புரட்டாசி முதல் வாரம் ராசி பலன் – பகுதி – 1
Purattasi 1 Week Raasi Plan Weekly Astrology Predictions in Tamil – Part -1
(18.9.2021 முதல் 24.9.2021 வரை)
இந்த வார கிரக நிலைகள்: ரிஷபத்தில் ராகு ,கன்னியில் சூரியன் , கன்னியில் புதன் ஆட்சி, (22.9.21 துலாராசிக்கு மாறுகிறார்)கூட செவ்வாய், துலாத்தில் சுக்கிரன் ஆட்சி, விருச்சிகத்தில் கேது உச்சம், மகரத்தில் சனி ஆட்சிபெற்று வக்கிரம், மகரத்தில் குரு வக்ரம். அவர் நீசமான நிலையில், ஆட்சி பெற்ற சனியுடன் சேர்வதால் அவருக்கு நீசபங்கம் கிடைக்கிறது.
மேஷம் (Aries)
செவ்வாய் ஆறில்(ராசி அதிபதி) விபரீத ராஜயோகத்தைத் தருகிறார். முயற்சிகள் வெற்றி பெரும் .தன்னம்பிக்கை அதிகரிக்கும். 6 ல் சூரியன் சம பலத்தோடு இருப்பதால் பொருள் வரவு உண்டு. புதனும் 22 ம் தேதி ராசி மாறுகிறார்.ஏழில் உள்ள சுக்கிரனால் இல் லற உறவுகள் சுமுகமாக இருக்கும்.. பத்தாமிடத் தில் சனி ஆட்சி பெற்ற நிலையில் தொழில் நன்கு முன்னேறும். 2 க்குரிய சுக்கிரன் ஏழில் இருப்பதால் மனைவி மூலம் நன்மை யுண்டு.
2-ல் உள்ள ராகுவால் உடல் ஆரோக்கியத்தில் உபாதைகள் ஏற்படும்.கலைஞர்களுக்கு வாய்ப்பு குறையும்.செலவில் சிக்கனம் தேவை. பேச்சில் சுமூகம் தேவை.கவனம் செலுத்துங்கள்.
பரிகாரம்:
இல்லாதவர்களுக்கு வஸ்திர தானம் செய்யுங்கள்.மாலை “மரண ப்ரமாத நமக்கில்லை, யாமென்றும் வாய்த்த துணை கிரணக் கலாபியும் வேலுமுண்டே,கிண்கிணி முகுள சரண ப்ரதாப சசிதேவி மங்கல்ய தந்து ரக்ஷாபரண க்ருபாகர ஞானாகர சுர பாஸ் கரனே”அருணகிரி நாதர் அருளியதைப் பாட வினை தீரும்.
——————————————————————————————————————–
ரிஷபம் (Taurus)
5ம் இடத்தில் சூரியன் வலுவாக இருக்கிறார். அரசாங்க வேலை வாய்ப்பு கிடைக்கும் காலம். அரசாங்க ஆதரவு ஒப்பந்தங்களும் சாதக மாகும்.ஐந்தில் புதன் ஆட்சி பெற்றிருக்கிறார்.22ம் தேதி 6ம் ராசிக்கு (பகை,ருண,ரோக ) மாறுகிறார். பணவரவு எதிர்பார்த்தபடி அமையும் . 5ல் செவ்வாயும் சூரியனோடு இணைந்து இருக்கிறார். ஆடை ஆபரண சேர்க்கை உண்டு .இட மாற்ற அனுகூலங்கள் உண்டு.கணவன் மனைவி உறவு கசப்பின்றி இருக்கும்.
தந்தை வழி உறவுகளில் உரசல்கள் ஏற்படும். வாரத்தின் இறுதியில் 23,24 தேதிகளில் மனநிலை சற்று கலக்கமாக மாறும். காரியத் தடை , விரோதங்கள் வரும். பேச்சினால் சில விரோதங்கள் வரும். பயணங்களில் எச்சரிக்கை தேவை.வாகனங்கள் பழுதாகும்.
பரிகாரம்:
“பெருமாளே!என் கஷ்டங்களை போக்கு” என்று திருமங்கை ஆழ்வார் பாடிய ” கண்ணார் கடல்போல் திருமேனி கரியாய் ,நண்ணார் முனை வென்றி கொள்வார் மன்னும் நாங்கூர்த்,திண்ணார் மதிள் சூழ் திருவெள்ளக்குளத்துள்,அண்ணா அடியேன் இடரைக் களை யாயே” என்ற பாசுரத்தை,மாலை பாராயணம் செய்யுங்கள்.
