புரட்டாசி முதல் வாரம் ராசி பலன் – பகுதி – 2
Purattasi 1 Week Raasi Palan Weekly Astrology Predictions in Tamil – Part – 2
(25.9.2021 முதல் 1.10.2021 வரை)
சிம்மம்
கம்பீரம் கொண்ட சிம்ம ராசிக்கு ஆறாம் இடத்தில் சனி இருப்பது விசேஷம் தான். ராசிநாதன் சூரியன் செவ்வாயோடு தனஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், அரசாங்க காரியங்கள் வெற்றிபெறும். உதவிகளும் கிடைக்கும். உத்தி யோக ஸ்தர்கள் எதிர்பார்த்த பதவி, பண பலன்களைப் பெறுவார்கள். கலைத்துறையினருக்கு நல்ல காலம். தொழில் முன்னேற்றம் சிறப்பாக இருக்கிறது. 26 முதல் 30 ஆம் தேதி வரை உள்ள நாட்கள் சிறப்பானவை. வாரத்தின் முதல் இரு நாள்களும், கடைசி நாளும் சற்று சிரமத்தைத் தரும். பிடிவாத குணத்தால் சில தவறான முடிவுகளை எடுக்க வேண்டி இருக்கும். உஷ்ண நோய்கள் மற்றும் டென்ஷன் ஏற்படும். ஆரோக்கிய விஷயத்தில் கவனம் தேவை.
என்ன பரிகாரம்?
பசு மாட்டுக்கு ஒரு வாய் உணவு தாருங்கள்.நன்மையே நடக்கும். மாலை விளக்கு ஏற்றி வீடு முழுக்க சாம்பிராணி போடுங்கள். குறிப்பாக நிலை வாசலுக்கு அவசியம் போடுங்கள் .உங்களுக்குப் பிடித்த இறைவன் நாமத்தை 5 நிமிடம் தொடர்ந்து ஜெபம் செய்யுங்கள்.
————————————————————————————————————
கன்னி
கவித்துவமும் அறிவுபூர்வமும் உள்ள உங்கள் ராசிக்கு இரண்டுக்கு உடைய தனகாரகன் சுக்கிரன்,ராசி அதிபதி புதனோடு இரண்டில், சுப பலத்தோடு இருக்கிறார். ஐந்தில் குருவும், சனியும் நல்ல அமைப்பில் அமர்ந்திருக்கிறார்கள். உழைப்பிற்கும் வேலை திறனுக்கும் நீங்கள் எதிர்பார்க்கும் பாராட்டும் அங்கீகாரமும் பெறு வீர்கள். பணி உயர்வு, ஊதிய உயர்வுகளை எதிர்பார்க்கலாம். ஆன் மீக சிந்தனைகள் மலரும் மகத்தான வாரம். 29, 30,1 ஆகிய தேதிகள் சிறப்பானவை. ராசியில் சூரியனும் செவ்வாயும் இருக்கிறார்கள். நட்பு பாதிக்கும் நடவடிக்கை வேண்டாம். நன்றாக பேசிக் கொண்டிருந்தவர்கள் தங் களை விட்டு விலகும் வாய்ப்பு அதிகம். வாரத்தின் துவக்க நாட் களில் எதிலும் முன்யோசனையோடு காரியங்களைச் செய்யவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை..
சந்திராஷ்டமம்
25ம் தேதி மாலை 6.16 மணி வரை சந்திராஷ்டமம் உண்டு. காரியங்களை யோசித்துச் செய்யுங்கள். வண்டி வாகனம் ஓட்டு வதில் மிக மிக கவனம் தேவை. இரவுப் பயணத்தை இயன்ற அளவு தவிர்க்கவும்.
என்ன பரிகாரம்?
தினம் தன் வந்திரி பகவானை வணங்குங்கள். பிரதி புதன் கிழமை பெருமாள் கோவிலில் தீபம் போட்டு வாரு ங்கள். மருந்து மாத்திரை வாங்க முடியாதபடி இருக்கிறவர்களுக்கு இயன்ற அளவு முடிந்தால் பண உதவி செய்யுங்கள்.
