திதிகளில் 13வது திதி திரயோதசி. இந்த நாளை பிரதோஷ நாள் என்பார்கள். வளர்பிறையில் ஒரு பிரதோஷமும் தேய்பிறையில் ஒரு பிரதோஷம் வரும். இந்த பிரதோஷ நாளில் விரதம் இருந்து நந்தியையும் சிவனையும் வழிபட வேண்டும் .சனிக்கிழமை வருகின்ற பிரதோஷத்தை சனி பிரதோஷம் என்பார்கள். திங்கட்கிழமை வருகின்ற பிரதோஷத்தை சோம பிரதோஷம் என்று சொல்வார்கள். அப்படிப்பட்ட சிறப்புமிக்க பிரதோஷ விரதங்களில் வரும் ஞாயிற்றுக்கிழமை வரும் விரதம் மிருத்யுஞ்ஜய பிரதோஷ விரதம். இந்த பிரதோஷ விரதம் மரண பயத்தை நீக்கும். ஆயுளை நீட்டிக்கும்.ஞாயிற்றுக்கிழமை வருகின்ற பிரதோஷ நாள் என்பதால் சூரிய பகவானுடைய அருள் கிட்டும். காலை முதல் விரதமிருந்து மாலை சிவன் கோயிலுக்குச் சென்று வணங்குவதால் துன்பங்கள் நீங்கும். நோயால் அவதிபடுபவர்கள் கோயிலுக்குச் செல்ல முடியாவிட்டாலும் ,மாலை பூஜை அறையில் ஒரு விளக்கேற்றி வைத்து, சிவபெருமானை எண்ணி கீழே, உள்ள மிருத்யுஞ்ஜ மந்திரத்தைச் சொல்லி வழிபடுவதால் நோய்கள் அகலும். கடன் தொல்லைகள் நீங்கும்.
ஓம் த்ரயம்பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்ட்டிவர்த்தனம்
உருவாருகமிவ பந்தனாத் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத் ஓம்
