கீழே அற்புதமான ஜோதிட முத்துக்களை நமது வாசகர்களுக்காக வழங்கியிருக்கிறோம் இவற்றை தெரிந்து கொண்டு சரிவரப் பயன்படுத்தினால் துல்லியமாக ஜாதகத்தை நீங்கள் எடைபோட முடியும்
1.திருமண பொருத்ததில் ரஜ்ஜு பொருத்தம் பார்ப்பார்கள் ஆனால் ஒரே ரஜ்ஜு என்று நிராகரித்து விடுவார்கள் ரஜ்ஜு பொருத்தம் தவிர மற்ற பொருத்தங் களையும் பார்த்துத் தான் ஒரு முடிவுக்கு வர வேண்டும். ஏக நட்சத்திரம் உள்ளவர்கள் ஒரே ரஜ்ஜீவில் இருந்தாலும் நன்றாக வாழ்ந்து கொண்டிருக் கிறார்கள். ஆரோகண அவரோகண ரஜ்ஜு இருந்தால் மற்ற பொருத்தங்களைப் பார்த்து நீங்களே ஒரு முடிவுக்கு வரலாம்
2.லக்னாதிபதி வலு குறைவது சரியல்ல .ஆனால் அதைவிட முக்கியம் ஆறாம் எட்டாம் அதிபதி லக்னாதிபதியை விட வலுவடைந்து விடக்கூடாது ,அப்படி தான் அவர்கள் வலுவடைந்து விட்டால் மிகப்பெரிய துன்பங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும் .
3.தசாபுக்தி சரியில்லாத போது மிக முக்கியமாக கவனிக்க வேண்டும். நன்மையான கோசாரம் ஓரளவு தசாபுத்தியின் தீமைகளைத் தடுக்கும் ஆற்றல் வாய்ந்தது தான் .ஆனால் தசா புத்தியும் சரி இல்லை கோசாரமும் சரி இல்லை என்றால் கஷ்டம்.அதே நேரத்தில் ஏழரைச் சனி அஷ்டமச் சனி முதலிய அமைப்புகள் இருந்தால் அது இன்னும் அதிக கடினமான காலம் தான் என்ற முடிவுக்கு வர வேண்டும்.
- குடும்ப உறுப்பினர்கள் எல்லோருக்கும் ஏக காலத்தில் ஒரே மாதிரியான தசாபுத்திகளும் அல்லது அஷ்டம சனியோ ஏழரைச் சனியோ நடக்கக் கூடாது. குறிப்பாக குடும்ப தலைவருக்கு இந்த அமைப்பு இருக்கக் கூடாது.
5..களத்திரகாரகன் பார்க்கின்ற பொழுது அல்லது களத்திர ஸ்தானாதிபதி பார்க்கின்ற பொழுது அவனை விட 11 க்கு உரியவன் வலுவடையக்கூடாது. அப்படி வந்து விட்டால் அவர்களுக்கு சற்று தாமதித்து அல்லது அந்த தசை முடிந்த பிறகு திருமணம் செய்வது நல்லது .முன்கூட்டியே திருமணம் செய்தால் பதினொன்றாம் பாவம் வேலை செய்து அவர்களுக்கு இரண்டு தாரத்தை தரக் கூடிய வாய்ப்பும் உண்டு என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
- ஒரு ஜாதகத்தில் சுகம் கொடுக்கக்கூடிய சுக்கிரனும் கெட்டு குழந்தையை தரக்கூடிய குருவும் கெட்டு 5-ஆம் இடம் 7-ஆம் இடம் பாதிப்பு இருந்தால் தார தோஷத்தையும் திருமண தடைகளையும் தரும் என்பதை அறிந்து கொள்ளவேண்டும்.
- குடும்பஸ்தானம் (2)சுகஸ்தானம்(4) சயன ஸ்தானம்(12) பலம் பெற்றிருக்க வேண்டும். இல்லாவிட்டால் இம்மாதிரி ஜாதகங்களுக்கு திருமணம் செய்யும் பொழுது தடைகள் வரும். நட்சத்திரப் பொருத்தம் (10 பொருத்தங்கள்)என்பதை ஒரு அளவுக்கு மட்டும்தான் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும். காரணம், இந்த தசவித பொருத்தம் என்பது மேம்போக்கான பொருத்தம் தான்.
8.லக்னத்துக்கு லக்னம், ராசிக்கு ராசி, ஏழாம் அதிபதிக்கு ஏழாம் அதிபதி முதலிய பொருத்தங்களைப் பார்க்க வேண்டும் .மிக முக்கியமாக உயிர் பொருத்தம் முக்கியம்.
- தசா சந்தி ஏன் கூடாது என்று சொன்னால் அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. துன்பங்களும் இன்பங்களும் ஒரே மாதிரியாக வரும். அப்படி வருகின்ற பொழுது இருவருமே அதைச் சந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். இருவருக்கும் வேலை போவது, ஒரே நேரத்தில் இருவருக்கும் நோய் ஏற்படுவது, இப்படி நடக்கின்ற போது, ஒருவர் மற்றவர்களை தாங்க முடியாது என்பதால் மொத்த துன்பமும் தாங்கமுடியாத துன்பமாக இருக்கும் என்பதால் தசா சந்தியை முடிந்த அளவு தவிர்க்கிறார்கள்.சுப தசா சந்திகள் அடுத்தடுத்து வந்தால் இருக்கலாம்.
- ஒருவருக்கு ராகு தவறான இடத்தில் இருந்து ராகுவின் தசை அல்லது ராகு சாரத்தில் நின்ற கிரகத்தின் தசை நடக்கும் போது அவர்களுக்கு அமானுஷ்யம் என்கின்ற சில விஷயங்கள் நடக்கும். இல்லை அவர்களே தங்களுக்கு தாங்களே பேசிக்கொள்வார்கள். உலகத்தோடு சேராத ஒரு தனி விதமான நடவடிக்கை, ரகசியமாக போய் வழிபடுவது, இப்படி பல விஷயங்களைச் செய்வார்கள்.
- சில கிரகங்களுக்கு இரண்டு ஆதிபத்தியங்கள் உண்டு. உதாரணமாக ரிஷப லக்னத்திற்கு சுக்கிரன் 1, 6 ஆதிபத்தியம் உடையவன்.அவருடைய தசா 20 வருடம் நடக்கிறது என்று சொன்னால் முதல்பாதி 6க்கு உரிய பலனைத் தருவார். அடுத்த பாதியில் 1ஆம் இடத்துக்குரிய பலனை தருவார் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
- லக்னத்தில் செவ்வாய் அமர்ந்தாலும் அல்லது அந்த செவ்வாயை சனி ராகு கேது முதலிய தீய கோள்கள் பார்த்தாலும் மனக்கட்டுப்பாடு இருக்காது.
13.நீச்சம் பெற்ற கிரகம் நீசம் அடைந்தால் மட்டும் போதாது அது நீச விஷயங்களை கொஞ்சம் கட்டுப்படுத்துமே தவிர வேறு வேலை செய்யாது.நீசம் நீங்கியது என்று மட்டும்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். நீசபங்கம் யோகமாகச் செயல்படவேண்டும் என்று சொன்னால் அந்த கிரகம் உச்சம் பெற்ற கிரகத்தையும் தொட வேண்டும். அப்பொழுதுதான் ராஜயோகம் வேலை செய்யும்.
