எது சநாதன தர்மம்?கிருஷ்ணர் தான் சனாதன தர்மம்.இதோ சுலோகம்
யேச வேத விதேஜா விப்ரா
யே சாத் யாத்மவிதோ ஜநா:
தே வதந்தி மஹாத்மாநம்
க்ருஷ்ணம் தர்மம் ஸநாதநம்
(மஹாபாரதம் 3-86-26).
இதன் பொருள்: “வேத மறிந்த அந்தணர்களும் வேதாந்தம்
அறிந்த ஜ்ஞானிகளும் பரமாத்மாவான க்ருஷ்ணனையே
ஸநாதநமான தர்மம் என்று கூறுகிறார்கள்”.
ஆகவே கண்ணனே என்றும் அழியாத தர்மம் ஆகிறான். துரியோதனன் பாதாளத்திற்கு அனுப்பும் நாற்காலியில் கண்ணனை அமர வைத்து, கீழே தள்ளப் பார்த்தான்… பகவான் தன் உண்மையான விஸ்வரூபத்தைக் காட்டினான்.
‘ஸநாதன தர்மம்’ என்ற சொல்லின் பொருள் என்ன? இவற்றை வெறும் திருக்குறள் வைத்தே விளக்கலாம்.
இருந்தாலும் ஸநாதன தர்மம் என்ற பெயர் இன்று இந்துமதம் என்று அழைக்கப்படும் பெயருக்கு பதிலாக முற்காலங்களில் வழங்கப்பட்ட பெயர்தான் என்பதையும் மறுக்க முடியாது.
ஸநாதன தர்மம் என்ற சொல்லாடல் இன்றிலிருந்து 5000 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட ஸ்ரீ மகாபாரதத்தில் உண்டு.
அதோடு 18 புராணங்களில் ஒன்றான சிவபுராணத்திலும் உண்டு.
மகாபாரதத்தில் “ஞான வழியையும் கர்ம வழியையும் காட்டும் வழியாக” கண்ணன் காட்டியதே சநாதன தர்மம் என்ற பொருளில் வருகிறது.
அதாவது,
“யேச வேதவிதோ விப்ரா: யே சாத்த்யாத்ம விதோ ஜநா: I தே வதந்தி மஹாத்மாநம் கிருஷ்ணம் தர்மம் ஸநாதநம் II
– மகாபாரதம் (சாந்தி பர்வம்)
சிவபுராணத்தில் சிவபெருமான் ஜோதி ரூபமாக காட்சியளிக்கும்போது நானே சநாதன தர்மம் என்கிறார்.
அதாவது சிவபெருமான் கூறும் தர்ம நெறிகளே, அற நெறிகளே சநாதன தர்மம் என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது.
அதுபோல மனு ஸ்மிருதியில் உண்மையை பேச வேண்டும்.
உண்மையை மட்டுமே பேச்வேண்டும் என்பதுதான் சநாதன தர்மம் என்ற பொருளில் வருகிறது.
அதாவது மனுதர்மத்தின் நான்காவது அத்தியாயம் 138 ஆவது வசனம் இவ்வாறு கூறுகிறது,
“உண்மையை பேச வேண்டும். அன்பாகப் பேச வேண்டும். தீங்கு விளைவிக்குமாயின் உண்மையையும், அன்பாக இருக்கும்போது பொய்யையும் பேசாதே. இதுவே சநாதன தர்மமாகும்”
– மனுதர்மம் – 4.138.
இப்படி மனுதர்மம், மகாபாரதம், சிவபுராணம் போன்ற நூல்களில் ஸநாதன தர்மம் பற்றிய குறிப்புகள் உள்ளன.
தர்மம் என்ற சமஸ்கிருத சொல்லுக்கு தமிழில் அறம் என்பது பொருள்.
இதைத்தான் கண்ணன் காட்டும் வழியே ஸநாதன தர்மம் (அறம்) என்கிறது மகாபாரதம். சிவபுராணத்தில் நான் காட்டுவதே அறம் என்கிறார் சிவபெருமான்.
மனுஸ்மிருதி உண்மையை பேசுவதையே அறம் என்கிறது.
இத்தகு தொன்மையான அறத்தை திருவள்ளுவர் மிகத்தெளிவாக கூறுகிறார். உதாரணமாக,
“மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற”
– திருக்குறள்.
பொருள் : ஒருவன் தன்மனதில் குற்றம் இல்லாதவானாக இருக்க வேண்டும். அறம் அவ்வளவே:
மனத்தூய்மை இல்லாத மற்றவை ஆரவாரத் தன்மை உடையவை.
