Kashi Tamil Sangamam – IIT Madras (KT Sangamam)
இந்தியாவின் மிகப் புனிதமான ஒரு நகரம் காசி. காசிக்குச் சென்று கடனைக் கழி என்று ஒரு பழமொழி உண்டு. எல்லா பெருமைக்கும் ஒரு மையப் புள்ளியாக காசி நகரம் விளங்கியது.
காசி நகர்ப்புலவர் பேசும் உரை தான் காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம் என்றார் மஹாகவி பாரதி.
காசி Shri Kashi Vishwanath, வாரணாசி,Varanasi, பெனாரஸ் banaras city எனப் பல பெயர்களில் அழைக்கப்படும் காசி வயதானவர்களுக்கு முக்தி அடையும் ஸ்தலமாகவும், யாத்ரிகர்களுக்கு புனித நகரமாகவும், சுற்றுலாப் பயணிகளுக்கு ஆச்சரியங்கள் அளிக்கும் இடமாகவும் பல்வேறு முகங்களை கொண்டது!
காசி’ என்ற சொல்லுக்கு ‘ஒளிரும் நகரம்’ என்று பொருள்படுகிறது.
உலகின் பல பழமையான நகரங்கள் இன்று இல்லை .ஆனால் காசி இரண்டாயிரம் வருடங்களுக்கும் மேலாக அதே பரபரப்புடன் தன் சுயத்தை இழக்காமல் இயங்கி வருகிறது!
காசியில் வீடுகள் தோறும் கோவில்கள் உள்ளது. முன்பெல்லாம் அரசர்கள் காசி யாத்திரை வரும்போது தங்களுக்கென வீடும் அங்கேயே வழி பாட்டிற்கு கோவிலும் கட்டிக்கொள்வார்களாம். யாத்திரை முடிந்ததும் அவைகளை அப்படியே விட்டு விட்டு சென்று விடுவார்களாம்.

அவைகளைதான் இப்பொழுது இங்குள்ள மக்கள் பராமரித்து வருகிறார்கள்.
காசிப் புலவர்கள் காஞ்சிக்கு வருவதும், காஞ்சி புலவர்கள் காசிக்குச் செல்வதும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக உள்ள ஆன்மீக உறவின் வெளிப்பாடு.
அந்த உறவுதான் வடக்கே காசியையும் தெற்கே இராமேஸ்வரத்தையும் இணைக்கிறது. வடக்கே அவதரித்த இராமன் தெற்கே வந்தான்.
தெற்கே அவதரித்த ஆழ்வார்களும் நாயன்மார்களும் வடக்கே சென்று தங்கள் பாடல்களால் பல திருத்தலங்களைப் பிரகாசப்படுத்தினர்.
காசியில் கங்கை. தமிழ்நாட்டில் காவேரி.
எப்பொழுதும் தமிழ்நாட்டுக்கு – குறிப்பாக காவிரிக்கு -ஏற்றம் உண்டு. அதனால் தான் கங்கையின் புனிதமாய காவிரி என்று காவிரியை புகழ்ந்து பாடினர் புலவர்கள்.

எல்லோர் பாவங்களையும் தீர்க்கக்கூடிய கங்கை, தன் பாவத்தைத் தீர்த்துக் கொள்ள காவிரியை நாடுகிறாள் என்று சொன்னால், இது ஏதோ புராணக் கதையை மட்டும் குறிப்பிடுவது அல்ல; பாரதத் திருநாட்டின் மீது உலகத்தவர்கள் வைத்த மதிப்பையும், பாரதத் திருநாட்டில் உள்ள குறிப்பாக வடக்கே உள்ளவர்கள் தமிழ்நாட்டின் மீது வைத்த ஒரு பக்தி மரியாதையும் காட்டுவது.
வைகுந்தத்தில் ஓடும் நதிக்கு விரஜா நதி என்று பெயர். அதற்கு ஈடான நதி காவிரி நதி.
காவேரி விரஜா சேயம் வைகுண்டம் ரங்க மந்திரம்….
ஸ வாசுதேவோ ரங்கேச: பிரத்யக்ஷம் பரம் பதம்…
காவேரியும் கங்கையும் வெறும் ஆறுகள் அல்ல.பாரத மக்களின் உயிர்.
நம்முடைய பாரத நாடு, இந்தக் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டின் கட்டமைப்பில் தான் உலக நாடுகளுக்கு எல்லாம் ஒரு திலகமாக விளங்குகிறது.
அதனால்தான் பாரதி பாடினான்.
பாரத நாடு பாருக்கெல்லாம் திலகம்
நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாகாதீர்
என்றான்.
மானுடத்தின் உன்னதமான விழுமியங்களை பாருக்கு சொன்னது பாரதம். அதனால்தான் கம்பன் மானுடம் வென்றதம்மா என்று பாடினார்.
மனிதன் வென்றான் என்று பாடவில்லை .
மாநுடம் என்கின்ற வார்த்தை அற்புதமான வார்த்தை.
யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவது அன்றே,
வாழ்தல் இனிதென மகிழ்ந்தன்றும் இலமே
முனிவின் இன்னா தென்றலும் இலமே
மின்னொடு வானம் தண்துளி தலைஇ யானாது
கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறை வழிப் படூஉம் என்பது
திறவோர் காட்சியில் தெளிந்தனம்
ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே
இஃதன்றோ மானுடத்தின் மகத்துவம்.

