Don’t Forget Mahalaya Amavasya 2021 மஹாளயம் மறந்து விட வேண்டாம்
இந்த ஒரு நாள் விட்டால், அப்புறம் ஒரு வருடம் காத்திருக்க வேண்டும். இது செய்யாவிட்டால் பிதுர் தோஷம் வரும் என்பார்கள். தோஷம் என்பது ஒட்டிக் கொண்டிருப்பது. கழித்தே தீர வேண்டியது.
தோஷங்கள் பற்பல உண்டு.
அதில் ஒன்று முன்னோர்கள் வழிபாடு மறந்ததால் வரும் பிதுர்தோஷம் .பிதுர் சாபம் என்றும் சொல்கிறார்கள்.
பிதுர் தோஷம் என்றால் என்ன? What is meant by Pitur Dhosham ?
அம்மா அப்பாவுக்கு சோறு போடவில்லை. அதனால் அவர்கள் பிள்ளைக்கு சாபம் கொடுப்பார்களா என்று கேட்கலாம்.
அவர்கள்,” நீ நன்றாக இருக்க மாட்டாய்” என்று வாயால் சொல்ல மாட்டார்கள். ஆனால், அவர்களைக் கவனிக்காத கொடுமை,அவர்கள் வயிற்றுப் பசி, ஒரு நெருப்பாக மாறி, நம்மை அடையும்.
அது போகவே போகாது.
இந்த தோஷத்தைப் பொருத்தவரை எத்தனை புண்ணியம் செய்தாலும் , தோஷத்தின் கஷ்டத்தை நாம் அனுபவித்தே தீர வேண்டும்.
வேறு தோஷங்களுக்கு இத்தனை கஷ்டங்கள் இல்லை என்பதால் பிதுர் தோஷத்தைக் கண்டு அஞ்சுகிறோம்.
பிதுர் தோஷம் என்றால் ஒருவகை என்று நினைக்கிறோம்.
அது பல வகை உண்டு.

தந்தை வழி முன்னோர்களை கவனிக்காவிட்டால் , அவர்களுக்கு தர்ப்பணம் செய்யாவிட்டால், பித்ரு தோஷம் வரும். தாய் வழி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யாவிட்டால் மாத்ரு தோஷம் வரும். பங்காளிகளுக்கு தர்ப்பணம் செய்யாவிட்டால் ஞாதி தோஷம் வரும். மற்ற உறவு பந்துக்களுக்கு செய்யாவிட்டால் பந்து தோஷம் வரும். பிள்ளைகளுக்குச் செய்ய வேண்டியதைச் சரியாகச் செய்யாவிட்டால் புத்திர தோஷம் வரும்.
யாருடைய பிள்ளைக்கோ நாம் தவறு செய்திருந்தாலும் அது நமக்கு புத்திரதோஷமாக (Pitra Dhosham)வரும்.
இது ராமாயணத்தில் தசரதன் கதையிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.
தசரதன் ஒரு அப்பாவி. பெற்றோர்களின் பிள்ளையைத் தெரியாமல் கொன்று விடுகின்றான்.
“நாங்கள் தவிப்பது போல் நீயும் தவிப்பாய்” என்று சபித்து விடுகிறார்கள்.

