தை வெள்ளி
சொல்ல வேண்டிய 27 போற்றி மந்திரங்கள்
ஆடி வெள்ளி போலவே தை வெள்ளியும் மகாலட்சுமிக்கும் அம்பாளுக்கும் உகந்த நாட்கள். காரணம், இது உத்திராயண புண்ணிய காலத்தின் முதல் மாதம்.
இந்த மாதத்தில் தான் முருகனுக்கு பார்வதி வேலாயுதத்தை தந்ததாகக் கதை. தை அமாவாசை அன்று தான் அபிராமி பட்டருக்கு அபிராமி அம்பிகை அருள்புரிந்தாள்.அமாவாசையை பௌர்ணமியாக மாற்றிக் காட்டினாள். அபிராமி அந்தாதி பிறந்தது.
பல சிவன் மற்றும் கோயில்களில் தை வெள்ளியில் அம்பாளுக்கு விசேஷமான அலங்காரங்கள் செய்திருப்பார்கள். பல இடங்களில் திருவிளக்கு பூஜை நடை பெறும். இன்றைய தினம் அம்பாளுக்கு விரதம் இருந்து, அபிராமி அந்தாதி சௌந்தர்ய லஹரி முதலிய அம்பாள் ஸ்துதிகளைச் சொல்வது நல்லது.
வெள்ளிக்கிழமை வீட்டை நன்றாகச் சுத்தப்படுத்தி துடைக்க வேண்டும். வெள்ளிக் கிழமை செய்வதை விட வியாழன் அன்றே செய்து விடுவது நல்லது. இழைக்கோலம் போட வேண்டும் அரிசியும் காசும் வைத்து பூஜை செய்ய வேண்டும். மாலை நேரங்களில் மகாலட்சுமி நம் வீட்டுக்கு வருவதாக ஐதீகம். அந்நேரம் பூஜைக்கு உகந்த நேரம். வீட்டின் நிலை கதவு மற்றும் பூஜை அறையின் வாசல் இங்கெல்லாம் நன்கு துடைத்து மஞ்சள் குங்குமம் இட வேண்டும். பூஜை அறையில் மகாலட்சுமி, மீனாட்சி போன்ற தெய்வ உருவங் களுக்கு மலர்மாலை சாற்ற வேண்டும்.
அன்று ஒரு வேளை மட்டும் உணவு உட்கொள்ள வேண்டும். சுமங்கலி பெண் களை வீட்டுக்கு வரவழைத்து பலகாரம் தந்து புடவை ஜாக்கெட் தந்து ஆசீர்வாதம் பெறலாம். வெள்ளை நிற ஆடைகளையோ, வெள்ளை மொச்சை அல்லது வெள்ளியால் ஆன பொருட்களை தானம் செய்வது நல்லது. சுக்கிரதோஷம் இதனால் விலகும். வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமி ஹோமம் செய்யலாம். ஸ்ரீ சூக்தத்தால் ஹோமம் செய்வது நல்ல பலனைத் தரும்
பெருமாள் கோயில்களில் தாயார் சன்னிதிகளில் தை வெள்ளி அன்று விசேஷமான வழிபாடுகள் நடக்கும். தைவெள்ளி மகாலட்சுமியை வணங்கு வது கோடீஸ்வர யோகத்தைத் தரும் என்பார்கள்.
தை வெள்ளியில் அம்பாளை வணங்குவதன் மூலமாக அஷ்ட ஐஸ்வர் யங்களும் பெருகும். குடும்ப ஒற்றுமை ஓங்கும். கடன் தொல்லைகள் குறையும். சத்ரு நிரசனம் ஏற்பட்டு பகை இல்லாத வாழ்க்கை வாழலாம் .
சில இடங்களில் தை முதல்வெள்ளியில் மகிஷாசுர மர்த்தினியையும் பிரத்யங்கிரா தேவியையும் வணங்கி யாகங்கள் செய்வார்கள். ஆயிரம் மஞ்சள் துண்டு களை வைத்து துர்கா யாகம் என்று ஒரு யாகம் செய்வதும் உண்டு .
இன்றைய தினம் செந்நிற மலர்களைக் கொண்டு அல்லது செவ்வரளி மலர்களைக் கொண்டு துர்க்கையை விசேஷமாக வணங்க வேண்டும்.
மகாலட்சுமி வழிபாடு நடத்துபவர்கள் அன்றைக்கு மொச்சைக்காயை நிவே தனம் செய்து வெண் தாமரை மலர்களால் மகாலட்சுமியை அர்ச்சனை செய்ய வேண்டும். தித்திப்பு நிவேதனம் செய்ய வேண்டும். ஒரு கேசரியோ சக்கரை பொங்கலோ செய்து மகாலட்சுமியை வணங்க வேண்டும். வீட்டிலேயே இந்த வழிபாடு நடத்துகின்றவர்கள் கொழுக்கொட்டை வடை பாயாசம் சர்க்கரை பொங்கல் வைத்து மகாலட்சுமியை வணங்கலாம். கனகதாரா ஸ்தோத்திரம் சொல்வதன் மூலமாக தாரித்ரியம் விலகி செல்வம் வளரும். ஸ்ரீஸ்துதி சொல்லலாம். 27 நட்சத்திரக்காரர்களும் இன்றைய தினம் மகாலட்சுமியை வணங்க வேண்டும். இதற்காகவே கீழ்க்கண்ட 27 போற்றி மந்திரங்களை தந்துள்ளோம்.ஒவ்வொருவரும் மாலை நேரத்திலே விளக்கு வைத்து மகாலட்சுமி படத்துக்கு பூ மாலையை சாற்றி தூப தீபங்கள் காட்டி இந்த போற்றி மந்திரங்களால் அர்ச்சனை செய்து வணங்க அமோகமான வாழ்க்கையைப் பெறலாம்.
ஓம் ஸ்ரீ தேவியே போற்றி
ஓம்மங்கள ரூபிணி போற்றி
ஓம்மாங்கல்யம் காப்பவளே போற்றி
ஓம்செல்வத்தின் தலைவியே போற்றி
ஓம் தேவ தேவியே போற்றி
ஓங்காரமானவளே போற்றி
ஓம்உயர்வினைத் தருபவளே போற்றி
ஓம்உலகத்து நாயகியே போற்றி
ஓம்உத்தமியே போற்றி
ஓம் மாதவ பிரியே போற்றி
ஓம் மலரடி பணிந்தோம் போற்றி
ஓம்மழை தரும் முகிலே போற்றி
ஓம்மங்கையர்கள் திலகமே போற்றி
ஓம்குங்குமதேவியே போற்றி
ஓம்குலம் காக்கும் வள்ளலே போற்றி
ஓம்கடைக்கண் விழி அழகே போற்றி
ஓம்கருணையின் வடிவமே போற்றி
ஓம் அம்புலி முகத்தவளே போற்றி
ஓம்ஆருயிர்க்கும் தாய் நீ போற்றி
ஓம் அகிலத்தை ஆள்பவளே போற்றி
ஓம் அறிவாற்றல் தருபவளே போற்றி
ஓம் வரமருளும் தேவியே போற்றி
ஓம்வடிவாம்பிகை நீயே போற்றி
ஓம்அருமருந்தாய் ஆனவளே போற்றி
ஓம்அணைத்து எம்மைக் காத்திடுவாய் போற்றி
ஓம் திருத்தக்க செல்வமே போற்றி
ஓம் தேடி உன்னைச் சரணடைந்தோம் போற்றி போற்றி
