நீங்கள் பார்ப்பது டிஎம்எஸ் ஜாதகம்.அவர் ரிஷப லக்னம் .லக்கினத்திலேயே சந்திரன் .மிருகசீரிஷ நட்சத்திரம். உச்சம் அடைந்திருக்கிறார். லக்னாதிபதி சுக்கிரன் பாக்கியஸ்தானத்தில் இருப்பதும் எட்டுக்குடைய குரு 6ல் அமர்ந்து விபரீத ராஜயோகம் பெறுவதும் சிறப்புக்கள் .பிறக்கும் போது செவ்வாய் திசை நடைபெற்றதால் 12ல் செவ்வாய் இருந்தாலும் கூட இவருக்கு எந்த தார தோஷமும் தரவில்லை.

தன்னுடைய 93 ஆம் வயது வரை தீர்க்காயுளோடு இருக்க காரணம் லக்ன பலம். அம்சத்திலும் ராசியிலும் வர்கோத்தமம் பெற்று வலுவுடன் இருக்கிறது.
லக்னாதிபதி பாக்கியஸ்தானத்தில் இருப்பதால் அவரும் வலுவோடு இருக்கின்றார். அவருக்கு சனி போன்ற கிரகங்களின் பார்வையும் இல்லை. பொதுவாகவே சந்திரன் உச்சமடைந்து அது சுக்கிரனுடைய ராசியாக இருந்து, சுக்கிரனும் எந்த பழுதும் இல்லாமல் பாக்கியஸ்தானத்தில் இருந்தால், அவர்கள் நிச்சயம் கலை துறையில் மிக உச்சம் பெறுவார்கள்.
கேது தொழில் ஸ்தானத்தில் இருக்கின்றார். அவரும் பாட்டுக்கு சொந்தக்காரன். செவ்வாய் ராகு திசை முடிந்து 1947ல் ஆரம்பித்த குரு தசை இவரை தொழில் முறை பாடகராக்கியது.அடுத்து சனி திசை .தர்ம கர்மாதிபதி (9,10)யோகம் பெற்ற சனி திசையில்,1963ல் இருந்து 19 வருடம் அதாவது 1982 வரை திரைத்துறையில் முடி சூடான மன்னராக விளங்கினர்.
அதற்குப் பிறகு இவருடைய செல்வாக்கு குறைய ஆரம்பித்தது. காரணம் புதன் திசை ஆரம்பித்து விட்டது. புதன் நீச்சம் அடைந்து விட்டார். சனி\யாலும் பார்க்கப்படுகின்றார். அவருக்கு இடம் தந்த குருவும் அவருக்கு எட்டிலும் லக்னத்திற்கு ஆறிலும் அமர்த்ததால் தேவையற்ற பகை புகழ் இறக்கம் உடல் நலக்குறைவு இவைகள் எல்லாம் படிப்படியாக உண்டாகத் தொடங்கியது.
1999க்கு பிறகு சர்ப்ப கிரகமான கேது திசை ஆரம்பித்தது. அவர் பத்தாம் இடத்தில் அமர்ந்து மொத்தமாக இவருடைய தொழிலையும் செல்வாக்கையும் கெடுத்தார்.
For more interesting facts click the vedio
