நாந்தி சிராத்தம் என்கிறார்களே? அப்படி என்றால் என்ன?
விருத்தி சம்ஸ்காரம் என்று சொல்வார்கள். இது ஒரு மங்களகரமான கர்மா. ஆனால் இதை தனியாக செய்ய இயலாது. சில குறிப்பிட்ட கர்மாக்களுக்கு அங்கமாகத்தான் இதைச் செய்யச் சொல்லி இருக்கிறார்கள். கர்பாதானம், சீமந்தம், ஜாதகர்மம் நாமகரணம்,விவாகம், கிரகப்பிரவேசம் முதலிய விசேஷங்களில் நான்கு சிராத்தம் செய்யச் சொல்லி இருக்கிறார்கள் மங்களப் பொருளை ஏந்தி கொண்டு சந்ததியினர்களை ஆசீர்வாதம் செய்ய நமது முன்னோர்கள் வருவதால் அவர்களுக்கு நாந்தி முகர்கள் என பெயரிட்டு இருக்கிறார்கள். கோலம் போடுதல் மங்கள அட்சதை எல்லாம் இருக்கும். குடும்ப விருத்திக்காக செய்யப்படும் இதை நன்கு சிரத்தையோடு செய்வது நம்முடைய குடும்பத்திற்கு நல்ல வளர்ச்சியையும் புகழையும் சந்தோஷத் தையும் தரும்.
