இந்த ஆண்டு மார்கழி மாதத்திற்கு 30 நாள்கள் . இன்று சனிக்கிழமை. நிலையான நாள். சப்தமி திதியும் அஷ்டமி திதியும் கலந்த அற்புதமான நாள். நாளை சூரியன் வடக்கு முகமாகத் திரும்பி மகர ராசியில் நுழைகின்ற நாள். இந்த நாளில், கடந்த ஆண்டுக்கு நன்றி பாராட்,டி வரும் ஆண்டை வரவேற்கிறோம்.அதற்கானப் பண்டிகை தான் போகிப் பண்டிகை.
சென்ற ஆண்டில் நமக்கு நடந்த நல்லவை எல்லாம் இந்த ஆண்டிலும் தொடர வேண்டும். சென்ற ஆண்டில் நமக்கு நடந்த துன்பமான நிகழ்வுகள் ஏதேனும் இருந்தால் அந்த நிகழ்வுகள் இனித் தொடராமல் இருக்க வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கக்கூடிய அற்புதமான பண்டிகை தான் போகிப் பண்டிகை.
அந்தக் காலத்தில் இதை மிக விமர்சையாக, கிராமங்களில் கொண்டாடுவார்கள். எளிமையான குடிசையாக இருந்தாலும் கூட, மண் சுவருக்கும் சுண்ணாம்பு பூசி, செங்காய் மட்டைகள் பட்டை அடித்து, மாவிலை தோரணங்களால் நிலை வாசலை அலங்கரித்து, சாணம் தெளித்து ,கோலமிட்டு, நடுவிலே மஞ்சள் பூசணியை வைக்கக்கூடிய ரம்யமான காட்சிகளை நாம் ஒரு காலத்தில் நிறையப் பார்த்தோம்,
அது விட்ட குறை தொட்ட குறையாக இருந்தாலும் கூட போகிப் பண்டிகை இன்றும் கிராமத்தில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பதைச் சொல்லுகின்ற அற்புதமான பண்டிகை தான் போகிப் பண்டிகை.
பொங்கல் பண்டிகைக்கு முதல் நாள் தட்சிணாயன காலத்தின் நிறைவு நாள் கொண்டாடப்படும் பண்டிகை போகி பண்டிகை. “போகி” என்பது இந்திரனின் பெயர். இந்த நாள் ‘பழையன கழித்து, புதியன புகவிடும்’ நாளாகக் கருதப்படுகிறது. பழையவற்றையும், பயனற்றவையும் விட் டெறியும் நாளாகக் கருதப்படுகிறது. பழந்துயரங்களை அழித்துப் போக்கும் இப்பண்டிகையைப் “போக்கி’ என்றனர். அந்தச் சொல் நாளடைவில் மருவி “போகி’ என்றாகிவிட்டது. அக்கால வழக்கப்படி ஆண்டின் கடைசிநாள் என்பதால் நடந்து முடிந்த நல் நிகழ்வுகளுக்கு நன்றி கூறும் நாள் போகி என்போரும் உண்டு.
கண்ணபிரான் அவதார காலத்தில் மழை வேண்டி இந்திரனுக்கு பூஜை செய்ய வேண்டும் என்று ஆயர்பாடியில் அனைவரும் விரும்பினார்கள். அப்போது கண்ணன், “சூரியன், இந்திரன் ,வாயு முதலிய அனைத்து தேவர் களும் ஸ்ரீமந்நாராயணனுக்குக் கட்டுப்பட்டவர்கள். எனவே இந்திரனுக்கு பூஜை செய்வதை விட, நமக்கு மழையைத் தருவதும், பசுக்களுக்கு நல்ல தழைகளைத் தருவதுமாகிய இந்த மலைக்கு பூஜை போடலாம்” என்று சொன்னான். கோவர்த்தனகிரியாகிய மலைக்கு பூஜை செய்ய, கோபம் கொண்ட இந்திரன், கடுமையான மழை பொழிய, தன்னை நம்பிய ஆயர் களையும் பசுக்களையும் காப்பதற்காக கோவர்த்தனகிரியை குடையாய் பிடிக்கிறான் என்பது பாகவத புராணம் .கண்ணனுடைய பெரு மைகளை உணர்ந்த இந்திரன், இறுதியாக கண்ணனிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு, கோவிந்தராஜ பட்டாபிஷேகம் செய்கின்றான்.எனவே போகிப் பண்டிகை என்பது கோவிந்த பட்டாபிஷேக நாள் என்று வைணவ ஆலயங் களில் கொண்டாடப்படுகிறது.குறிப்பாக சிதம் பரத்தில் உள்ள ஆலயத்தில் அன்று கோவிந்தராஜப்பெருமாளுக்கு பட்டாபிஷேகம் செய்யப் படுகிறது.
மார்கழி மாதத்தில் நிறைவு நாளான போகிப்பண்டிகை அன்று கண்ணன் ஆண்டாளுக்கு காட்சியளித்தான். ஆண்டாள் விரும்பிய வண்ணம் அவளைத் திருமணம் செய்து கொண்டான் . எனவே ஆண்டாள் திருக் கல் யாண நாளாக போகிப்பண்டிகை இப்பொழுதும் பல வைணவ ஆலயங் களில் கொண்டாடப்படுகிறது.
போகிப்பண்டிகை அன்று அதிகாலை நீராடி பல்வேறு காய்கறிகள் சமைக் கப்பட்ட உணவை பகவானுக்கு நிவேதனம் செய்ய வேண்டும். போகி அன்று, வைகறையில் ‘நிலைப்பொங்கல்’ வைக்கப்படும்.. வீட்டின் முன் வாயில் நிலைக்குப் மஞ்சள் பூசி, திலகமிட்டு, தோகை விரிந்த கரும் பொன்றைச் சாத்தி நிற்கச் செய்து வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு, குங் குமம் வைத்து, தேங்காய் உடைத்து, கற்பூரம் காட்டி வணங்குவர்.
அன்று போளி, வடை, பாயசம், மொச்சை, சிறுதானியங்கள், பருப்பு வகை கள் போன்றவை இறைவனுக்கு படைக்கப்படும்.பிறகு அனைவரும் உண்டு களிக்க வேண்டும்.
