
20.3.24 புதன் ஏகாதசி
அமலாகி என்றால் நெல்லிக்காய். பத்ம புராணத்தின் படி, நெல்லிக்காய் மரம் விஷ்ணுவுக்கு உரியது . இந்த மரத்தில் ஸ்ரீ ஹரியும் லட்சுமி தேவியும் வசிக்கிறார்கள் . இதன் காரணமாக அமலகி ஏகாதசி நாளில், விஷ்ணுவை அம்லா (நெல்லி)மரத்தடியில் அமர்ந்து வழிபடுகின்றனர். பங்குனி மாதத்தின் வளர்பிறை ஏகாதசி அமலாகி ஏகாதசி என்று அழைக் கப்படுகிறது. இது ஆம்லா ஏகாதசி என்றும் ரங்பர்னி ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது. மார்ச் 20, 2024 புதன்கிழமை அமலாகி ஏகாதசி .ஏகாதசி திதி ஆரம்பம் – மார்ச் 20, 2024 மதியம் 12:21 மணிக்கு ஏகாதசி திதி முடி வடைகிறது அமலாகி ஏகாதசி அன்று விரதம் அனுசரித்து, அனைத்து பகவான் ஸ்ரீமன் நாரயணனை வணங்குவதன் மூலம் , அனைத்து பாவங்களிலிருந்தும் விமோசனம் கிடைக்கும்.. ஏகாதசி அன்று விரதம் இருப்பது லையான பலனைத் தரும். மகாபாரதத்தில், கிருஷ்ணர் யுதிஷ்டிரருக்கு ஏகாதசி விரதத்தின் முக்கியத்துவத்தை விளக்குகிறார். இன்று விரதம் இருந்து நாளை துவாதசி பாரணை செய்வோம்.
for details see the vedio