ஐப்பசி மாதத்தின் பூரணமான பலன் கிடைக்க எளிய வழி!
Easy Method to Perform Thula Snanam with Mantra – Procedures in Tamil
ஐப்பசி மாதம் பிறந்து விட்டது. அந்த காலத்தில் ஒவ்வொரு மாதத்தின் சிறப்பு குறித்து, ஒரு பாட்டு எழுதினார் கவியரசு கண்ணதாசன்(Kannadhasan). குன்னக்குடி வைத்தியநாதன் இசையமைத்தார். மாதம்தோறும் வானொலியில் அந்த பாட்டு ஒளிபரப்பினார்கள். வானொலி மட்டும் இருந்த காலம் அது.
ஐப்பசி மாதத்திற்கு ஒரு பாட்டு எழுதினார்.பல்லவி இது தான்.
“அம்மா பசி என்று அழுத குழந்தைக்கு ஐப்பசி பிறந்ததம்மா” என்று அந்தப் பாட்டு துவங்கும்.
இந்த ஐப்பசி பௌர்ணமியில் தான் சிவன் கோயில்களில் அன்னாபிஷேகம் நடைபெறும். உலக உயிர்களுக்கு உணவு அளிக்கும் இறைவனை அதே உணவினால் அபிஷேகம் செய்கிறோம்.
எது பிரம்மம் என்ற கேள்விக்கு முதல் நிலையில் அன்னம் தான் பிரம்மம் என்கிறது உபநிஷத். அப்புறம் மேலே மேலே போகிறது .

