“கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான்
புதுக் கவிதைகள் பிறந்ததம்மா
மன்னன் பிறந்தான் எங்கள் மன்னன் பிறந்தான்
மனக் கவலைகள் மறைந்ததம்மா “
என்ற பாடல் எல்லோருக்கும் தெரியும். கண்ணன் பிறந்த தினம் “ஸ்ரீஜெயந்தி” “கிருஷ்ண ஜெயந்தி” என்றெல்லாம் பல பெயர்களில் கொண்டாடப்படும். கண்ணன் அவதார தினமான கோகுலாஷ்டமி செப்டம்பர் 6ஆம் தேதி குதூகலமாகக் கொண்டாட இருக்கிறோம் . குழந்தை கண்ணனின் இந்த குதூகல விழா.
கண்ணனின் பெருமைகளைப் பாடாத கவிஞர்கள் இல்லை. காவியங்கள் இல்லை. புராணங்கள் இல்லை. வேதங்களை தொகுத்த வியாச மகரிஷி ஐந்தாவது வேதமாக மகாபாரதத்தையும் எழுதினார்.
நீடாழி உலகத்து மறை நாலோடு ஐந்து என்று நிலை நிற்கவே
வாடாத தவ வாய்மை முனி ராசன் மாபாரதம் சொன்ன நாள்
ஏடாக வட மேரு வெற்பாக வங் கூர் எழுத்தாணி தன்
கோடாக எழுதும் பிரானைப் பணிந்து அன்பு கூர்வாம் அரோ.
மிகச் சிறந்த பிரம்ம சூத்திரத்தையும் தொகுத்து இயற்றினார். இத்தனை சாதனைகளைச் செய்தும் அவர் மனம் திருப்தி அடையவில்லை.
3.ஸ்ரீ பாகவதத்தால் வருத்தம் தீர்ந்தது
ஏன் தனக்கு சந்தோசம் இல்லை.நிம்மதி இல்லை .அமைதி இல்லை எனத் தவித்தார்.நாரதர் அப்போது தோன்றி உபதேசித்தார்.கண்ணன் கதையைப் பாடுங்கள்.உங்கள் மனப்புண் ஆறும்.ஆனந்தம் கிடைக்கும்.
வசுதேவ சுதம் தேவம் கம்ச சாணூர மர்தனம்
தேவகி பரமானந்தம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும்
தேவகிக்கு பரமானந்தம் தந்தவன் ..உங்களுக்கும் தருவான்.வியாசர் திருப்தி அடைந்தார்.கண்ணனின் கதையைச் சொல்லும் ஸ்ரீமத் பாகவதத்தை இயற் றினார். அதன் பின் தான் மனசு சந்தோஷமும் சமாதானமும் நிம்மதியும் அடைந்தது.
4.கண்ணன் எனும் மன்னன் பேரைச் சொல்லுங்கள்
கண்ணனை நினைத்தாலும் வணங்கினாலும், ஏன் ஒரே ஒரு முறை அவன் திருவுருவத்தைப் பார்த்தாலும் நிம்மதி தன்னால் வந்துவிடும். அவன் கதைகளைக் கேட்டால் இன்பம் கிடைக்கும். மங்கலங்கள் தன்னால் சேரும். கண்ணனின் அற்புதத் கருணை அது.
நம்மாழ்வார் “கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர், எண்ணும் திருநாமம் திண்ணம் நாரணமே” என்றார்.இதையே கண்ணதாசன் எளிய தமிழில் ஒரு திரைப்படப்பாடலில்,” கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்லச் சொல்ல, கல்லும் முள்ளும் பூவாய் மாறும் மெல்ல மெல்ல” என்று பாடினார்,
30 எப்படிக் கொண்டாடுவது?
