(26.8.2023 முதல் 1.9.2023 வரை)
இவ்வார கிரகநிலைகள்:
மேஷத்தில் குரு ,ராகு , சுக்கிரன் கடகத்தில் வக்கிரம், சிம்மத்தில் சூரியன் ,புதன் கன்னியில் செவ்வாய், துலாத்தில் கேது, மகரத்தில் சனி வக்கிரம்
மேஷம்
சாதகங்கள்: லக்னாதிபதி செவ்வாய் ஆறில் இருப்பது ஒரு விதத்தில் நல்லது தான். எட்டுக்குடையவன் கெட்டிருக்கிறான் அல்லவா. அது லாபம் .பொதுவாக செவ்வாய் 3, 6, 11 இடத்தில் இருப்பது ஒரு நல்ல அமைப்பு தான். எதிர்பாராத சில திருப்பங்கள் நிகழும். எங்கிருந்தோ தைரியம் வந்து செயல்களை கவனத்தோடும் வேகத்தோடும் செய்ய வைக்கும். வழக்கம்போல் குரு ஐந்தாம் இடத்தையும் ஏழாம் இடத்தையும் பார்ப்பதும் மனோரதங்களை நிறைவேற்றும் அமைப்புதான். வணிகம் தொழில் புது யுக்தி தேவைப்படும். புதன் ஐந்தாம் வீட்டில் இருக்கிறார். ராசியில் குருவோடு ராகு இணைந்து இருக்கிறார். பூர்வ புண்ணிய சூரியன் ஆட்சி பெறுகிறார். புதிய முயற்சிகள் வெற்றி பெறும்.
கவனம் தேவை : ஏழுக்குரிய சுக்கிரன் நாலில் வக்கிரம் அடை கிறார். கணவன் மனைவி நட்பு வட்டாரங்களில் சிக்கல்கள் மற்றும் சிறு உரசல்கள் வரலாம். சனி பதினொன்றில் இருந்து பத்தில் திரும்பி வக்கிரம் பெறுவதால் தொழில் போட்டிகள் முன்னைவிட பலப்படும். மிக மிக எச்சரிக்கையோடு அணுக வேண்டும். தொழில் விஸ்தரிப்பு இப்போது செய்ய வேண்டாம். நட்பு சில நேரம் பகை யாகும்.
பரிகாரம்: அருகில் இருக்கக்கூடிய முருகன் சன்னதிக்குச் சென்று அர்ச்சனை செய்து வாருங்கள் அல்லது வீட்டில் மாலையில் கந்த சஷ்டி கவசம் படியுங்கள். “ஓம் சரவணபவ” என்கிற மந்திரத்தை கண்ணை மூடி 27 முறை உள்முகமாக முருகனை நினைத்துச் சொல்லுங்கள்.
ரிஷப ராசி
சாதகங்கள்: ராசிநாதன் சுக்கிரன் 3ல் வக்கிரம் அடைவதால் சில நன்மைகள் உண்டு. கேந்திரத்தில் சூரியன் ஆட்சி பெற்று இருக்கிறார். பொதுப்பணிகளில் ஆர்வம் இருக்கும். புத ஆதித்ய யோகம் செயல்படும். புத்தி கூர்மையால் சில வேலைகளை கச்சிதமாக முடிப்பீர்கள். செவ்வாயின் சஞ்சாரம் எச்சரிக்கையுடன் எதையும் அணுக வைக்கும். இடமாற்றங்கள் உண்டு .வார இறுதியில் பொருளாதார சுணக்கம் நீங்கும். உத்தியோகமாற்றம் உண்டு. பதவி உயர்வுக்கு வாய்ப்பும் உண்டு .வக்கிரகதியில் மகர ராசியில் சனி உலவுவதால் சில எதிர்பாராத நன்மைகள் ஏற்படும். மனை வாங்கும் முயற்சி வெற்றி பெறும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பூர்வீக சொத்து பிரச்சனை தீரும். கேது ஆறில் இருக்கிறார். ஆலய தரி சனம் செய்யும் வாய்ப்பு ஏற்படும்.
கவனம் தேவை : என்ன இருப்பினும் ராசிநாதன் சுக்கிரன் வக்ர மடைகிறார்.எனவே அது பலம் குறைவுதான். எதையும் யோசித்து நிதானமாகச் செயல்படவும். எதிலும் அவசரம் காட்ட வேண்டாம். பிள்ளைகளால் அலைச்சலும் நிம்மதி இழப்பும் நிகழலாம் . கண வன் மனைவி உரசல்கள் வரும். கருத்து வேறுபாடுகள் சற்று அதி கரிக்கும் . வேலையாட்கள் ஒத்துழைக்க மறுக்கலாம்.
