பேராசிரியர் எஸ்.கோகுலாச்சாரி
பட்டிமன்றங்கள் துவங்கி விவாத களங்கள் வரை பேசப்படும் விசயம் வீடணன் பற்றிய விஷயம்.ஒருவர் கட்சி மாறி விட்டால், வீடணனாகி விட்டான் என்றே குற்றம் சாட்டுகின்றனர்.இது முறையான ஆய்வா என்பதை பரிசீலிப்பதே இக்கட்டுரையின் நோக்கம்.இதை தடை விதைகளாக ஆராய்வோம்.
1.வீடணன் குலத்துரோகியா?
குலத்துரோகி என்றால், தன் குலத்துக்குக் கெட்டபெயர் சம்பாதித்துத் தருபவன். தனது தவறான செயலால் – தனது ஆணவத்தால் – தன்னைச் சேர்ந்தவர்களுக்கு பேராபத்து விளைவிப்பவன்.
செய்யக் கூடாத குற்றத்தைச் செய்து விட்டு அதற்குரிய விளைவுகளை இராவணன் அனுபவிக்கும்போ து, அதனைத் செய்யக்கூடாது என்று தடுத்தவன் எப்படி குலத் துரோகியாக முடியும்!
வீடணன் குலத்துரோகி என்பதை அரக்கர்குல மக்கள் யாருமே சொல்லவில்லை.
2.குலப்பழியைச் சுமக்கலாமா?
தன்னுடைய அக்கிரமமான செயல்களுக்குத் தன் குலம் முழுவதும் துணை நிற்க வே ண்டும் என்ற எண்ணம் கொண்டவனாக இருந்தால், அழிவு வரும்போது துணை நிற்பவர்களும் சேர்ந்தழிவது தவிர்க்க முடியாததாக இருக்கும்.இராவணன் தன் குலம் அழியத் தானே காரணமாக இருந்தான்.
முதல் நாள்போரில் இராமனிடம் தோல்வி யடைந்த இராவணன் தன் அரண்மனையை அடைகின்றான். அருமையான பாட்டு.
வாரணம் பொருத மார்பும் வரையினை எடுத்த தோளும்
நாரத முனிவர்க்கு ஏற்ப நயம் பட உரைத்த நாவும்
தார் அணி மவுலி பத்தும் சங்கரன் கொடுத்த வாளும்
வீரமும் களத்தே போட்டு வெறும் கையோடு இலங்கை புக்கான்
அவன் ஒரேயொரு விஷயத்தை மட்டும் தன்னோடு எடுத்துச் சென்றானாம். அது என்ன வென்று தன்னுடைய குலத்துக்கு மீளாப்பழி.
தொடர்ந்துபோம் பழியோடும் தூக்கிய கரங்க
ளோடும் நகர்ந்துபோய் நகரம் புக்கான் என்பது கம்பர் வாக்கு.
குலப்பழியைச் சுமந்தவன் இராவணனே தவிர வீடணனல்ல.எனவே இக்குற்றச்சாட்டும் முறையானதல்ல.
3.வீடணன் இராமனுக்கு ஆலோச னை சொ ன்னது சரியா?
தன்னிடம் விசு வாச த்தோ டு சே ர்ந்த – வீடணனுக்கு – சில மதிப்புகளைத் தரக் கருதினான் இராமன் .
தொண்டனுக்கு ஆலோச னைத் தரும் வாய் ப்பினைத் தந்து, (அந்த ஆலோச னை தனக்கு ஏற்கனவே தெரிந்ததாக இருந்தாலும்) அதனைச் செ யல்படுத்துவதன் மூலம் தொண்டனுக்கு உரிய இடத்தையும் பெருமையையும் தர வே ண்டியது தலைவனின் கடமை.
வீடணனுக்குத் தெரிந்த ஒரு விஷயத்தை வீடணனின் மூலம் பெற்று பயனடைந்ததாகக் கருதிக் கொள்வ
தன் மூலம் இராமனும் பெருமை பெறுகிறான். வீடணனும் பெருமை பெறுகிறான்.
அண்ணனுக்குத் துரோ கம் செய் கிறோ ம் என்கிற குற்ற உணர்வு வீடணனுக்கு இல்லை. அண்ணலாகிய இராமபிரானுக்கு உதவுகிறோ ம் என்கிற எண்ணம் தான் இருந்தது.அறம் இராமன்! அறத்திற்கு எதிரானவன் இராவணன்.
4.வீடணன் எட்டப்பன் ஆகலாமா?
முதலில் எட்டப்பன்செயல் என்பதே சரியல்ல.
