By Our Staff
மேஷம்
ராசிநாதன் செவ்வாய் நவம்பர் 28ஆம் தேதி வக்கிர கதியோடு ரிஷபத்துக்கு திரும்புகின்றார். அதைப்போலவே புதன், 29 ஆம் தேதி முதல் தனுசு ராசியில் பிரவேசிக்கிறார். இந்த வாரம் நிதானமான வருவாயைத் தரும் வாரமாக இருக்கும். செவ்வாய் இரண்டில் பலம் பெறுவதும், சுக்கிரன் அவரைப் பார்ப்பதும் நல்லது. புதன் வார இறுதியில் மாற்றம் பெறுவதால் பத்திரிக்கை, தகவல் தொழில் நுட்பத் துறையில் வேலை செய்பவர்கள் சில நல்ல மாற்றங்களை எதிர்பார்க்க முடியும். வெளிநாட்டு வேலை வாய்ப் புகள் கிடைக்கும். போட்டிகளை வென்று வணிகத்தை நிலை நாட்டு வீரர்கள். சுக்கிரனுடைய பலத்தால் கலைத்துறையினர் புதிய வாய்ப் புகளைப் பெறுவார்கள். கடன் உதவி கிடைத்து விடும். புதிய திட்டங் கள் உருவாகும். குரு எட்டாமிம் பார்வையிடுவதால் ஆரோக்கியம் சீராக இருக்கும்.
உழைப்பு , வேலைச்சுமை அதிகரிக்கும். வெளியூர் பயணங்களில் விழிப்போடு இருக்கவேண்டும். ராகு சில தேவையற்ற பிரச்சனைகளைத் தருவார். ஒன்றுமில்லாத விஷயத்திற்கு பதட்டம் அடைவீர்கள். நண்பர்களோடு கருத்து வேறுபாடு ஏற்படும். திடீர் உடல் நலக்குறைவு உண்டாகும்.
ரிஷப ராசி
29 முதல் செவ்வாய் வக்ரமாகி ரிஷப ராசிக்குள் நுழைகிறார். தனாதிபதி புதன் அஷ்டம ராசியான தனுசு ராசியில் வார இறுதியில் நுழைகிறார் .அது எட்டாம் ராசியாக இருந்தாலும் புதன் மறைந்து இருப்பதால் நிறைந்த பலனைத் தருவார். தம்பதிகளின் அன்யோன்யம் அதிகரிக்கும். கருத்து வேறுபாடுகள் மறையும். புதிய அனுபவங்களைப் பெறுவீர்கள். நண்பர்களின் உதவி கிடைக்கும். முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். தொழில்துறையில் எதிர்பார்த்த அனுகூலம் சாதகமாக இருக்கும். உத்தியோகத்தில் முன்னேற்றமும் சலுகைகளும் கிடைக்கும். ஏற்கனவே சொன்னது போல 10-க்குரிய சனி ஒன்பதில்ஆட்சி பெறுவது யோக அமைப்பே. காரணம் பாக்கிய ஸ்தானம் பலம் பெறுகிறது அல்லவா..
வாரத்துவக்கத்தில் சில பணப் பற்றாக்குறைகள், கடன் வாங்குதல் முதலியவை ஏற்படும்.காரிய தாமதம் ஏற்படும். . சில காரியங்களைச் செய்துவிட்டு ஏன் செய்தோம் என்று வருத்தப் படும்படி ஆகி விடும். அதனால் எதையும் யோசித்து நிதானமாகச் செய்யவும்..
சந்திராஷ்டமம்: 25.11.22 மாலை மாலை 5.21 முதல் 27.11.22 மாலை 6.04 வரை சந்திராஷ்டமம் உண்டு.
