63 நாயன்மார்களில் மூர்க்க நாயனார் ஒருவர்.
தொண்டைவள நாட்டுவளர் வேற்காட் டூர்வாழ்
தொல்லுழவர் நற்சூதர் சூது வென்று
கொண்டபொருள் கொண்டன்பர்க்கு அமுத ளிக்குங்
கொள்கையினார் திருக்குடந்தை குறுகி யுள்ளார்
விண்டிசைவு குழறுமொழி வீணர் மாள
வெகுண்டிடலான் “மூர்க்கர்” என விளம்பும் நாமம்
எண்டிசையும் மிகவுடையார் அண்டர் போற்றும்
ஏழுலகும் உடனாளும் இயல்பி னாரே
அடியார்களில் சாதுவான அடியார்களும் உண்டு. முரட்டுத்தனமான செயல்களால் பக்தி செலுத்தும் அடியார்களும் உண்டு. இதில் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது, அவர்கள் மனதில் விஞ்சி நின்ற பக்தியை மட்டும்தான். அடியார்களின் செயல்முறைகளை ஆராய்வதை விட, அவர்களுடைய மனதில் அழுத் தமாக வெளிப்படும் சிவபக்தியையும், சிவ நெறியையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அவர்களுடைய நிலையை உள்ளபடி புரிந்து கொள்வது மிகவும் கடினம். நம் நிலையிலிருந்து அவர்கள் நிலையை ஆராய்வதும் தவறாகவே முடியும். மூர்க்க நாயனாரின் கதையும் அப்படிப்பட்டதுதான்.
தொண்டைமண்டல நாட்டில் திருவேற்காடு என்னும் தலத்தில் வேளாளர் குலத்தில் அவதரித்தவர் மூர்க்கநாயனார். நிறைய நிலபுலன்கள் அவருக்கு இருந்தன. சிவனடியார்களை வணங்குவதும் அவர்களுக்கு அமுது படைப்பதும் என சிவத் தொண்டில் அவர் மிகுந்த ஊற்றத்தோடு இருந்தார். அதனால் அவருடைய கைப்பொருள் கரைந்தது. இனி வேறு வழி இல்லை என்றதும் ,தான் கற்ற சூது மூலம் பொருள் திரட்டி , தொண்டுகள் விடாது புரிந்து வந்தார் . உள்ளூரில் வழியில்லாது அதற்காகவே அவர் குடந் தைக்குச் சென்றார். இதை பின்வரும் பாடல் தெரிவிக்கிறது.
அவருடைய ஒரே இலக்கு சிவனடியார்களை பூஜிப்பதும், சிவ நாமத்தை இடைவிடாது உச்சரிப்பதும். சிவனடியார்களை அவமதிக்கும் எந்தச் செயலை யார் செய்தாலும், அவர் கடுமையாக நடந்து கொள்வார் என் பதால் மூர்க்க நாயனார் என்று அழைக்கப்பட்டார். அதனால்தான் அடி யார்கள் வரலாற்றை சுருக்கமாக எழுதிய சுந்தரர், தம் திருத் தொண்டத்தொகையில், “மூர்க்கற்கும் அடியேன்” என்று இவருடைய மூர்க்க தன்மையையே பெருமையாகக் குறிப்பிட்டார். அவருடைய குருபூஜை கார்த்திகை மூலம். இன்று. நற் சூதர் என்று இவரை சைவ நெறி சார்ந்த அறிஞர்கள் அழைக்கிறார்கள்.
By Staff