கோகுலாஷ்டமி திருநாளில் கண்ணனை நினைத்து சேவிக்க வேண்டும். கிருஷ்ண ஜெயந்தி அன்று காலை முதல் இரவு வரை பூஜை செய்பவர்களுக்கு, வருடம் முழுக்க ஏகாதசி விரதம் இருந்தால் என்ன பலன் கிடைக்குமோ அந்த பலன் கிடைக்கும்..கண்ணன் நம் வீட்டுக்குள் நுழைவதற்கு அடையாளமாக அவனுடைய திருவடிச் சுவடுகளை வீட்டு வாசலில் இருந்து பூஜை வரை இழை கோலமாகப் போடலாம் .வெண்ணெய், பால், தயிர், நெய், நாகல்பழம், சீடை,முறுக்கு, அவல் போன்ற பொருள்களையும் நிவேதனம் செய்யலாம். குறைந்தபட்சம்
கரார விந்தேன பதார விந்தம் முகார விந்தே விநிவே சயந்தம்
வடஸ்ய பத்ரஸ்ய புடே சயானம் பாலம் முகுந்தம் மனஸா ஸ்மராமி
(தாமரைப் போன்ற கைகளால் தாமரை போன்ற கால்களை முகத்தில் வைத்த வண்ணம் ஆலிலையில் துயில் கொண்டுள்ள பாலனான கண்ணனை நான் தியானம் செய்கின்றேன்”. என்ற ஸ்லோகத்தை நாம் பாராயணம் செய்யலாம். அப்போது கண்ணன் நம் உள்ளத்தில் வந்து குடியேறுவான்.
- வண்ண மாடங்கள் சூழ்திருக் கோட்டியூர்,
கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்
எண்ணெய் சுண்ண மெதிரெதிர் தூவிடக்
கண்ணன் முற்றம் கலந்தள றாயிற்றே. 1
ஆயர்களின் மெய்ப்பாடு
ஓடு வார்விழு வாருகந் தாலிப்பார்
நாடு வார்நம்பி ரானெங்குற் றானென்பார்,
பாடு வார்களும் பல்பறை கொட்டநின்று,
ஆடு வார்களு மாயிற்றாய்ப் பாடியே. 2
பேணிச் சீருடைப் பிள்ளை பிறந்தினில்,
காணத் தாம்புகு வார்புக்குப் போதுவார்
ஆணொப் பாரிவன் நேரில்லை காண், திரு
வோணத் தானுல காளுமென் பார்களே. 3
உறியை முற்றத் துருட்டின்நின் றாடுவார்,
நறுநெய் பால்தயிர் நன்றாகத் தூவுவார்,
செறிமென் கூந்த லவிழத் திளைத்து, எங்கும்
அறிவ ழிந்தன ராய்ப்பாடி யாயரே.
கொண்ட தாளுறி கோலக் கொடுமழு,
தண்டி னர்பறி யோலைச் சயனத்தர்,
விண்டமுல்லை யரும்பன்ன பல்லினர்,
அண்டர் மிண்டிப் புகுந்துநெய் யாடினார். .
பிள்ளை வாயுள் வையம் கண்ட அசோதை
கையும் காலும் நிமிர்த்துக் கடாரநீர்
பைய வாட்டிப் பசுஞ்சிறு மஞ்சளால்,
ஐய நாவழித் தாளுக்கங் காந்திட,
வைய மேழுங்கண் டாள்பிள்ளை வாயுளே.
வாயுள் வையகங் கண்ட மடநல்லார்,
ஆயர் புத்திர னல்ல னருந்தெய்வம்,
பாய சீருடைப் பண்புடைப் பாலகன்,
மாய னென்று மகிழ்ந்தனர் மாதரே. 7
பத்து நாளுங் கடந்த இரண்டாநாள்,
எத்தி சையும் சயமரம் கோடித்து
மத்த மாமலை தாங்கிய மைந்தனை,
உத்தா னஞ்செய் துகந்தன ராயரே.
கிடக்கில் தொட்டில் கிழிய வுதைத்திடும்,
எடுத்துக் கொள்ளில் மருங்கை யிறுத்திடும்,
ஒடுக்கிப் புல்கி லுதரத்தே பாய்ந்திடும்,
மிடுக்கி லாமையால் நான்மெலிந் தேன்நங்காய்
நெந்நெ லார்வயல் சூழ்திருக் கோட்டியூர்,
மன்னு நாரணன் நம்பி பிறந்தமை,
மின்னு நூல்விட்டு சித்தன் விரித்த, இப்
பன்னு பாடல்வல் லார்க்கில்லை பாவமே.
for vedio click