மிதுனம்
ராசியில் இருந்து செவ்வாய் வார இறுதியில் விரைய ராசிக்குப் போகின்றார். ராசிநாதன் புதன் வார இறுதியில் சப்தம ஸ்தானம் சென்று ராசியைப் பார்க்கிறார். எனவே மகிழ்ச்சியும் ஆரோக்கியமும் கூடும். உள்ளம் குதூகலிக்கும். செவ்வாயால் ஏற்படும் சில இன்னல்கள் குறையும். அஷ்டமச்சனி பெரிய தடைகளைச் செய்யாது. காரணம் சனி, தன்னுடைய தோஷத்தை குறைத்துக் கொள்ளும் காலம் வந்துவிட்டது. எனவே இனி சனியால் ஏற்படும் துன்பங்கள் அனேகமாக குறைய ஆரம்பித்துவிடும். எதிர்பாராத சில அதிர்ஷ்டங்களும் கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு, உத்தியோக மாற்றம் ஏற்படும். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். வீடு கட்டும் வாய்ப்பும் உண்டு. அல்லது கட்டிய வீட்டை பழுது பார்க்க முயற்சி மேற்கொள்வீர்கள். பிள்ளைகளுக்கு வரன் பார்க்கின்றவர்களுக்கு அனேகமாக முடிவாகிவிடும்.
கவனமாக இல்லாவிட்டால் கொடுக்கல் வாங்கல்களில் சிறிய தகராறுகள் ஏற்படும். மேலதிகாரிகளால் மன அழுத்தம் ஏற்படலாம். தொழில்ரீதியான அலைச்சல் அதிகரிக்கும். எதிர்பாராத இடமாற்றம் சிலருக்கு எரிச்சலைத் தந்து நிலைகுலைய வைக்கும்.
சந்திராஷ்டமம் : 27.11.22 மாலை 6.04 முதல் 29.11.22 மாலை 7.51 வரை சந்திராஷ்டமம் உண்டு.
கடக ராசி
வார இறுதியில் புதன் தனுசு ராசிக்கு மாறுகிறார் . பஞ்சமாதி செவ்வாய் வக்கிரமாகி லாபஸ்தானம் ஏறுகின்றார். குரு வக்ர நிவர்த்தியாகி ஆட்சி பெற்று ராசியைப் பார்க்கிறார். அதனால் தேக ஆரோக்கியம் சீர்படும். தொழில்துறை சீராக இருக்கும். வணிகத்தில் பெரிய லாபம் இல்லாவிட்டாலும் நஷ்டமும் வராது. தனாதிபதி சூரியன் குருவின் பார்வையைப் பெறுவதால் பொருளா தார மந்த நிலை மறையும். அரசாங்க உதவிகள் கிடைக்கும். தன்னம்பிக்கை வளரும். ரிஷபராசி ராகுவால் சில அதிர்ஷ்ட திட்டங் கள் உருவாகும் வாய்ப்பும் உண்டு.
கணவன் மனைவி அனுசரணையோடு இருக்க வேண்டும். மறைமுக எதிர்ப்புகள் இருக்கும். என்னதான் இருந் தாலும் சனியின் பார்வையில், ராசி இருப்பதால் வீண் குழப்பமும் தயக்கமும் சோம்பலும் காரியங்களைத் தள்ளி வைக்கச் சொல்லும்.
சந்திராஷ்டமம்: 29.11.22 இரவு 7.51முதல் 1.12.22 இரவு 11.48 வரை சந்திராஷ்டமம் உண்டு.
சிம்மம்
தன குடும்பாதிபதி மற்றும் லாபாதிபதி புதன் தனுசு ராசிக்கு வார இறுதியில் மாறுகிறார். சிம்மத்துக்கு பகையான சனி ஆறில் மறைந்து இருப்பது நல்லது .அதேபோலவே மூன்றில் கேது பகவான் இருப்பதும் உங்களுக்குரிய நன்மைகளை அதிகரிக்கும். பெரியவர்கள் உதவியோடு முயற்சிகள் தாமதமின்றி நிறைவேறும். சூரியனின் நீசம் மறைந்து போன நிலையில் மனத்தெளிவும் காரிய வேகமும் கூடும். குருவின் நிலையும் பலமும் பிள்ளைகள் சம்பந்தப் பட்ட மனக்கவலைகளைத் தீர்க்கும். குழந்தைகள் இல்லாத பெண் கள் கருத்தரிக்கும் கிரகநிலை சாதகமாக இருப்பதால் சந்தான விருத்தி வாய்ப்பு உண்டு.