———————————————————————————-
துலாம்
உங்கள் ராசிநாதன் சுக்கிர பகவான்,ராசிக்கு 12ல் செலவு விரையம் தந்து கொண்டிருந்த, பாக்கிய விரையாதிபதியோடு ராசியில் ஆட்சி நிலையில் அமர்ந்திருக்கிறார். சகல வழிகளிலும் பொருளாதார நெருக்கடி போகும். நிதிச் சிக்கல் மற்றும் குடும்ப பிரச்சனைகள் தீரும். வருமானம் உயரும். தள்ளிப்போன சுபகாரியங்கள் கைகூடும். அர்த்தாஷ்டமச் சனி. இரண்டில் கேது. எட்டில் ராகு போன்ற பாவ கிரகங்கள் இருப்பதால் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.சிலருக்கு உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வியா பாரமும் தொழிலும் உயரும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். மாணவர்கள் படிப்பில் முன்னேறுவார்கள். வாரத்தின் பிற்பகுதியில் சில நல்ல பலன்கள் உண்டு.விர யத்தில் சூரியன் செவ்வாயோடு இணைந்து 6ம் இடம் பார்ப்பது நல் லதல்ல.சில நேரங்களில் உடல் சோர்வையும் மனச் சோர்வையும் தரும்.
சந்திராஷ்டமம்:
25 ஆம் தேதி மாலை 6.16 முதல் 28ம் தேதி 7:14 காலை வரை. பிரயாணங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
என்ன பரிகாரம்?
வயதானவர்களுக்கும், உடல் ஊனமுற்றவர்களுக்கும் உங்களால் இயன்ற உதவி செய்யுங்கள் . அது தீமைகளை குறைக்கும். மாலை நேரத்தில் சிவாலயம் செல்வது நல்லது . ———————————————————————————————————————-
விருச்சிகம்
உங்கள் ராசி அதிபதி செவ்வாய் சூரியனோடு சூரியனோடு சேர்ந்து 11இல் சுப பலத்தோடு இருப்பதும் மூன்றாமிடத்தில் சனி குருவோடு இணைந்து இருப்பதும் நல்லது. செலவுகளை குறைக்க வேண்டும். தவறான செலவுகள் செய்யும் வாய்ப்பு இருக்கிறது. குருவின் பார்வையால் களத்திரம், லாபம் மற்றும் பாக்கிய ஸ்தானங்கள் விருத்தி பெறும்.இதனால் ஆரோக் கியம் நன்றாக இருக்கும். உயர் பதவியில் உள்ளவர்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும். அரசாங்க சலுகைகள், கடன்கள் தாமதமின்றி கிடைக்கும். கலைத்துறையினர் புதிய வாய்ப்புகளைப் பெறு வார்கள்.குழந்தைகள் நலனில் கவனம் தேவை. சுப நிகழ்ச்சிகளில் சிறு தடங்கல்கள் வரலாம். கைக்கு வந்தது வாய்க்கு வர தாமதம் ஆக லாம்,பொறுமை தேவை. 7க்குரிய சுக்கிரன் அவர் 12ல் ஆட்சி என்பதால் இல்லறத்தில் பிரச்சினை வராமல் சுமுகமாக இருக்கும்.
சந்திராஷ்டமம்:
29ஆம் தேதி 7:14 காலை முதல் 30 ஆம் தேதி மாலை 7 மணி வரை சந்திராஷ்டமம்.எதிலும் கவனம் தேவை.முக்கியமாக யோசித்து பேசுங்கள்.உங்கள் பேச்சு தவறாகப் புரிந்து கொள்ளப்படும் வாய்ப்பு அதிகம்
என்ன பரிகாரம்?
செவ்வாய்க்கிழமை மாலை விளக்கேற்றி முருகனை வணங் குங்கள்.இயன்றால் ஒரு நாள் மாலை, அருகில் உள்ள முருகன் ஆலயத்துக்குச் சென்று அர்ச்சனை செய்யுங்கள்.அனைத்தும் நலமாகும்.
