Dhivya-desa-yatra – மு. வெ. ரெங்கராஜன், மதுரை.
கேசி காட் :(கேசி என்ற அசுரனை வதம் செய்த இடம்)


கம்சன் ஸ்ரீகிருஷ்ணனை வதம் செய்வதற்காக பூதனையில் தொடங்கி இதுவரை அனுப்பிய அனைத்து அசுரர்களையும் வதம் செய்தான் ஸ்ரீகிருஷ்ணன். இறுதியாக வந்த அசுரன் கேசி என்பவன் குதிரை வடிவம் தாங்கிய கேசி. ஸ்ரீ கிருஷ்ணன் மீது பாய்ந்தான். ஸ்ரீகிருஷ்ணன் லாவகமாகப் கேசியின் வாய்க்குள் கையை விட்டு, பிளந்து உயிரை மாய்த்தான்.
பிருந்தாவனத்தில் ஸ்ரீகிருஷ்ணன் வதம் செய்த கடைசி அசுரன் கேசி.
அப்போது அவனுக்கு வயது 10. இத்துடன் பிருந்தாவன லீலைகள் நிறைவு பெறுகிறது. அதன்பின்தான் மாமன் கம்சனை முடிக்க அக்ரூரருடன் மதுரா செல்கிறான். ஸ்ரீகிருஷ்ணன் என்பதாக வரலாறு.
கேசி காட்டில் நீராடுவது அனைத்துப் புனிதத் தலங்களிலும் நீராடுவதற்குச் சமமாகக் கருதப்படுகிறது. கங்கை நீராட்டத்தைக் காட்டிலும் நூறு மடங்கு புண்ணியம் தரும் என்று ஆதி வராக புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது .பிதிர்களுக்கு பிண்டம் கொடுக்க சிறந்த இடம்.
சாலையில் பசுக்களின் நடமாட்டமும் மக்களின் அரவணைப்பும் இங்குள்ள சாலைகளில் சாதுவான பசுக்கள் மக்களுக்கு தீங்கு இழைக்காமல் நடமாடுகின்றன. ரிக்ஷாகாரர்கள் மற்றும் வாகன ஓட்டிகளும் ப சுக்களை விரட்டி விரட்டி ஓட்டாமல் சாதுவாக ராதே ராதே என்று சொல்லியே வழி கேட்கின்றனர்.
அவைகளும் வழிவிட்டு ஒதுங்குவது பார்த்தால் வியப்பாக உள்ளது.
குரங்குகளின் தொல்லை எச்சரிக்கை உணர்வும்:
அதே சமயத்தில் இங்கு குரங்குகளின் தொல்லை அதிகம்.குறிப்பாக மூக்கு கண்ணாடி அணிந்திருந்தால் கழட்டி வைத்து கொள்ள வேண்டும். இந்த குரங்குகள் மூக்கு கண்ணாடிகளை பறித்து விட்டு மேலே சென்று விடுகிறது. அதன்பின்உள்ளூர் நபர்கள் சிலர் தின்பண்டங்களைக் கொடுத்து மூக்கு கண்ணாடியைத் திரும்பப் பெற்றுத் தருகின்றனர். இதற்கு ரூபாய் 100 வசூலிக்கின்றனர்.
இந்த நிகழ்வுகளை கவனிக்கும்போது குரங்குகளை இதற்காக பழகி வைத்தார் போல் தெரிகிறது. எங்களுடன் வந்த இருவருக்கு வெவ்வேறு பகுதியில் இந்த கசப்பான அனுபவம் ஏற்பட்டது. அதன் பின் அனைவரும் எச்சரிக்கையுடன் சென்று வந்தோம்.