சந்திராஷ்டமம் : 26.8.23 காலை 8.37 முதல் 28.8.23 காலை 10.39 வரை சந்திராஷ்டமம் உண்டு. சந்திராஷ்டம தினத்தில் பேச் சில் கவனமாக இருக்கவும். வாதப்பிரதிவாதங்களில் ஈடுபட வேண் டாம். இயன்ற அளவு மௌனமாக இருப்பது நல்லது.
பரிகாரம்: குலதெய்வ வழிபாடும்,பிதுர் (முன்னோர்)வழிபாடும் விட வேண்டாம். சிறு உயிரினங்களுக்கு உணவு தந்து வாருங்கள்.
மிதுனம்
சாதகங்கள்: ராசிநாதன் மூன்றில் யோக நிலையில் சூரியனோடு சேர்ந்து இருக்கிறார் .குரு பார்வை பெறுவது சிறப்பு. கன்னியில் இருக்கும் செவ்வாயால் சில நன்மைகள் உண்டு. பூமி விற்பனை யாகும்.பொருளாதார வளம் கூடும். ஆரோக்கியம் அதிகரிக்கும். கூட் டுத்தொழில் வெற்றி பெறும். வாரக் கடைசியில் வக்கிர நிவர்த்தி ஆகும் ராசிநாதன் புதனால் நழுவிய வாய்ப்பு திரும்ப கிடைக்கும். தவறுகள் திருத்திக் கொண்டால் நல்ல எதிர்காலம் உண்டு. சுப நிகழ்வுத் தடைகளும் அகலும். முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். வணிகம் லாபகரமாக இருக்கும்.திருத்தல மற்றும் ஆன்மீக தரிசனம் உண்டு.
கவனம் தேவை: 5,12க்கு உரிய சுக்கிரன் வக்ரம் பெறுவதால் பிள் ளைகளால் சில பிரச்சனைகள் மற்றும் மனக்குழப்பங்கள் ஏற்படும். பூர்வீகச் சொத்து பிரச்சனைகள் தலைதூக்கும். அஷ்ட மத்து சனி மறுபடியும் ஆதிக்கத்தில் வருவதால் இன்னும் சில காலம் நீங்கள் காத்திருக்க வேண்டி இருக்கும் .தொழில் போட்டியில் பிரச்சனையும் உருவாகும். எதையும் புத்திசாலித்தனமாக அணுக வேண்டும்.பிறர் விஷயங்களில் தலையிடாதீர்கள்.
சந்திராஷ்டமம்: 28.8.23 காலை 10.39 முதல், 30.8.23 காலை 10.19 வரை சந்திராஷ்டமம் உண்டு. சந்திராஷ்டம தினத்தில் பேச்சில் கவனமாக இருக்கவும். வாதப் பிரதிவாதங்களில் ஈடுபட வேண்டாம். இயன்ற அளவு மௌனமாக இருப்பது நல்லது.
பரிகாரம்: மகாலட்சுமி வழிபாடும் ஸ்தோத்திர பாடல்கள் பாராயணமும் மனக்கவலையை நீக்கும். ஆறுதலைத் தரும். கன்றுடன் கூடிய பசுவை வலம் வந்து வணங்கி, பழமோ கீரையோ தாருங்கள்.
கடக ராசி
சாதகங்கள்: சுகாதிபதி சுக்கிரன் வக்ரமடைந்திருக்கிறார்.தாயின் உடல்நிலை அபிவிருத்தியாகும். புதிய சொத்துக்களை வாங்கும் அமைப்பு உண்டு. புதிய வாகனங்களை மாற்றலாமா என்று நினைப் பீர்கள். வெளிநாட்டு முயற்சி வெற்றி அளிக்கும் .முக்கிய பிரமுகர் களின் ஆதரவு கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தடைப்பட்ட கடன் உதவிகள் கிடைக்கும் .பழைய கடன்கள் அடையும். பேச் சாற்றல் அதிகரிக்கும் .புகழ் செல்வாக்கு வளரும். நட்பு உள்ளங்கள் உதவி செய்யும். கலைத்துறையில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். புதிய ஆடை ஆபரணம் வாங்குவதும், சொந்த உறவுகளைச் சந்திப்பதும் நடை பெறும்.