——————————————————————————————————————–
மிதுனம் (Gemini)
நான்கில் சூரியன் புதனோடும் செவ்வாயோடும் இருப்பதால் துணிச்சலோடு முடிவெடுப்பீர்கள்.ஐந்தில் ஆட்சியில் உள்ள சுக்கிரன் பல சந்தோஷ நிகழ்வுகளைத் தருவார்.. குடும்பத்தில் இன்பத்தை ஏற்படுத்துவார். வண்டி வாகனம் வாங்கும் யோகம் நீடிக் கிறது.செவ்வாயோடு சூரியன் இணைந்து தொழில் ஸ்தானத்தை பார்ப்பதன் மூலமாக தொழில்களில் அரசாங்க ஆதரவு கிடைக்கும். சொத்து ,வீடு வாங்குபவர்கள் ஒரு முடிவுக்கு வரலாம்.
22 ம் தேதி புதன் மாறுகிறார்.சில எதிர்பாராத அவமானம் என்று மனம் வருந்தும் சம்பவங்கள் நடக்கலாம். வார துவக்கம் காரியங் களில் தடை ஏற்படும். சிறு விபத்துக்கள் ஏற்படலாம்.தேவையற்ற செலவுகள் வந்து நிற்கும்.
சந்திராஷ்டமம்
18 ஆம் தேதி மாலை 3.30 வரை சந்திராஷ்டமம். காரியங்களை யோசித்துச் செய்யுங்கள். வண்டி வாகனம் ஓட்டுவதில் மிக மிக கவனம் தேவை. இரவுப் பயணத்தை இயன்ற அளவு தவிர்க்கவும்.
பரிகாரம்:
மாலை விளக்கேற்றி பெருமாளை வணங்குங்கள்.“கல்லால் கடலை அணை கட்டி உகந்தாய் நல்லார் பலர், வேதியர் மன்னிய நாங் கூர்ச் செல்வா, திருவெள்ளக்குளத்து உறைவானே, எல்லா இடரும், கெடுமாறு அருளாயே”என்று திருமங்கை ஆழ்வார் தன் துன்பம் நீங்க பாடிய பாடலைப் பாடுங்கள்.

கடகம் (Cancer)
23 மற்றும் 24ம் தேதிகளில் சந்திரனால் உங்களுக்கு மகிழ்ச்சியும் வருமானமும் கிடைக்கும். ராசிக்கு 3ல் சூரியன் வலுவாக இருப் பதால் எதையும் சமாளிப்பீர்கள். 4 ல் சுக்கிரன் ஆட்சியாக இருப் பதால் வண்டி வாகன யோகங்கள் வாங்குவதில் உள்ள யோகம் நீடிக்கிறது. தொழில் ஸ்தானத்தை சுக்கிரன் பார்ப்பதால் கலை , உணவு, பேன்சி தொழில்களில் லாபம் கிடைக்கும். மதிப்பும் மரியாதையும் கூடும்.
குழந்தைகள் விஷயத்தில் இவ்வாரமும் எச்சரிக்கை தேவை. ஆரோக்கியம் கெடலாம்.வார முற்பகுதியில் 22 ம் தேதிவரை மிக கவனம் தேவை. பணப் பிரச்சனைகள் ஏற்படலாம்.இவ்வாரமும் நோய் தொற்று, சளி, காய்ச்சல் முதலிய நோய்கள் ஏற்படும்.
சந்திராஷ்டமம்
18 ஆம் தேதி மாலை 3.30 முதல் 20ம் தேதி இரவு 9.30 மணி வரை காரியங்களை யோசித்துச் செய்யுங்கள். வண்டி வாகனம் ஓட்டு வதில் மிக மிக கவனம் தேவை. இரவுப் பயணத்தை இயன்ற அளவு தவிர்க்கவும்.
பரிகாரம்:
மாலை விளக்கேற்றி அம்பாளுடன் சிவபிரானையும் நினைத்துக் கொள்ளுங்கள்.“துடி கொண்ட இடை மடவாள் பாகங்கொண்டு, சுடர்ச் சோதிக் கடிச்செம்பொன் மலைபோல் இந்நாள்,குடிகொண்டு என் மனத்தகத்தே புகுந்தார் போலும்,குடந்தைக்கீழ்க் கோட்டத்து என் கூத்தனாரே “ என்ற தேவாரம் ஓத ,வினைகள் தீரும்.