எட்டில் குரு இருந்து விரய ஸ்தானத்தைப் பார்ப் பதால் சில எதிர்பாராத செலவுகளும், குறிப்பாக உடல் நலம் சம் பந்தப்பட்ட பிரச்சனைகளும்,செலவுகளும் ஏற்படலாம்.
சந்திராஷ்டமம் : 1.12.22 இரவு 11.48 முதல் 4.12.22 காலை 6.16 வரை சந்திராஷ்டமம் உண்டு..
கன்னி
ராசிக்கும் 10 க்கு உரிய புதன் வாரத்தின் பிற்பகுதியில் தனுசு ராசிக்குள் பிரவேசிக்கிறார்.ஐந்தில் சனி ஆட்சி பலம் பெற்றிருக்கிறார். குரு ஆட்சி பெற்று ராசியைப் பார்க்கிறார். எதிர் பாராத ஒரு சந்திப்பு நிகழ்ந்து மகிழ்ச்சியைத் தரும். தொழில் சில அனுபவங்களைக் கற்றுத்தந்து வெற்றியை நோக்கி உங்களை நகர்த்தும். அரசுப்பணிகள் செய்பவர்களுக்கு புதிய சலுகைகள் கிடைக்கும். மேலதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். குடும்பத்தில் திருமணம், வளைகாப்பு, நிச்சயதார்த்தம் முதலிய சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். தள்ளிப்போன சுபகாரியங்கள் மறுபடியும் தொடங்கும். வீடு கட்டுதல், மனை வாங்குதல் போன்றவற்றில் இருந்த இடர் பாடுகள் நீங்கி சாதகமான சூழ்நிலை அமையும். உங்கள் சிந்தனை கள் வளர்ச்சி பாதையை நோக்கி நகரும்.
குழந்தைகளால் சில சங்கடங்கள் உண்டு. அதிக செலவுகள் ஏற்படும். எனவே பணச் சிக்கனம் தேவை இக்கணம். அடுத்தவர் காரியங்களில் தலையீடு செய்யாதீர்கள். சிறு சிறு குடும்ப சச்சரவுகள் வரும். அவசர முடிவுகளை தவிர்க்கவும்.
சந்திராஷ்டமம் : 4.12.22 6.16 pm to 6.12.22 3.03 pm
துலாம் ராசி
ராசி நாதன் சுக்கிரன் இரண்டில் இருக்கின்றார். அவர் தன குடும்ப ஸ்தானத்தில் இருப்பது நல்லது. விரயாதிபதியான புதன் வாரத்தின் பிற்பகுதியில் மூன்றில் பிரவேசிக்கிறார். இவைகள் நல்ல அமைப்பு. குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். புதிய தொழில் நுட்பத்தோடு வியாபாரம் முதலியவற்றைக் கவனிப்பீர்கள். வணிக விருத்தி ஏற்படும். எதையும் நிதானமாக ஆராய்ந்து பார்த்து முடிவெடுப்பீர்கள். தடைகள் நீங்கும். திருமண முயற்சிகள் கை கூடும். கலைத்துறையினருக்கு சுக்கிர பலத்தாலும் குருவினுடைய பலத்தாலும் புதிய வாய்ப்புகளும் வருமானமும் உருவாகும். வித்யா பலம் அதிகரிக்கும். பிள்ளைகள் கல்வியில் முன்னேற்றம் அடை வார்கள். படிப்பில் ஆர்வம் செலுத்துவார்கள்..