கவனம் தேவை: கண்டகச் சனி நடப்பதால் சில தவிர்க்க முடியாத சங்கடங்கள் உண்டு. கணவன் மனைவி கருத்து வேறுபாடுகள் தலை தூக்கும். வாகனங்கள் பழுது ஏற்பட்டு எரிச்சலை உண்டாக்கும். எதிலும் தாமதம் ஏற்படும். குரு வக்ரகதியில் இருப்பதால் இடமாற்றம் வேலை மாற்றம் உண்டு. வீண் அலைச் சல் மற்றும் சட் சட்டென்று கோபம் ஏற்படும்.
சந்திராஷ்டமம் : 30.8.23 காலை 10.19 முதல், 1.9.23 காலை 9.36 வரை சந்திராஷ்டமம் உண்டு.. சந்திராஷ்டம தினத்தில் பேச் சில் கவனமாக இருக்கவும். வாதப் பிரதிவாதங்களில் ஈடுபட வேண்டாம். இயன்ற அளவு மௌனமாக இருப்பது நல்லது.
பரிகாரம் : குலதெய்வ வழிபாடும் முன்னோர்கள் ஆசியும் முக் கியம். இயன்றால் வெள்ளிக்கிழமை ஒரு சுமங்கலிக்கு ஜாக்கெட் , வளையல், குங்குமம் முதலிய மங்லப் பொருட்களைத் தாருங்கள்.
சிம்மம்
சாதகங்கள்: 12-ஆம் இடத்தில் சுக்கிரன் வக்கிரமடைந்திருக்கிறார். தொழில் மாற்றங்கள் உண்டு. திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி உண்டு .நிதி பொருளாதாரம் முதலியன முன்னேறும். உங்கள் ஆலோசனைக்கு மதிப்பு கொடுப்பார்கள். மேலதிகாரிகள் பாராட்டுவார்கள். உத்தியோகத்தில் சாதகமான பலன்கள் உண்டு. செவ்வாய் 2-ஆம் இடத்தில் இருப்பதால் தனவிருத்தி ஏற்படும். புதிய வீடு வாங்கும் யோகம் உண்டு. மனை கட்டி குடிபோகும் வாய்ப்பும் உண்டு. பல கிரகங்கள் சுபத்துவதோடு இருக்கின்றன .எனவே பிரச்சனை இல்லாத வாரமாக அமையும் . கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
கவனம் தேவை: எதிலும் கவனக்குறைவு இருக்கக் கூடாது. சங்கடங்கள் ஏற்படும் சில நேரங்களில் குடும்பத்தை விட்டு வேறு ஊரில் இருக்கும் படி நேரும்.கடன் வசூல் பிரச்சனையில் பிறர் தலையீடுகள் இருக்கும். கொடுத்த கடனைப் பெறுவதில் கவனம் தேவை.
சந்திராஷ்டமம் : 1.9.23 காலை 9.36 முதல், 3.9.23 காலை 10.38 வரை சந்திராஷ்டமம் உண்டு.. சந்திராஷ்டம தினத்தில் பேச் சில் கவனமாக இருக்கவும். வாதப் பிரதிவாதங்களில் ஈடுபட வேண்டாம். இயன்ற அளவு மௌனமாக இருப்பது நல்லது. .
பரிகாரம்:காலையில் அருகில் உள்ள சிவாலயம் சென்று “ஓம் நமச் சிவாய” மந்திரத்தை 108 முறை உள்முகமாக தியானியுங்கள். முடிந் தால் ஆதித்ய ஹிருதயம் காலை வேளையில் பாராயணம் செய் வது அற்புதமான பலன்களைத் தரும்…
கன்னி
சாதகங்கள்: சுக்கிரன் அதாவது தனகாரகன் 11ல் வக்கிரம். வெளியூர் பயணங்கள் வெற்றி பெறும். எடுத்த காரியங்கள் நல்ல முறையில் முடியும். குடும்பத்தினர் ஆசைப்பட்டது வாங்கி தருவீர்கள். தொழில் வெற்றி உண்டு. ஆதாயமான தகவல்கள் கிடைக்கும். மேலதிகாரிகள் இணக்கம் காட்டுவார்கள் . குருவும் வக்கிரம் அடைய அஷ்டம தோஷங்கள் விலகும். சுப காரிய தடைகள் விலகும். பொது வாழ்வில் ஏற்றம் உண்டு.12 ல் சூரியன் மற்றும் புதன் . வீடு, வாகனம் வாங்குவீர்கள் அல்லது மாற்றக் கூடிய வாய்ப்பு இருக்கும். குடும்பத்தில் இனிமை இருக்கும். சந்தோசம் இருக்கும்.