——————————————————————————————————————–
சிம்மம் (Leo)
ராசிநாதன் இரண்டாமிடத்தில் நுழைகிறார்.அது அவருக்கு இடைஞ் சலான இடமல்ல. இருபத்தி இரண்டாம் தேதி வரை அவரோடு புதனும் இருக்கிறார். அதற்குப் பிறகு சூரியனும் செவ்வாயும் கன்னி ராசியில் இருக்கிறார்கள். சென்ற வாரம் அளவுக்கு இல்லா விட்டாலும் ஓரளவுக்கு வருவாய்க்கு குறைவிருக்காது. சுக்கிர னுடைய ஆட்சி என்பதால் இல்லறத்தில் எந்த பிரச்சனையும் இல்லாமல் செய்யும். இதனால் ஓரளவு மற்ற காரியங்களில் நீங்கள் கவனத்தோடு இருக்க முடியும்.
ராசிநாதன் சூரியன் இரண்டாம் இடத்தில் இருப்பதால் சில இனம் புரியாத மனக்கவலைகள் வரும். அவர் 8-ஆம் இடத்தைப் பார்ப்ப தோடு, சந்திராஷ்டமும் வருவதால், உடல்நிலையில் மிகவும் கவனம் கொள்ள வேண்டும். மருந்து மாத்திரைகள் சாப்பிடுவதில் எந்த அலட்சியமும் கூடாது.
சந்திராஷ்டமம்
20 ஆம் தேதி இரவு 9.30 மணி முதல் 23ம் தேதி காலை 6.45 மணி வரை காரியங்களை யோசித்துச் செய்யுங்கள். வண்டி வாகனம் ஓட்டுவதில் மிக மிக கவனம் தேவை. இரவுப் பயணத்தை இயன்ற அளவு தவிர்க்கவும்.
பரிகாரம்
மாலை விளக்கேற்றி, “மணியே! மணியின் ஒளியே! ஒளிரும் மணி புனைந்த அணியே! அணியும் அணிக்கு அழகே! அணுகாத வர்க்குப் பிணியே! பிணிக்கு மருந்தே! அமரர் பெருவிருந்தே! பணி யேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்தபின்னே” என்ற அபிராமி அந்தாதிப் பாடலை பாராயணம் செய்யவும்.
——————————————————————————————————————–
கன்னி (Virgo)
ராசிநாதன் புதன் 22 ஆம் தேதி வரை ஆட்சி உச்சம் பெற்று கன்னி ராசியில் இருக்கிறார்.இது மிகப்பெரிய காரிய நன்மையைத்தரும் அம்சம் ஆகும். 22ஆம் தேதி அவர் துலா ராசிக்கு மாறுகின்றார். அது அவருக்கு நட்பு ராசி என்பதால், மிக சீரிய பலன்களே இவ்வாரம் நடக்கும். ராசிநாதன் ராசியிலும் இரண்டாம் இடத்திலும் வலுப் பெறுவதால் பணம், செல்வாக்கு, குடும்பம் முதலிய விஷயங்களில் தொல்லைகள் இருக்காது. 3ல் உள்ள கேது தைரியத்தையும் பொருள்வரவையும் தருவார். தொழிலில் இருந்த தடை விலகும்.
சூரியன் கன்னி ராசியில் பிரவேசிப்பதால் உஷ்ண நோய்கள் ஏற்படும். வார இறுதியில் சில மனக் குழப்பங்களும் அலைச் சல்களும் காரியத்தடைகளும் சந்திரன் நிலைகளால் ஏற்படும் . எனவே கவனத்தோடு இருக்க வேண்டும்.
சந்திராஷ்டமம்
23ம் தேதி காலை 6.45 மணி முதல் 25ம் தேதி மாலை 6.16 மணி வரை உண்டு. காரியங்களை யோசித்துச் செய்யுங்கள். வண்டி வாகனம் ஓட்டுவதில் மிக மிக கவனம் தேவை. இரவுப் பயணத்தை இயன்ற அளவு தவிர்க்கவும்.
பரிகாரம்
மாலையில் பெருமாள் கோயிலுக்குச் சென்று கூரேசர் அருளிய “ஆர்த்தா விஷண்ணா சிதிலாச்ச பீதாகோரேஷு ச வ்யாதிஷு வர்த்தமானா ஸங்கீர்த்ய நாராயண சப்தமாத்ரம் விமுக்தது கா ஸுகினோ பவந்து”(நாராயண என்று உச்சரித்தாலே சகல வியாதி, பீடைகள் போய் விடும் என்பது பொருள் ) என்ற எளிமையான சுலோகத்தை பாராயணம் செய்யவும்.
ராசி பலனின் இரண்டாவது பகுதியியை படிக்க இங்கு கிளிக் செய்யவும்.