“அழுக்கா றவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்ற தறம்”
பொருள் : பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய இந்த நான்கு குற்றங்களுக்கும் இடங்கொடுக்காமல் அவற்றைக் கடித்து ஒழுகுவதே அறமாகும்.
“வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்”
பொருள் : ஒருவன் அறம் செய்ய தவறிய நாள் ஏற்படாதவாறு அறத்தை செய்வானானால் அதுவே அவன் உடலோடு வாழும் நாள் வரும் பிறவி வழியை அடைக்கும் கல்லாகும்.
“சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு”
பொருள் : அறம் சிறப்பையும் அளிக்கும்: செல்வத்தையும் அளிக்கும்: ஆகையால் உயிர்க்கு அத்தகைய அறத்தை விட நன்மையானது வேறு யாது?
இவ்வாறாக திருவள்ளுவர் கூறும் அறமே மகாபாரதத்தில் கண்ணன் கூறும் ஸநாதன தர்மம் என்றும், சிவபுராணத்தில் சிவபெருமான் கூறும் அறமே மனுதர்மம் குறிப்பிடும் சனாதன தர்மம் என்றும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
சநாதனத்தை வேரறுப்போம் என்று கூறும் கும்பல்களுக்கு, சநாதன தர்மம் என்றாலே நிலையானது, தொன்மையான அழிவில்லாத அறம் என்றுதான் பொருள் என்பதை கூறிக்கொண்டு நீங்கள் அதை ஒழிக்க வேண்டுமெனில் அதன் ஆதி எங்குள்ளது என்பதை அறிய வேண்டும்.
அதாவது குறைந்தபட்சம் அதன் தொடக்கம் எங்குள்ளது என்பதை அறிந்தால்தான் முடிவு எது என்பதை அறிந்து சநாதன தர்மத்தை ஒழிக்கவே முடியும்.
சநாதன தர்மம் என்றாலே ஆதி அந்தமில்லாமல் நிலைத்திருக்கும் அறமே ஆகும் என்பதை உணரும்வரை நீங்கள் ஒழித்துக்கொண்டே இருங்கள்.
இந்த முயற்சி நம்மை, நம் பண்பாட்டு கலாச்சாரங்களை சிதைக்க நினைத்து முடியாமல் அயலவர்கள் விழிபிதுங்கிய காலம் முதலே நடந்து வருகிறது.
வேறு ஒரு கோணம்
சனாதான தர்மம் பெண்கள் மேலாடை அணியவிடவில்லை, எல்லோரையும் கோவிலுக்குள் விடவில்லை, பெண்களை படிக்கவிடவில்லை என்றெல்லாம் தன்னிலை விளக்கம் அளித்துள்ளார் அய்யா உதயநிதியார்
சனாதான தர்மம் பெண்கள் மேலாடை அணிய தடை என எக்காலத்திலும் சொல்லவில்லை, இந்துஸ்தானில் பெண்களை, குழந்தைகளை, பசுக்களை, அறிவுடையோரை காக்க வேண்டும் என தனி கொள்கையே இருந்தது, போர்காலத்தில் கூட பெண்கள் மேல் கைவைப்பதில்லை சனாதான தர்ம மரபு
பெண்ணை தெய்வமாக போற்றிய அந்த தர்மம், கோவிலின் அம்மன் சிலைக்கே சேலையிட்டுத்தான் மக்கள் தரிசனத்துக்கு காட்டிற்று, அப்படி பெண்களை போற்றி பாதுகாத்தமதம்
கோவில் சிலைக்கே சேலையிட்ட மதம் அது, அது மேலாடை அணிய தடை சொன்னமதம் அல்ல
மலைவாழ் மக்களின் உடை அலங்காரம் சற்று மாறுபட்டது அது வடகிழக்கு மாகாணமென்றாலும் சரி, மலையாள தேசமென்றாலும் சரி உடைகள் சற்று மாறி சூழலுக்கு ஏற்றபடி வரும் அதற்கும் சனாதான தர்மத்துக்கும் தொடர்பில்லை
பெண்களுக்கு கல்வி மறுத்த மதம் இது அல்ல, அன்றே ஒளவையார் ஆண்டாள் என பெண் கவிஞர்கள் இருந்தார்கள் இன்னும் பல பெண்கள் கவிஞர்களாக இருந்ததை காணமுடிகின்றது