கவனம் தேவை: அவ்வப்பொழுது அசதியும் எதிர்பாராத செலவுகளும் ஏற்படும். கன்னிச்செவ்வாயால் சில சங்கடங்கள் இருப்பதையும் மறுக்க முடியாது .தேவையற்ற செலவுகள் ஏற்படும். பூமி விற் பனையில் தாமதமும் ஏமாற்றமும் ஏற்படும். வீடு கட்டுவதில் சில தடைகள் உண்டு. சனியின் வக்கிரகதியால் பிள்ளைகளால் சில கவலைகளும் பிரச்சனைகளும் ஏற்படும்.
பரிகாரம்: லட்சுமி நரசிம்மரை வணங்குங்கள். இராமநாமத்தை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ஜபியுங்கள்.நன்மையே நடக்கும்.
துலாம் ராசி
சாதகங்கள்: சுக்கிரனே அட்டமாதிபதி . அவர் வக்கிரம்.எடுத்த செயல்களில் வெற்றி கிடைக்கும். உங்கள் மதிப்பு உயரும். 11ல் சூரியன் ஆட்சி என்பது நல்ல அமைப்பு. கூடவே பாக்கியாதிபதி புதன் இருக்கிறார்.. நிதிநிலை முன்னேற்றமாக இருக்கும். லாபகரமான முயற்சிகள் செய்வீர்கள். புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்களும் கிடைக்கும். முக்கிய புள்ளிகளைச் சந்திப்பீர்கள். அது உங்களுக்கு உதவும். வேலை செய் பவர்களுக்கு ஊதிய உயர்வு ,பதவி உயர்வு முதலியவை கிடைக்கும் வாய்ப்பு உண்டு. ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டாகும் .
கவனம் தேவை: ராசிநாதன் வக்கிரம் என்பதால் ஆரோக்கியம் அவ் வப்போது சீர்கெடும். இடமாற்றம் உண்டு. தொழில் மாற்றங்களும் உண்டு. எதிர்பாராத விரயங்கள் அதிகரிக்கும். சற்று கவனித்து செயல்பட வேண்டும் .அதை சுப விரயமாக மாற்ற முடியுமா என்று சிந்தித்தால் நல்லது. எதிர்பாராத தடைகள் வருவதோடு கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் சில பிரச்சனைகளை ஏற்படுத்துவார்கள்.
பரிகாரம்: தொடர்ந்து 5 வெள்ளிக்கிழமை அன்றும் சனிக்கிழமை அன்றும் மகாலட்சுமிக்கும் பெருமாளுக்கும் ஒரு அர்ச்சனை செய்து வாருங்கள். அல்லது விளக்கு போடுங்கள். முடிந்தால் ஏழை முதிய வர்களுக்கு உங்களால் இயன்ற உதவி செய்யுங்கள்..
விருச்சிக ராசி
சாதகங்கள்: சூரியன் ஆட்சி பெற்று இருக்கிறார். அது அவருக்கு தொழில் இடம்.தொழில் தடைகள் விலகும். பங்குதாரர்கள் அனுசரணையோடு நடந்து கொள்வார்கள். எதுவும் சற்று அனுகூலமாகவே இருக்கும். வருவாய் அதிகரிக்கும். நண்பர்கள் ஒத்துழைப்பார்கள். பொருளாதாரத்தில் நிறைவு காண்பீர்கள். சுய தொழில் விருத்தி ஆகும். சுக்கிரன் பாக்கியஸ்தானத்தில் வக்கிரம் அடைந்து இருப்பதால் ஆபரண சேர்க்கை யோகம் உண்டு. புதிய பதவிகள் கிடைக்கும். இளைய சகோதரர்களால் உதவி உ ண்டு. அவர்கள் வீட்டு சுப காரியங்களிலும் கலந்து கொள்ளும் வாய்ப்பு உண்டு. எனவே ஆசைகள் நிறைவேறும். அரசாங்க அலுவல்கள் சாதகமாக நடைபெறும்.
