படுக்கை சுகமளிக்கும் பரிகார ஸ்தலங்கள்:
- வாழ்க்கையில் எத்தனை எவ்வளவு எவ்வளவு வசதிகள் இருந்தாலும் படுக்கை சுகமும் உறக்கமும் சரியாக அமையவில்லையென்றால் ஈன்ற பொருள் அனைத்தும் வீண்தான். அத்தகைய சோக நிலையடைந்தவர்கள் எங்கும் சுற்றி ரங்கனை தேடு என அரங்கனிடம் செல்வதுதான் சிறந்த பரிகாரம். களத்திர தோஷமிருப்பவரகள் கணவன் மனைவிக்குள் பிரச்சனை உள்ளவர்கள் களத்திர தோஷம் நீங்கி படுக்கை சுகமும் நிம்மதியான உறக்கம் கிடைக்க திருச்சி ஸ்ரீ ரங்கநாதரை வெள்ளிக்கிழமையில் வழிபடுவது சிறப்பாகும்.
- கணவன் மனைவிக்குள் எத்தகைய பிரச்சனையினாலும் கட்டில் சுகமும் தொட்டில் வரமும் இன்றி தவிப்பவர்கள் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகில் பெண்ணையாற்றின் கரையில் சயன கோலத்தில் விளங்கும் ஆதிரங்கநாதரை வெள்ளிக்கிழமை வணங்கிவர கணவன் மனைவிக்குள் திகட்ட திகட்ட இன்பமும் நிம்மதியான உறக்கமும் மழலை செல்வமும் ஏற்படும்.
3.மனநிம்மதியின்றி தவிப்பவர்கள் கணவன் மனைவிக்குள் அந்நியோன்யமின்றி இருப்பவர்கள் நிம்மதியும் படுக்கை சுகமும் உறக்கமும் பெற சந்திரபகவான் வணங்கிய திரு இந்தளூர் பரிமள ரங்கநாரை திங்கள் கிழமையில் வழிபடுவது சிறப்பு.
- கடன் தொல்லையால் உறக்கமின்றி தவிப்பவர்கள், வருமானம் பெருகி கடன் அடையவும் நிம்மதியான உறக்கம் கிடைக்கவும் மனைவியிடத்தில் கௌரவம் பெறவும் ஸ்தல சயன பெருமாளை புதன் கிழமையில் வணங்குவது சிறப்பு.
- துயரத்தில் இருப்பவரை இசையின் மூலமும் குணப்படுத்த முடியும் என்கின்றனர் மருத்துவ வல்லுனர்கள். மனதிற்க்கு சுகமளிக்கும் இசைக்கும் சுக்கிரன்தான் காரகனாம். எனவே பெரும் உணர்ச்சிக்கும், உத்வேகம் வர கேட்க வேண்டிய அடானா ராகத்தையும் மனதை வசீகரிக்க, மயக்க ஆனந்த பைரவி, உசேனி, கரகரப்பிரியா ராகத்தையும் கணவன் மனைவி இருவரும் கேட்பது கூட மிகுந்த பலனளிக்கும்.
- சுக்கிரனின் ஆதிக்கம் பெற்ற பூரம் நட்சத்திரம் வானத்தில் ஒரு கட்டில் கால் போல் காட்சி அளிக்கிறது. பூர நக்ஷத்திரத்தில் அதிபதி சுக்கிரன் ஆவார். மேலும் தூக்கம், தாம்பத்யம், மருத்துவ மனை வாசம் போன்ற படுக்கை சார்ந்த அனைத்து விஷயங்களுக்கும் காரகர் சுக்கிர பகவான் ஆவார். கால புருஷ ராசியின் பன்னிரெண்டாமிடமும் அயன சயன போக ஸ்தானமும் ஆன மீனத்தில் சுக்கிரன் உச்சம் பெருவது குறிப்பிடத்தக்கது, சென்னை மயிலாப்பூர் வெள்ளீஸ்வரர் ஆலயத்தில் உள்ள சுக்கிர மூர்த்தியை பரணி, பூரம் மற்றும் பூராட நக்ஷத்திர நாளிலும் வெள்ளிக்கிழமை சுக்கிர ஹோரையிலும் வணங்கிவர அனைத்து படுக்கை சம்மந்த பிரச்சனைகளும் முக்கியமாக தாம்பத்தியத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் விலகும் என்பது நிதர்சனம்.
- தற்காலங்களில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விடிய விடிய மொபைல் போன், லேப்டாப் போன்ற எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களை உபயோகித்து அதனால் தூக்கமின்றி தவிக்கின்றனர். தூக்கத்தின் காரகரான சுக்கிரனே எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களின் காரகன் ஆவார், எனவே சுக்கிர பகவானை வணங்கி வர எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களால் தூக்கமின்மை ஏற்படாது.