பின்னாளில் பவுத்தம் பெண்களை அடக்கியது , சமணம் பெண்ணுக்கு முக்தியில்லை என ஒதுக்கிவைத்தது இவை எல்லாம் மீறி சனாதனதர்மம் தளைத்தபோது பெண் உரிமை தளிர்த்தது
பின் ஆப்கானிய கொடும்காலங்களில் பெண்கள் பட்டபாடு கொஞ்சமல்ல, ஆப்கானியர் தங்க வேட்டை மட்டுமல்ல அவர்கள் நடத்திய பெண்வேட்டை மிக அதிகம்
கப்பம் கொடுக்கும்போதெல்லாம் சுல்தானுக்கும் அதிகாரிகளுக்கும் இந்து இளம்பெண்ணையும் கொடுக்கும் வழக்கம் இருந்தது, சிவாஜி போன்றோர் வாளேந்த இதுதான் காரணம்
அக்காலத்தில்தான் பெண்களை பாதுகாக்கும் தனி கலாச்சாரம் உருவானது, பொது இடங்களில் பெண்களை அனுமதிக்கா காரணம் அதுதான்
மொகலாயர் ஆட்சி முடிய 1857 ஆண்டு ஆயிற்று அதுவரை தேசம் பெண்களை இப்படித்தான் காத்தது, பின் பிரிட்டிசார் ஆட்சியில் சனாதானம் தன்னை மீட்டெடுத்தபோது பெண்கள் தானே வெளிவந்தார்கள் அதை பாரதியார் போன்றோர், விவகேனாந்தர் போன்றோர் உற்சாகபடுத்தினார்கள்
பெண்களுக்கு சுயம்வரம் என முழு உரிமை கொடுத்த மதம் இந்துமதம், அரச பெண்களுக்கு மட்டும்ல்ல கிராமத்து சாமானிய பெண்களுக்கும் காளையினை அடக்குபவனை பெண் தேர்ந்தெடுக்கட்டும் என முழு உரிமை கொடுத்த மதமும் அதுதான்
அது சீதை, பாஞ்சாலி என பெண்களைத்தான் தன் இதிகாச நாயகிகளாக்கிற்று, கண்ணகியினை இன்றும் வணங்கும்படி மரபாக்க்கி வைத்திருக்கின்றது
பெண்ணை தலையினை மூடாதே, நன்றாக அலங்கரித்து பூச்சூடி நகை அணிந்து முழு உரிமையுடன் ஆலயம் செல் என முழு உரிமை கொடுத்த மதம் அதுதான்
ஆக பெண்களை கற்க கூடாது என்று இந்துமதம் சொல்லவில்லை, மேலாடை அணியாதே எனவும் சொல்லவில்லை
நாயகி தேவி முதல் வேலுநாச்சியார் வரை தேசமெங்கும் எவ்வளவோ பெண் அரசிகளையே கொடுத்த தேசம் இது, மங்கம்ம்மா ருத்த்ரம்மா என ஆதாரம் ஆயிரம்
கல்வி கற்காமல் அதை சாதிக்க முடியுமா? ஆள முடியுமா?
இதோ சுதந்திர இந்தியாவில் இந்து பெண்கள் எவ்வளவோ சாதிக்கின்றார்கள், அதை எல்லம் இந்துமதம் தடுத்ததா மாறாக ஊக்குவித்தது
இதையெல்லாம் திராவிட கழகமோ திமுகவோ செய்யவில்லை, தமிழகத்தில் அதை கிழித்தோம் இதை கிழித்தோம் என்பவர்கள், இதோ ஜனாதிபதி முர்மு இருக்கின்றார், நிர்மலா அம்மையார் இன்னும் இஸ்ரோ விஞ்ஞானிகள் என யார் யாரோ இருக்கின்றார்கள் பெண்களாக இந்து பெண்களாக பெரும் இடத்தில் இருக்கின்றார்கள்
தேசம் முழுக்க இருக்கின்றார்கள், அவர்கள் இந்துக்கள் இல்லையா அவர்களையெல்லாம் திராவிட கும்பல்தான் உருவாக்கிற்ற?
சரி தமிழகத்தில் திராவிட கழகமும் திமுகவும் உருவாக்கிய நல்ல பெண் சாதனையாளர் ஒருவரை காட்டமுடியுமா?
டாக்டர், விஞ்ஞானி, வ்ழக்கறிஞர், பெரும் இடம் பெற்றவர் என ஒரு பெண்ணை திமுக உருவாக்கியதா? இல்லை இப்பொது வரை இல்லை, தமிழகத்தில் பெரும் இடம்பெற்ற பெண்கள் யாரும் சாதனை பெண்கள் யாரும் திமுக பக்கமே சென்றதில்லை
சரி, திமுகவுக்கு ஒரு பெண் தலமையினை நியமிக்க அக்கட்சி தயாரா? முதல்வராக ஒரு பெண்ணை அமர வைப்பார்களா?
