பிரசித்திப் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும்.சித்திரை திருவிழா, ஆவணி மூலத்திருவிழாவிற்கு அடுத்தபடியாக தை மாதம் நடைபெறும் தெப்பத்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். இத்திருவிழாவிற்கு தென் மாவட்டங்களில் இருந்து அதிகளவில் பக்தர்கள் கலந்து கொள்வர்.தெப்பத்திருவிழாவிற்கான முகூர்த் தக்கால் தெப்பக்குளத்தில் நடப்படும். சிறப்பு பூஜைகள் செய்யப்படும். மீனாட்சியம்மன் கோவிலில் தை மாத தெப்பத்திருவிழா கொடியேற்றத் துடன் 24ஆம் தேதி செவ்வாய்க்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. தைப்பூசத்தன்று(5.2.23) மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலுக்கு சொந்தமான மதுரை வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தில் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் தெப்பத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.இந்த வைபவத்தை ஒட்டி சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலையும், வலை வீசி அருளிய லீலையும், தெப்பம் முட்டுத்தள்ளுதல் நிகழ்ச்சியும், கதிரறுப்பு திருவிழாவும் கோலா கலமாக இருக்கும்.பிப்ரவரி 4ஆம் தேதி சுவாமியும், அம்மனும் பஞ்ச மூர்த்திகளுடன் கோவிலில் இருந்து புறப்பட்டு மீனாட்சியம்மன் கோவி லின் உபகோவிலான மாரியம்மன் தெப்பக்குளம் சென்று, அங்கு தெப்பத் தில் எழுந்தருளு கின்றனர். அன்றைய தினம் சுவாமியும், அம்மனும் புறப் பாடாகி, மீண்டும் கோவிலுக்குள் வரும் வரை மீனாட்சி – சுந்தரேஸ்வரர் கோவில் நடை சாத்தப்பட்டிருக்கும்.