குரு 12வது ராசியைப் பார்ப்பதும், ராசியில் கேது இருப்பதும் சில தவிர்க்க முடியாத சங்கடங்களையும் மருத்துவ செலவுகளையும் தரும். விரயங்களை சுப செலவுகளாக மாற்றிக் கொள்வது நல்லது. ஆறாம் இடம் பலம் பெற்றிருப்பதால் புதிய கடன்கள் வரலாம். வாக்குவாதத்தை தவிர்க்கவேண்டும்.
சந்திராஷ்டமம் : 6.12.22 3.30 pm to 9.12.22 1.44 am
விருச்சிக ராசி
12-ல் கேது இருப்பதால் சில செயல் தடைகள் உண்டு. லாபாதிபதி புதன் வாரத்தின் பிற்பகுதியில் தன ஸ்தானத்திற்கு நகர்கிறார். ராசியில் உள்ள கிரகம் ஏழாம் இடத்தை பார்ப்பதால் களத்திரம் குடும்பத்தில் சந்தோஷம் நீடிக்கும். ராசிநாதன் செவ்வாயின் அஷ்டம தோஷம் விலகி அவர் ரிஷபராசிக்கு செல்வதும் ஒருவகையில் நல்லது .ஆறில் ராகு வலிமை பெற்று இருக்கிறார் .12-ல் கேது இருப்பதால் ஆன்மிக விஷயங்களில் நாட்டம் அதிகரிக்கும். திருமணம் ஆனவர்களுக்கு குழந்தை பேறு கிடைக்கும் வாய்ப்பு உண்டு. குருபலம் கூடி இருப்பதால் திருமண முயற்சிகள், சுபகாரியங்கள், பதவி உயர்வு சம்பள உயர்வு, மாணவர்கள் படிப்பில் ஆர்வம் முதலிய சிறப்புகள் ஏற்படும்.முயற்சி செய்த காரியம் கடைசியில் தாமதப்படும். பிறர் விடயத்தில் தலையீடு , அறிவுரை கூறுதல் முதலியவற்றை விட்டு விடவும். நீங்கள் சொல்லிய விஷயங்கள் பூமராங் போல உங்க ளுக்கே எதிராகத் திரும்பும் என்பதால் எச்சரிக்கையோடு இருக் கவும்.
சந்திராஷ்டமம் : 9.12.22 1.44 am to 11.12.22 1.51 pm
தனுசு ராசி
சப்தமாதி புதன் ராசியில் வந்து தன்னுடைய சப்தம ஸ்தானத்தைப் பார்க்கிறார். கருத்து வேறுபாடு நீங்கும். கணவன் மனைவி உறவுகள் அந்நியோன்யமாக இருக்கும். 11ம் இட கேது ,சில நுட்பமான ரகசியத் திட்டங்களை தீட்டும். அதைச் செயல் படுத்த வேண்டும் என்று முயற்சிகள் செய்வீர்கள். மனைவிவழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். ஏழரை சனியைத் தாண்டி கொண் டிருக்கிறீர்கள். ஆரோக்கிய குறைவு பிரச்சினைகள், மன உளைச்சல் முதலிய பிரச்சனைகள் தீரும். கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப் புகள் கிடைக்கும். புனித யாத்திரை செய்யும் திட்டம் நிறைவேறும்..
ஐந்தில் ராகு இருக்கிறார். எக்காரணத்தை முன்னிட்டும் இடைத்தரகர்களை நம்ப வேண்டாம்..தயக்கங்கள் மனதில் தலை தூக்கி செயல் வேகத்தைத் தடுக்கும். பூர்வீக சொத்து பிரச்சனை மற்றும் பஞ்சாயத்துகள் அலைக்கழிக்கும். உங்கள் பலவீனங்களை உணர்ந்து சரிப்படுத்திக் கொண்டால் வாழ்வு சிறக்கும்
சந்திராஷ்டமம் : 11.12.22, 1.51 pm to 14.12.22 2.32 am
மகர ராசி
ராசியில் சனி ஆட்சி பலத்தோடு இருப்பதும், ஆறுக் குடைய புதன் வாரப் பின்பகுதியில் 12ல் மறைவதும் இவ்வார முக்கிய நிகழ்வுகள். மறைந்த புதன் என்று நினைக்கவேண்டாம். அவர் நிறைந்த பலனைத் தரும் வாய்ப்பு உண்டு. மற்றவர்களின் எண்ணங்களை வைத்து செயல்படுவதால் வெற்றி கிடைக்கும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி இருக்கும் .சனி ,செவ்வாய் பார்வை இணைப்பு பூமி மற்றும் சொத்து விஷயங்களில் ஆதா யத்தைத் தரும். சகோதர உதவிகள் கிடைக்கும்.