கவனம் தேவை:. குரு வக்ரமாக இருப்பதால் எச்சரிக்கையோடு இருக்கவும். திடீர் செலவுகள் ஏற்படும். பழைய கடன்கள் எதிர்பாராத நிலையில் வந்து தொல்லை தரும். பாகப்பிரிவினை பிரச்சனைகள் தலைதூக்கும். எதிர்பார்த்தபடி சில நேரங்களில் பணம் கைக்கு வராததால் ஏமாற்றம் ஏற்படும். சிறு உடல் உபாதைகள் சோர்வடைய செய்யும்.
பரிகாரம்: வாயில்லா ஜீவன்களுக்கு ஏதேனும் உணவை அளியுங் கள். யாசகர்களுக்கு ஒரு வேளை உணவு பொட்டணம் வாங்கித் தாருங்கள். மாற்றுத்திறனாளிக்கு உதவுங்கள்…
தனுசு ராசி
சாதகங்கள்: சுக்கிரன் ஆறில் வந்து வக்ரம் பெறுகின்றார். இது ஒரு விபரீத ராஜயோகம் வாகனம் வீடு போன்ற தொழில்கள் சிறக்கும் உறவுகள் கைகொடுக்கும் குலதெய்வத்தின் அருள் உண்டு. இந்த வாரத்தில்வருவாய் பரவாயில்லை. தந்தை வழி உறவுகள் நன்றாக இருக்கும். பயணத்தில் ஆதாயங்கள் கிடைக்கும் செவ்வாய் பத்தில் இருப்பதால் புதிய ஒப்பந்தங்கள் உருவாகும் .புதிய வேலைகளும் கிடைக்கும். வார இறுதியில் புதன் வக்ர நிவர்த்தி ஆவதால் எதிலும் தெளிவாக அணுகும் புத்திசாலித்தனம் ஏற்படும்..
கவனம்தேவை: பிறர் விமர்சனங்கள் குறை கூறுதல் தொடரும். அது உங்கள் மனதை பாதிக்கும் ராசிநாதன் குரு வக்ரகதி அடைந்திருக்கிறார். எனவே எவ்வளவு முயற்சி செய்தாலும் யாரோ திடீர் என்று காலை பிடித்து இழுப்பது போல உணர்வீர்கள். சில தடைகள் அவ்வப்பொழுது ஏற்பட்டு கொண்டே இருக்கும். அது உங்களை அலைகழிக்கும். பணிச்சுமை ஏற்படும். அடுத்தவர் வேலையும் சேர்த்து செய்ய வேண்டி இருக்கும். நம்பியவர்கள் கடைசி நேரத்தில் கைவிட்டு விடுவார்கள். மாற்று ஏற்பாடுகளை யோசனை செய்து கொள்ளவும் .
பரிகாரம்: சனிக்கிழமை நல்லெண்ணெய் தீபம் போடுங்கள். அனு மான் கோயிலுக்கும் திருமால் கோயிலுக்கும் செல்லுங்கள். அனு மன் சாலிசா படியுங்கள் அல்லது உங்களுக்குத் தெரிந்த அனுமன் பாடலை வாய் விட்டுச் சொல்லுங்கள்..
மகர ராசி
சாதகங்கள்: செவ்வாய் பாக்கியஸ்தானத்தில் இருக்கிறார். சுகாதிபதி பாக்கியஸ்தானத்தில் இருப்பதால் நினைத்தது நடக்கும் வாய்ப்பு உண்டு. எதிலும் தைரியம் பிறக்கும். நல்ல தகவல்கள் கிடைக்கும். குரு 12க்குரியவர் .வக்கிரம் பெறுவது நல்லதுதான் .சகோதரர்களால் உதவிகளும் ஆதாயங்களும் உண்டு. வீண்விரயம் குறையும். சுபச் செலவுகள் ஏற்படும். புதன் பாக்கிய அதிபதி. அவர் மறைவது நல்லது. நிறைந்த பலனை அவர் தருவார். துன்பங்களை வெல்லும் மனவலிமையும் அறிவாற்றலையும் ஏற்படுத்துவார் .
கவனம் தேவை: எதிர்பார்ப்புகளில் தடங்கல்கள் வரும். வீண் சண் டைகள் தலைதூக்கும் என்பதால் நிதானம் முக்கியம். சில பயணங் களை தவிர்க்கப் பாருங்கள். எட்டாம் இடத்தில் அதிக கிரகங்கள் இருப்பதால் எதிலும் அளந்து பேசுங்கள். உடல் நிலையிலும் மன நிலையிலும் கவனம் செலுத்துங்கள். தீடிர் திடீர் என்று சோர்வும் உற்சாகக் குறைவும் ஏற்படும். யாரோ ஒருவருடைய நிர்ப்பந்தமும் அழுத்தமும் உங்களை எரிச்சல் அடைய வைக்கும்..
