நிச்சயமாக அந்தந்த நாட்டு சூரிய உதயத்தை வைத்துக்கொண்டு தான் செய்ய வேண்டும். மேற்கே உள்ள நாடுகள் குறிப்பாக இங்கிலாந்து முதலிய நாடுகள் ஐந்தரை மணி நேரம் வித்தியாசம் வரும். நாம் காலையில் இருக்கும் பொழுது அவர்கள் நள்ளிரவில் இருப்பார்கள். எனவே நம்முடைய நேரத்திற்கு அந்த வித்தியாச நேரத்தை கணக்கில் கொண்டு ஐந்தரை மணி நேரம் அல்லது ஐந்தே கால் மணி நேரம் கழித்து அவர்கள் அந்த தர்ப்பணத்தை செய்யலாம். கீழே நாடுகளான சிங்கப்பூர் மலேசியா ஆஸ்திரேலியா நாடுகள் நேர வித்தியாசத்தைத் தெரிந்து கொண்டு அவர்களுக்கு சூரிய உதயம் முன்னாலேயே வந்து விடும் என்பதால் ஐந்தரை மணி நேரம் முன்னதாகவே அவர்கள் செய்து விட வேண்டும். அப்பொழுது நாம் நள்ளிரவில் இருப்போம். அவர்களுக்கு விடிந்திருக்கும். இந்த கணக்கை வைத்துக்கொண்டு அந்தந்த நாட்டின் சூரிய உதயத்தின் அடிப்படையில் நீங்கள் பண்டிகைகளையோ உற்சவத்தையோ விரதங்களையோ கொண்டாட வேண்டும்.
- ஒருவர் இந்தியாவில் இருக்கிறார் மற்றொரு மகன் வெளிநாட்டில் இருக்கிறார். இருவரும் ஒரே நேரத்தில் சிரார்த்தம் திதி போன்ற நீத்தார் கடன்களை செய்ய வேண்டுமா?
அவசியம் இல்லை. முன் சொன்ன அதே பதில் தான். நாம் இங்கே காலை 10 மணிக்கு சிரார்த்தம் செய்து கொண்டிருக்கும் போது இங்கிலாந்தில் உள்ளவர்களுக்கு விடியல் காலை நான்கு மணியாக இருக்கும் அதே நேரத்தில் செய்வதாக இருந்தால் அவர் விடிய காலைஎழுந்து செய்ய வேண்டும். அது சாத்தியமில்லை. அது சரியில்லை .ஆகையினால் அங்கே எவ்வளவு நேரம் நகர்ந்து அந்த தர்ப்பணகாலம் வருகிறதோ அப்பொழுது அவர்கள் செய்தால் போதும். இந்த கணக்கைத் தான் கீழை நாடுகளுக்கும் வைத்துக் கொள்ள வேண்டும்.