ராசியில் சனி இருப்பதால் மனதை அலைபாய விட வேண்டாம். சோம்பலை விரட்டுங்கள். அது காரியங்களை பாழ்படுத்திவிடும். கனிவாகப் பேசினால் காரியத்தை வெற்றிகரமாக முடிக்கலாம் என்பதை உணர்ந்து செயல்படுங்கள். எது எப்படி ஆயினும், உங்கள் ஆரோக்கியம், உணவு விஷயத்தில் மிகுந்த ஜாக் கிரதை தேவை.
சந்திராஷ்டமம் : 14.12.22 2.32 am to 16.12.22 2.04 pm
கும்பம்
ராசியாதிபதி சனி விரயத்தில் இருக்கிறார். ஸ்வாபிக பாவியான சனி 12ல் இருப்பது ஒரு வகையில் நல்லது. தனாதிபதி குரு வலிமை பெற்று இருப்பதால் பொருளாதாரம் நல்லவிதமாக இருக்கும். புதிய எண்ணங்கள் தோன்றும். புதிய செய்திகள் காதில் விழும். வருமானத்தை சேமிக்கவேண்டும் என்ற எண்ணம் செயல் வடிவம் பெறும். 9-க்குடைய சுக்கிரன் பத்தில் இருக்கிறார். சில செயல்கள் உங்களுக்கு சாதகமாக முடியும். அதற்கேற்றபடி சிந்தித்து செயல்படுங்கள்.
சகோதரர் விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் இருக்கும். பூமி, வீடு போன்ற பிரச்சனைகள் மெல்ல தலைதூக்கும். வழக்குகள் தாமதமாகும். ராசிநாதன் விரைய ஸ்தானத்தில் இருப் பதால் சில அலைச்சல்களை தரவே செய்வார். வீண் டென்ஷனுக்கு மனதில் இடம் தராதீர்கள்.
மீன ராசி
ராசிநாதன் ஆட்சி பெற்று வக்கிரம் நீங்கி சப்தம பஞ்சம பாக்கியஸ்தானங்களைப் பார்வையிடுகிறார். பத்தில் புதன் வர இருப் பதாலும், அதற்கு இடம் கொடுத்த குரு, ஆட்சி பலம் பெற்றிருப் பதாலும், தகவல் தொழில்நுட்பம் முதலிய புதன் சம்பந்தப்பட்ட தொழில்கள் வீரியம் அடையும்.தொழில்நுட்ப நிபுணர்கள் முன் னேற்றம் அடைவார்கள். பங்குதாரர்கள், நண்பர்கள் உதவுவார்கள் . பழைய கடன்கள் பைசலாகும். வணிகம் நல்லவிதமாக நடக்கும் . பூமி, வீடு சிக்கல்கள் தீரும்..
இரண்டாம் இடத்தில் ராகுவும், அஷ்டமத்தில் கேதுவும் என்பதால், உண்ணும் உணவிலும், செய்யும் வேலை யிலும் மிகுந்த கவனத்தோடு இருங்கள். பயணங்களின் மிகுந்த கவனம் தேவை. பொருள் நஷ்டம் ஏற்படும். கொடுக்கல் வாங்கல் பிரச்சினைகளில் இழுபறி நீடிக்கும் என்பதால் சாதுர்யமாக நடந்து கொள்ளவும்..