இந்த ஒரு பாட்டிலே உலகத்தினுடைய உன்னதமான அமைதியும் அழகும் அன்பும் அறிவும் இணைந்து இருக்கின்றது .
வடக்கே காசி. தெற்கே காஞ்சி.
ஒரு காலத்தில் கல்வியாளர்களின் சரணாலயமாக இருந்தது இந்த நகரங்கள்.
அன்றைய கல்வி வாழ்வின் உன்னதங்களையும் பண்பாடுகளையும் கலை களையும் சொல்லித் தந்தது. அது எல்லா மக்களுக்கும் பயன்பட வேண்டும் என்கின்ற கருத்தை சொன்னது.
இதைத் தான் பாரதி தெரிவிக்கின்றான்.
வல்லமை தாராயோ இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே
இந்த ஒரு கருத்துத்தான் உலகத்தில் உள்ள மற்ற நாடுகள் நம்மை வியப்போடு பார்க்கும்படியாக செய்தது.
நாம் வளமையை நாடி உலகநாடுகளுக்குச் செல்கிறோம். ஆனால் வளமையான அவர்கள் அமைதியைத் தேடி பாரதத்திற்குத் தான் வந்தார்கள்..வருகிறார்கள்.
பாரத நாட்டினுடைய பண்பாட்டின் முக்கியப் புள்ளிகளில் ஒன்றாக விளங்குவது தான் காசி நகரம்.

தமிழ் கற்ற ஆன்றோர்கள் காசிக்குச் சென்று ஒரு காலத்தில் தமிழின் சிறப்பை நிலைநாட்டினார். அங்கே இருந்த கலைகளைக் கற்றுக் கொண்டு இங்கே வந்து சேர்த்தார்கள்.
மொழி வெறியையும் இன வெறியையும் தாண்டி சகோதர அன்பின் உச்சத்தை காட்டிய உன்னத கல்விமுறை காட்சியையும் காஞ்சியையும் இணைத்தது .வடமொழியையும் தென்மொழியையும் சேர்த்தது
அந்த மேன்மையை மறுபடியும் உணர்ந்து கொள்ளவே காசியில் ஒரு சந்திப்பு இந்த நூற்றாண்டின் பண்பாட்டு கலாச்சார மேலெழுச்சி செயலுக் கான ஒரு அடிப்படை.
இந்த நிகழ்ச்சியை நாம் அரசியல் மாற்றங்களுக்கு அப்பால் இருந்து சிந்தித்து நிறைவு கொள்ளலாம்.
- வாலாஜாபேட்டை ஸ்ரீமத். வெங்கட்ரமண பாகவதர் அவர்களின் 245 வது ஜெயந்தி இசை விழா

- திருச்சித்ரகூட ராமாயணம் தமிழில் பதம் பிரித்து

- ஸ்ரீமாந் வேங்கட ரமண பாகவதரின் 244வது ஜெயந்தி விழா – புவனகிரி

- மதுரகவி சுவாமிகள் – Madhurakavi Swamigal – Srirangam

- புவனகிரி அழகிய மணவாள ஏகாங்கி சுவாமிகளின் ஜெயந்தி விழா

- நமக்கான நல்ல நேரம் நாம் ஏன் அமைத்துக்கொள்ளக்கூடாது?(Dec 3,2022)