பகவான் உயிர்களைப் படைப்பதற்கு முன்,மற்ற வசதிகள் செய்து விட்டுத்தான் உயிர்களைப் படைத்தான்.
எந்த உயிரையும் பட்டினி போட்டு விடுவதில்லை இறைவன்.
அதனால்தான் பசியோடு இருப்பவர்கள் அருகிருக்கும் போது, “உனக்கு உணவு இருந்தாலும் சாப்பிடாதே. கொடுத்து விட்டு சாப்பிடு” என்று சொன்னார்கள் பெரியவர்கள்.
” கல்லினுள் தேரைக்கும் கருப்பை உயிர்க்கும் புல்லுணவே தந்து போற்றும் தயாபரன்” என்பது பாட்டு.
அந்த அன்னாபிஷேக ஐப்பசியில் சூரியன் துலா ராசியில் பிரவேசிக்கிறார். மழைக்காலம் இல்லையா ?
எனவே மேகம் அடிக்கடி சூரியனை மறைக்கும். வெளிச்சம் சரியாக வராது. வந்தாலும் கடுமை இருக்காது .
இதைத்தான் சூரிய பலவீனம் என்று மறைமுகமாக ஜோதிட சாஸ்திரத்தில் சொன்னார்கள்.
நாளை அசோகா திரி ராத்திரி விரதம்.
திங்கட்கிழமை .
பிரதோஷம் .
சோம பிரதோஷம் என்பார்கள். பூரட்டாதி நட்சத்திரம் என்பதால் வியாழ பகவானுக்கு உரிய நாள் .
துலஸ்நானம் ஆரம்பமாகிவிட்டது.
முடிந்தவர்கள் இன்று மாயவரம் சென்று காவேரி கட்டத்தில் காலை நேரத்தில் சங்கல்பம் செய்துகொண்டு தீர்த்தமாடி பரிமள ரங்கநாதரையும் மயூர நாதரையும் சேவித்து வரலாம்.
ஆனால் உலகத்தின் பல பகுதிகளில் இருக்கும் நமது நேயர்களுக்கு எளிய வழி. நாளை முதல் முப்பது நாட்களும், காலை பல் துலக்கிய பிறகு, 3 நிமிடம் வெளியே வந்து, மாடி இருந்தால் மொட்டை மாடிக்கு வந்து, சூரியனை தரிசனம் செய்யுங்கள். ஆத்மபலம் அதிகரிக்க வேண்டும்.மனக்குழப்பங்கள் நீங்க வேண்டும். தெளிவு பிறக்க வேண்டும். அதற்கு உரிய மந்திரங்கள் உண்டு.
Mantra to be Chanted During Snanam (Bath)
ஓம் ஹ்ராம் மித்ராய நமஹ ஓம் ஹ்ரீம் ரவியே நமஹ ஓம் ஹ்ரூம் சூர்யாய நமஹ ஓம் ஹ்ரைம் பானவே நமஹ ஓம் ஹ்ரௌம் கசாய நமஹ ஓம் ஹ்ரஹ பூஷ்ண நமஹ ஓம் ஹ்ராம் ஹிரண்ய கர்ப்பாய நமஹ ஓம் ஹ்ரீம் மரீசயே நமஹ ஓம் ஹ்ரூம் ஆதித்யாய நமஹ ஓம் ஹ்ரைம் ஸவித்ரே நமஹ ஓம் ஹ்ரௌம் அர்க்காய நமஹ ஓம் ஹரஹ பாஸ்கராய நமஹ
ஓம் மித்ராய , ரவயே ,சூர்யாய , பானவே ,கோடி பிரகாசாய, ககாய , பூஷ்ணே ,ஹிரண்ய கர்ப்பாய ஆதித்யாய ஸவித்ரே,அர்க்காய பாஸ்கராய நமோ நம:
அதற்கு பிறகு ஸ்நானம் செய்வதற்கு முன் காவிரித் தாயைபிரார்த்தனை செய்து , கீழ்க்கண்ட மந்திரத்தை ஜெபித்து, தண்ணீரை உள்ளங்கையால் தொட்டு வணங்கி தெளித்துக்கொண்டு ஸ்னாநம் செய்யுங்கள்.
ஐப்பசி மாதத்தின் பூரணமான பலன் கிடைக்கும். பஞ்சபூதங்களில் நீர் பிரதான இடத்தை வகிக்கிறது. ‘நீரின்றி அமையாது உலகு’ என்பது பெரியோர்கள் வாக்கு. நீரானது அகம் – புறம் இரண்டையும் சுத்தப்படுத்துகிறது. அது மட்டுமல்ல, நம் (முன்வினை) கர்மாவை குறைப்பதிலும் நீருக்கு நிகரானது வேறெதுவும் இல்லை.
நம் உடம்பிலும் நீரே அதிகளவில் இடம்பெற்றுள்ளது. இன்றைக்கும் சில பிரச்னைகளுக்கு பரிகாரம் சொல்கிறவர்கள் சமுத்திர ஸ்நானம், புஷ்கரணி தீர்த்த ஸ்நானம், நதி ஸ்நானம் செய்யச் சொல்கிறார்கள். காரணம், இங் கெல்லாம் இந்த புண்ணிய நீர்நிலைகளில் குளிப்பதால் நம் கர்மா குறையும் என்பது நம்பிக்கை. பொதுவாக எல்லோரும் தினமும் குளிக்கும்போது,
கங்கேச யமுனேசைவ கோதாவரி சரஸ்வதீ!
நர்மதே சிந்து காவேரி ஜலேஸ்மின் சந்நிதிம் குரு!!
गंगा च यमुने चैव गोदावरी सरस्वती |
नर्मदे सिंधु कावेरी जलेस्मिन संनिधिम कुरु ||
Gange Cha Yamune Chaiva Godavari Saraswati
Narmade Sindhu Kaveri Jalesmin Sannidhim Kuru.
என்று சொல்லிவிட்டு குளித்தால், சப்த நதிகளும் நமது நீராடும் பாத்திரத்தில் எழுந்தருளிவிடும் என்பது நம்பிக்கை.

கங்கையில் புனிதமாய காவிரி நடுவு பாட்டு,
பொங்குநீர் பரந்து பாயும் பூம்பொழில் அரங்கம் தன்னுள்,
எங்கள் மால் இறைவன் ஈசன் கிடந்ததோர் கிடக்கை கண்டும்,
எங்ஙனம் மறந்து வாழ்கேன் ஏழையேன் ஏழையேனே. (திருமாலை 23)
Gangaiyil punidhamaaya Kaaviri naduvu paatu,
pongu neer parandhu paayum, poom pozhil Arangam thannul,
engal Maal, Iraivan, Easan kidandhadhor, kidakai kandum,
enganam marandhu vaazhgen ezhaiyen ezhaiyene (Thirumaalai 23)
- அரங்கனைக் கண்டு பெருகும் ஆனந்தக் கண்ணீர்

- தேரழுந்தூர் தேவாதிராஜன் Therazendur Devadhirajan

- கொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்தும் கலி வடிவமா?

- தினமும் எதற்கு திருப்பள்ளி எழுச்சி ? Why Thirupalliyezhuchi Daily ?

- கண்ணதாசனின் கிருஷ்ண பக்தி – Kannadasan – Krishna Bhakthi

- செய்திகள் மற்றும் நிகழ்வுகள் சென்ற ஆண்டு நடந்தவை