பரிகாரம்: சதுர்த்தியன்று விநாயகர் பெருமானை தீபம் ஏற்றி வணங் குங்கள். சனிக்கிழமை தவறாமல் ஆஞ்சனேயரை வணங்குங்கள் . நல்ல எண்ணெய் தீபம் ஏற்றுங்கள்.
கும்பம்
சாதகங்கள்: ஏழில் சூரியன் ஆட்சி பெற்று இருக்கிறார். புதன் சூரியன் இணைப்பு. நண்பர்கள் ஒத்துழைப்பார்கள். முயற்சிகள் வெற்றி பெறும். வழக்கு சாதகமாகும். தம்பதிகள் கருத்து வேற்றுமை மறையும். செய்த முயற்சிகள் பலன் கிடைக்கும். புதன் பலம் பெறுகிறார். பிள்ளைகளால் நிம்மதி உண்டு. அவர்களுடைய மேற் படிப்பு வேலை முதலிய முயற்சிகள் பலிக்கும். வெளிநாட்டு வேலை முயற்சிகளும் சாதகமாக அமையும் .வீடு மாற்றம், வேலை மாற்றம் உண்டு..
கவனம் தேவை: ஆரோக்கிய குறைவுகள் ஏற்படலாம். ஏற்கனவே உள்ள நோய்களின் தீவிரம் அதிகரிக்கும். வீண் வாக்குவாதங்கள் வேண்டாம். சில காரியங்கள் அதிக செலவில் நடைபெறும். எதிர்பாராத வம்பு வழக்குகள் வந்து சேரும்.பணத்தட்டுப்பாடுஅவ்வப் பொழுது ஏற்படும். சகோதரர்களால் மனக்கசப்பு ஏற்படும். சுப காரிய முயற்சிகளில் தடைகள் உண்டு.
பரிகாரம்: குலதெய்வ கோயிலுக்கு ஒருமுறை சென்று வாருங்கள் அல்லது வீட்டிலேயே தினம் சில நிமிடம் பூஜையில் குல தெய்வத்தை நினைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு பிடித்த மகா னின் படம் எப்பொழுதும் உங்கள் பாக்கெட்டில் அல்லது கைப் பையில் இருக்கட்டும்.
மீன ராசி
சாதகங்கள்: சூரியன் ஆறில் ஆட்சி பெற்று இருக்கிறார். ஆரோக் கியம் அதிகரிக்கும்..வரவுகள் அதிகரித்து பொருளாதார நெருக்கடி நீங்கும். திருமணம் போன்ற சுப காரியத் தடைகள் நீங்கும். . 8க்குரிய சுக்கிரன் வக்ரத்தை அடைவதால் தூர தேச பயணம் ஏற்படும் ஏழாம் ஆதி புதனின் கேந்திர தோஷம் வக்கிரமாக இருப்பதால் வார கடைசி வரை விலகி விடுகிறது.அதனால் இப்போதைக்கு குடும்ப ஒற்றுமை பலப்படும். வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். செவ்வாயினுடைய அமைப்பினால் பூமியோகம் ஏற்படலாம்.. வீட்டை பழுது பார்ப்பது, கட்டுதல் நடைபெறும். .
கவனம் தேவை: ராசிநாதன் குரு வக்கிரம் அடைந்திருக்கிறார். உங்களுக்கு நீங்களே எதிரியாவீர்கள். உங்கள் செயல்கள்,மற்றும் அவசரத்தாலும் கவனமின்மையாலும் அலட்சியத்தாலும் சில இழப் புகளைச் சந்திக்க வேண்டி இருக்கும். புது முயற்சி வேண்டாம். எதிர்பார்த்த சில தகவல்கள் தாமதமாகும் அல்லது எதிரிடையாக போகும் என்பதால் எதையும் கவனத்தோடு செய்யுங்கள். பொறுப் போடு செய்யுங்கள். நண்பர்களுடன் தேவையற்ற பகை வேண்டாம். மருத்துவ செலவு சற்று அதிகரிக்கும்.
பரிகாரம்: வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு முன் சில நிமி டங்கள் தியானம் செய்யுங்கள். தெருவில் எதிர்படும் பிராணிகளுக் கும் பறவைகளுக்கும் உணவளியுங்கள் .