ஆலய நுழைவு என்பதை சனாதான தர்மம் ஒருகாலமும் தடுக்கவில்லை, சிற்சில இடங்களில் சில நோய்பரப்பும் சாத்தியமுள்ள தொழிலை செய்தவர்களுக்கு மட்டும் தொழில் காரணமாக அனுமதி மறுக்கபட்டதே அன்றி சாதி ரீதியாக அல்ல
அதையும் காலம் மாறியபின் இந்துக்களே போராடி மாற்றினார்கள் அய்யா வைகுண்டரோ முத்துராமலிங்க தேவரோ இல்லை வைத்தியநாத அய்யரோ எவரோ இந்துக்கள்தான் போராடினார்கள்
இந்துமதம் தன்னை தானே காலத்துக்கு ஏற்றபடி மாற்றிகொள்ளும் இயல்புடையது அது புலி தன் காயத்தை தானே குணப்படுத்துவது போல் தன்னை சரிசெய்து கொள்ளும்
உதயநிதி இன்னும் பிரிட்டிஷ் காலத்திலும் , காங்கிரஸ் கால அரசியலை செய்து கொண்டிருந்தால் நல்லதல்ல
நாடு முழுக்க பெரும் சர்ச்சை கிளம்பும் நேரத்தில், சனாதான தர்மம் ஒழிக்க நடந்த மாநாட்டில் காவி உடையுடன் இந்து அறநிலையதுறை அமைச்சர் சேகர்பாபு நின்றதும் சர்ச்சையாகின்றது
அதாவது அஹிம்சாவாதி ஒன்று சைவ உணவு பக்கம் நிற்க வேண்டும் இல்லை நான் மாமிசபட்சி என கசாப்பு கடைமுன் நிற்க வேண்டும்
நான் வள்ளலார் வழி என சொல்லிவிட்டு ஆட்டுகறி கடைமுன் நிற்பது சரியல்ல
சேகர்பாபு அதைத்தான் செய்கின்றார்
ஒன்று சனாதன தர்மம் ஒழிக்கபட அரசு சட்டம் இயற்றலாம், சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்து சட்டமாக்கலாம், செய்வார்களா, செய்ய துணிவு உண்டா? தைரியம் உண்டா இல்லை
அப்படியே சனாதான தர்மம் வேண்டாம் என்றால் அது இவர்களுக்கு பிடிக்கவில்லை என்றால் இந்து ஆலயங்களை அதன் காணிக்கைகளை அரசு தொடகூடாது
இந்துமதம் வேண்டாம் ஆனால் ஆலயங்களும் காணிக்கையும் வேண்டும் என்பதன் பெயர் கொள்ளை, பகிரங்கமான ஆக்கிரமிப்பு கொள்ளை என்பதாகும்
ஆப்கானியர் கஜினி, கோரி இதை செய்தார்கள், மாலிக்காபூரும் துக்ளக்கும் இதையே செய்தான், பிரிட்டிஷ்காரன் ரகசியமாக செய்தான்
அதையே தமிழக அரசும் செய்யுமானால் சுதந்திரம் வாங்கியதன் அர்த்தம் இல்லாமலே போய்விடும் ஆயிரம் ஆண்டு போராடி நாயக்கர் முதல் கட்டபொம்மன் வரை பாரதிவரை போராடியதில் அர்த்தமே இல்லை
இங்கு போராட்டமே இந்துமத ஆலயங்கள் அன்னியரால் அழிகின்றன என்பதில் தொடங்கி பின் பிரிட்டன் வந்து அவர்களையும் விரட்டி சுதந்திரம் அடைந்ததில் முடிந்தது
அந்த சுதந்திர இந்தியாவிலும் அந்த அவலமே தொடருமானால் அது ஏற்றுகொள்ள கூடியது அல்ல
தேசம் முழுக்க பெரும் எதிர்ப்பு எழும் நேரம் உதயநிதியார் இன்னும் வறட்டு சிந்தாந்தம் பேசுகின்றார், இந்து அறநிலையதுறை அமைச்சர் சத்தமே இல்லை
இதெல்லாம் மகா வன்மையாக கண்டிக்க வேண்டிய விஷயங்கள், திமுகவினர் மனதால் உணர்ந்து திருந்த வேண்டிய விஷயங்கள்
காலம் மாறுவதை உணராத யாரும் நிலைக்க முடியாது, வறட்டு பிடிவாதமும் வீண் கர்வமும் பெரும் வீழ்ச்சியினைத்தான் கொடுக்கும்