அந்த தோஷம் அவனுக்கு வந்து விட்டதை நாம் ராமாயணத்தில் பார்க்கிறோம்.
புத்திரன் இல்லாமல் போவது மட்டும் தோஷம் அல்ல.
பிள்ளை இருந்தும் இல்லாமல் போவது கூட தோஷம்தான். இல்லாமல் போவது என்பது உயிருடன் இல்லாமல் போவது மட்டுமல்ல. உயிருடன் இருந் தாலும் எந்த வகையிலும் பிரயோஜனம் இல்லாமல் இருப்பது.
தசரதனுக்கு புத்திரன் பிறந்து, நேசித்து, பிரிய வேண்டிய ஒரு நிலைமை வந்தது.
“கண்ணிலான் பெற்று இழந்தான்” என்று கம்பர் இந்த புத்திர சோகத்தை பாடுகின்றார்.
எனவே தோஷத்தின் அத்தனை பிரிவுகளும் இந்த மகாளய அமாவாசை நாளில் தர்ப்பணம் செய்ய தீரும் .
ஒவ்வொரு அமாவாசையும் விசேஷம் தான் என்றாலும் அதில் முக்கியமானது உத்தராயணத்தில் வரும் தை அமாவாசை, தட்சிணாயனத்தில் வரும் ஆடி அமாவாசை.
ஆனால், அந்த அமாவாசைகளில் இல்லாத ஒரு சிறப்பு, இந்த மகாளய அமாவாசையில் வருகிறது.
அமாவாசைகளில் உபய வர்க்க பித்ருக்கள் மட்டும் வருவார்கள் .
ஆனால் மஹாளயத்தில் பிதுர் உலகத்திலிருந்து அத்தனை பித்ருக்களும் கூட்டமாக, கல்யாணம் காட்சிகளுக்கு வருவது போல் வருவதால், மிகவும் சிறப்பு.
கல்யாணத்துக்கு உறவும் நட்பும் திரண்டு வருவது போல இதிலும் நமக்கு தெரிந்தவர்கள், பழகியவர்கள், நண்பர்கள், தூரத்து உறவினர்கள் என்று எல்லோரும் வருவார்கள்.
சித்தப்பா, பெரியப்பா வழியில் அவர்கள் பிள்ளைகள் தர்ப்பணம் செய்யலாம். செய்யாமலும் இருக்கலாம். அவர்களும் இந்த காலத்தில் வருவார்கள். இப்படி நேர் பித்ருக்கள் அல்லாதவர்களை காருண்ய பித்ருக்கள் என்று சொல் கிறார்கள்.
இந்த மஹாளய தர்ப்பணம் பொதுவாக செய்வதற்கு என்று சில சிறப்புத் தலங்கள் உண்டு.
நதிக்கரைகளில் செய்வது விசேஷம்.
மகாளய தர்ப்பணம் செய்துவிட்டு அவசியம் சூரியனை நமஸ்காரம் செய்ய வேண்டும்.
அன்று தானம் செய்வது நல்லது.
என்ன முடியுமோ அதைச் செய்யலாம். அரிசி, காய்கறிகள், பணம் இவற்றை “அச்சுதப்பிரியதாம்” என்று சொல்லிக் கொடுங்கள்.
சாப்பிடுவதற்கு முன் பசுவுக்கு அகத்திக்கீரை, பசும்புல், வாழைப்பழம் போன்றவற்றைத் தாருங்கள்.
மறந்தவருக்கு மகாளயம் என்பார்கள்.
முன்னோர்கள் இறந்த திதி தெரியாதவர்களும் மகாளயத்தில் செய்யலாம்.
“எள்ளும் நீரும் விட்டால் தொல்லை இல்லை” என்பார்கள்.
சின்ன வேலை தான். ஆனால் அது தரும் மகிழ்ச்சி எல்லை இல்லாதது. பரமானந்தத்தைத் தரக்கூடியது. அவர்களுடைய ஆசிகளை அள்ளித் தரக் கூடியது. நம்மையும் நம் குடும்பத்தையும் காப்பாற்றுவது.
எள்ளும் நீரும் இறைக்கின்றோம்.
எள் என்பது மிகவும் முக்கியம். அது விஷ்ணு சம்பந்தம் உடையது.
தர்ப்பணம், சிராத்தம் செய்த பிறகு தானம் செய்ய வேண்டும் என்று சாஸ்திரம் சொல்லுகிறது .
கோதானம், பூதானம், ஸ்வர்ணதானம் என்று பல தானங்களைச் சாஸ்திரம் சொல்லுகிறது.
10 வகையான தானங்கள் செய்ய வேண்டும் என்கின்றது.
இது பெரிய பணக்காரர்கள் செய்ய முடியும்.
ஆனால் ஏழைகள் என்ன செய்ய முடியும்?
ஒரு பசு மாட்டை வாங்கி தானம் செய்ய முடியுமா என்று நீங்கள் நினைக்கலாம்.

ஆனால் அவர்களும் இரண்டு ரூபாயில் எள் வாங்கி அதைப் பசு மாடு போல் நினைத்துக் கொண்டு தில பசுவாகச் செய்து தானம் செய்ய, அங்கே வைதரணி நதிக்கரையில், நிஜப் பசு வந்து நிற்கும் என்று கருடபுராணம் சொல்லுகின்றது.
அத்தனை மகிமை வாய்ந்தது என்பதால் தர்ப்பணத்தில் எள்ளையும் நீரையும் நாம் உபயோகப்படுத்துகிறோம்.
முந்தைய யுகங்களில் இந்த பித்ருக்கள் நேரில் வந்து தானம் பெற்றுக் கொள்வார்கள் என்று சாஸ்திரம் சொல்கிறது.
இராமாயணத்தில் இராவண வதம் முடிந்து ராமன் அயோத்திக்கு திரும்பியவுடன் தன்னுடைய தந்தைக்கு சிராத்தம் செய்ய அந்த பிண்டங்களை தசரதன் நேரில் வந்து வாங்கியதாகப் பெரியவர்கள் சொல்வார்கள்.
மகாளய தர்ப்பணம் செய்வதற்கென்றே சில ஊர்கள் உண்டு.
ராமேஸ்வரம், தனுஷ்கோடி, திருவெண்காடு, கோடியக்கரை, வேதாரணியம், திருப்பூவனம், கன்னியாகுமரி, சென்னை மத்திய கைலாஷ், திருக்கழுகுன்றம், திருக்கோகர்ணம், பவானி கூடுதுறை, ஸ்ரீரங்கம், பாபநாசம், பூம்புகார், திருமூர்த்தி அணை, திருவள்ளூர்.
பொதுவாக மறந்தவனுக்கு மகாளயம் என்று சொல்வார்கள்.
எனவே இதற்கு முன்னால் திதி கொடுக்க மறந்தவர்கள், தர்ப்பணம் செய்ய மறந்தவர்கள், சிராத்தம் செய்ய மறந்தவர்கள், இந்த மகாளயத்தை உபயோகப் படுத்திக் கொள்ளலாம்.
எனவே, மறந்துவிட்டால் மகாளயம் என்று சொல்வதால், மகாளய காலத்தை மறந்து விடக்கூடாது.
- அரங்கனைக் கண்டு பெருகும் ஆனந்தக் கண்ணீர்

- தேரழுந்தூர் தேவாதிராஜன் Therazendur Devadhirajan

- கொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்தும் கலி வடிவமா?

- தினமும் எதற்கு திருப்பள்ளி எழுச்சி ? Why Thirupalliyezhuchi Daily ?

- கண்ணதாசனின் கிருஷ்ண பக்தி – Kannadasan – Krishna Bhakthi

- செய்திகள் மற்றும் நிகழ்வுகள் சென்ற ஆண்டு நடந்தவை


