவி உறவுகசப்பின்றி இருக்கும். மொத்தத்தில் நல்லவாரமே இது.
என்னபரிகாரம்?(Parikaaram) செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் அம்மன் சன்னதிக்குச் சென்று மனமுருக வழிபடமகிழ்ச்சி அதிகரிக்கும். வீட்டில் நுழையும்போது வாசலில் கெஜலஷ்மியை நினைத்து வழிபட்டு உள்ளே நுழையுங்கள்.
——————————————————————————————————————-
மிதுனம்(Gemini) புதிய சிந்தனை உள்ள மிதுன ராசிநாதனும், நாலுக்குரிய சுகாதிபதி புதனும்5 ல் சுக்கிரனோடு பலமாக இருக்கிறார்கள். சூரியனும் செவ்வாயும் தொழில் ஸ்தானத்தை விருத்தி செய்கிறார்கள். குருவும் (தனம்) சனியும் (ஆயுள்) நல்லபடி அமைந்திருப்பதால் ஆரோக்கியமும் பணமும் விருத்தியாகும். களத்திரகுரு 8-ஆம் இடத்தில் மறைந்ததாலும், அஷ்டம சனி தொடர்வதாலும் குடும்பச்சூழலில் சிக்கல்கள் உருவாகாது பார்த்துக்கொள்ளுங்கள். வேலைச்சுமைகூடும். என்ன வேலை செய்வது என்று தெரியாத அளவுக்கு அடுத்தடுத்து வேலைவந்து கொண்டே இருக்கும். மாணவமாணவிகள் கூடுதல் நேரம் ஒதுக்கி, திட்டமிட்டு உழைத்தால் தான் கல்வி முன்னேற்றம் ஏற்படும் .குடும்பத்தில் நிம்மதி என்பது உங்கள்கையில் . தொழில் உத்தியோகத்தில் பிரச்சினைகள் இருக்காது. எதிர்பார்த்த செயல்கள் நடக்கும்.
என்னபரிகாரம்? (Parikaaram) ஏதேனும் சிற்றுணவை பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் அளியுங்கள். தொல்லைகள் நீங்கும். மாலை நேரம் பெருமாள் கோயிலுக்குச் செல்லுங்கள்.அச்சுதா, அனந்தா, கோவிந்தாஎன்றநாமத்தைதொடர்ந்துமனதில்உச்சரித்துவாருங்கள்.
————————————————————————————————————-
கடகம்(Cancer) அடிக்கடி மனம் மாறும் உங்கள் ராசிக்கு ஏழில் குருசனிசேர்க்கை .ராசிநாதன்சந்திரன், மேஷ ,ரிஷப, மிதுன ராசிகளில் இவ்வாரம் சஞ்சாரம் செய்வார். இதில் 25 ஆம் தேதி முதல் இருபத்திஎட்டாம் தேதி வரை காரிய வெற்றிகளும் தனவரவுகளும் இருக்கும்.திருமண நிகழ்வுகள்போன்ற சுபநிகழ்வுகள் உறுதியாகும். ஆன்மீகஉணர்வுகள் அதிகரிக்கும். ஆரோக்கியம் சீர்படும். வாரத்தின் கடைசி இரண்டு நாட்களில் காரியத்தடைகள் உண்டு. எதிர்பாரா செலவுகள் வரும். அலைச்சல்கள் உண்டு. அதனால் சிறு ஆரோக்கியபிரச்சனைகள் வரும். குழந்தைகள் விஷயத்தில் அவர்கள் செயல்களை தொடர்ந்து கண்காணிக்கவும்..வேலை, தொழில்கள் முன்னேறும். வியாபாரத்தில் சுணக்கம் நீங்கிலாபம் கூடும். அரசியல் மற்றும் கலைத்துறையினருக்கு பெரும் முன்னேற்றமும் வெற்றியும் உண்டாகும்.
என்னபரிகாரம்? (Parikaaram) “ஓம்நமசிவாய” Om Nama Shivaya மந்திரத்தை தொடர்ந்து ஜெபியுங்கள். வினைகள்தீரும். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தியை வணங்குங்கள். ஏழை குழந்தைகளுக்கு ஏதேனும் கல்விச் செலவுக்கு உதவுங்கள். இல்லாதவர்களுக்கு இயன்ற உதவிகளைச் செய்யுங்கள்.