வீடணன், யாரை நம்ப வைத்து காட்டிக்கொடுத்தான்?இராவணனையா?இராவணன் வீடணனை நம்பினானா?இராமனிடம் சேரப்போகிறான் என்பதே அவனுக்குத் தெரிகிறதே
5.ஆபத்தில் இராவணனைவிட்டுப் பிரிந்தது சரியா?
இராவணனோடு இருக்க வே ண்டும் என்றால், அவன் செ யல்களைச்
சகித்துக் கொள்ள வே ண்டும்.அவன் மனம் ஏற்கும்படி – அதாவது அவன் தீமையை ஏற்கும்படி மட்டுமே பேச வேண்டும்.அவன் கட்டளையை உயிர் கொடுத்தாவது நிறைவே ற்ற வே ண்டும். இதற்கு உட்பட்டவர்கள்தான் இலங்கை யிலிருந்தார்கள்.இதில் வே றுபட்ட இயல்பினனாக இருந்தவன் வீடணன்.
அவையிலே ஆலோசனை செய்யும் போது இராவணனுக்கு மற்றவர்கள் பேசியது பிடித்தது. வீடணன் பேசியது பிடிக்கவில்லை.மற்றவர்கள் இராவணனின் மனமறிந்து பேசினர்.வீடணன் இராவணனின் நலமறிந்து பேசினான்.இராவணன் தனக்கு நன்மையைச் சொன்ன வீடணனை உதறித்தள்ளினான்.
“அரக்க குலத்தைக் கெடுக்க வந்த அயோக்கியனே ! நீ என்னுடன் பிறந்த குற்றத்திற்காக உன்னை உயிருடன் விட்டே ன். சீ! ஓடிப்போ ! ” (யுத்த – ஸர்.16 -100 -105).
(நின்றால் உன்னைக் கொல்வே ன் – குலத்துரோகி – போ என்று அறிவித்தவன் இராவணன்தான்-)
இராவணன் தான் வீடணனைப் பிரிந்தான்.எனவே இக்குற்றச்சாட்டும் பொருந்தாது.
6.கும்பகர்ணனைப் போல வீடணன் உயிரை விட்டிருக்கலாமே ?
மனநோய் கொண்ட இராவணனைக்காப்பாற்ற முயன்றவன் வீடணன்.அவன் கொடுத்த மருந்தை ஏற்காமல் மாண்டவன் இராவணன்.
நோயாளியைக்காப்பாற்ற முடியாது அவன் உயிர்விடும் போது அவனுக்கு மருத்துவம் சொன்ன மருத்துவரும் உடன் உயிர் துறக்காதது ஏன் என்று யாரும் கேட்பதில்லை.
7.பகைவனான இராமனிடம் போய்ச் சேரலாமா?
முதலில் பகைவன் யார், நண்பன் யார் என்பதற்கான விளக்கத்தைத் தெரிந்து கொள்ள வே ண்டும்.உன்னைக் கொல்வே ன் என்று எந்தக் குற்றமும் செய்யாத போது தண்டனை வழங்கி ,நாட்டை விட்டு ஓடிப்போ என்றவன் பகைவனா?நண்பர்கள் எதிர்த்தாலும் அடைக்கலம் தந்து ஆதரித்தவன் பகைவனா? இராமனிடம் அவர் சேர வேண்டிய நியாயத்தை கதையின் துவக்கத்திலிருந்தே காட்டி வருகிறார்கள் காப்பிய ஆசிரியர்கள்.
இராவணனை “அறிவாளி. வேதம்படித்தவன்; வீரன்” என்றெல்லாம் கம்பன் புகழவில்லை.ஆனால் வீடணனை “அழிவினை எ#துவான்; அறிவு நீங்கினான். ”“உத்தமன் அந்நகர் ஒழியப்@பாயினான்” – என்று கம்பன் புகழ்கிறார்..கம்பன் விபீஷணனைப் பற்றிய எங்கு குறிப்பு கொடுத்தாலும் அவன் பெயரை ஓர் அடைமொழி இல்லாமல் அழைப்பதேயில்லை.
பாத்திரங்களைக் கவிஞர்கள்தான் படைக்கிறார்கள். அந்த பாத்திரங்களின் குணங்களை அவர்களைவிட ஆழமாக அறிந்தவர்கள் யாரும் இருக்க முடியாது.
8.நன்றி கொன்று விட்டானே வீடணன்?
இராவணன் மந்திரி சபையில் எப்படிப்பட்ட மந்திரிகள் இருந்தார்கள்?மஹா பார்ச்வன் என்றொரு மந்திரி. அவன் பேசுகிறான்.“இவ்வளவு சிரமப்பட்டு சீதையை அபகரித்து வந்தநீங்கள் அவளை எப்படியாவது அனுபவிக்காமலிருப்பது அழகல்ல ” (வான்மீகி. ஸர்க்கம் 13 – ” -10).
“அதர்மம் தர்மம் எல்லாம் தங்களுக்கு இல்லை. நீங்கள் அதர்மத்தைப் பற்றி ஆலோசனையோ , கவலையோ படத் தேவையில்லை ”.“சீதை தங்களுக்கு உடன்படாவிட்டால் பலாத்காரம்செய்யுங்கள் ”.
இத்தகைய சூழ்நிலையிலும் வீடணன் மிக உயர்ந்த வாக்கியங்களை இராவணனுக்குச் சொன்னான் என்று தொடங்குகிறார் வான்மீகி. விபீஷனோ ராக்ஷஸராஜ முக்யம்உவாச வாக்யம் ஹித மர்த் யுக்தம் (ஸர் 14.”. 1) “அண்ணா! இவர்கள் பேசுவது சந்தோஷம் தரலாம். இராமனைப் பற்றி அறியாமல் பேசுகிறார்கள். இவர்கள் பேசசு இவர்களுக்கோ உனக்கோ உதவாது! ”
இதற்குப் பிறகு ஓர் அருமையான உளவியலை நம் எல்லோருக்குமாக வீடணன் சொ ல்கிறான்.
“அவையோ ர்களே ! அமைச்ச ர்களே ! இப்போ து தர்ம நீதி, வீரம் எல்லாம் இராவணனிடத்தி@ல இல்லை. அவன் காம எண்ணங்களோடு மட்டும் இருக்கிறான். இயல்பிலேயே கொடியவன். எனவே , தன்விருப்பம் போ ல காரியங்களைச் செய்கிறான்.
அவன் நிலை அறியாது நீங்கள் தூபம் போ டுகிறீர்கள். பார்வைக்கு நீங்கள் உறவு போலத் தெரிந்தாலும், பகைவர்கள். காரணம் அவன் நன்மைக்குரிய எதையுமே நீங்கள் பேசவில்லை.
நீங்கள் இந்த இராவணன் போட்ட சேற்றை உண்வர்கள். ஆனால் இவனை இப்போது நீங்கள் காப் பாற்ற மறுக்கிறீர்கள். இது நன்றி கொன்றதாகாதா?
உண்மையிலேயே நீங்கள் இந்த அரசனான இராவணனுக்கு உறவு என்றால் தலைமயிரைப் பிடித்தாவது இழுத்து, அதர்ம காரியத்திலிருந்து மீட்டெடுக்க வேண்டியிருக்க அபாயத்தில் தள்ளுவது சரியா?
ஒருவன் சேற்றிலே வழுக்குவதற்குத் தயார் நிலையில் உள்ளான். அவனை விழாதே என்று தடுக்கிறான். இல்லை விடு என்று கையை உதறிக் கொண்டு சேற்றிலே விழுகிறான்.
இப்போ து பார்வையாளர்கள் பகுதியிலிருந்து, “தம்பி! சேற்றில் விழாமல் அண்ணனைக் காப்பாற்றத் தவறினான் ” என்று சொ ன்னால் எப்படியிருக்கும்?
அதை விட மோசம் சேற்றில் விழுவதை அவனால் தடுக்க முடியாவிட்டால் இவனும் சேர்ந்து சேற்றில் விழுந்திருக்க வேண்டியதுதானே என்று கேட்பது எப்படியிருக்கும்?
9.சமூகம் அவனை ஏற்றுக்கொள்ளவில்லையே ?
நடத்தையில் நின்றுயர் நாயகனான இராமபிரானால் ஏற்றுக்கொள்ளப்பட்டவன் அவன்.
செல்வ வீடணன் என்றே ஆழ்வார்கள் அழைக்கிறார்கள்.சில நேரம் நற்செயல்கள் சாதாரண கண் கொண்டு ஆராயும் சமூகத்தால் புரிந்து கொள்ளப்படுவதில்லை. அப்படி புரிந்து கொள்ளப்படாததால் அவர்களைச் சமூகம் புறக்கணித்து விட்டதாகக் கருதிவிடக்கூடாது.
காப்பிய ஆசிரியர்கள், தத்துவ அறிஞர்கள், சமய மேதைகள், ஆழ்வார்கள் போன்ற இறைஅருளை பெற்ற அருளாளர்கள், வீடணனைப்போற்றுகிறார்கள்.அந்த அருளாளர்கள் ஏற்றுக்கொண்ட வீடணனை நாம் மறுக்கலாம். அதற்கான உரிமை நமக்கு உண்டு.நாம் மறுப்பதால் வீடணனுக்கு என்ன நஷ்டம்?
